உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ரூ.1 லட்சம் செலவு செய்தால் ரூ.20 லட்சத்திற்கு நகைகள் பறிக்க இலக்கு: ஈரானிய கொள்ளையன் வாக்குமூலம்

ரூ.1 லட்சம் செலவு செய்தால் ரூ.20 லட்சத்திற்கு நகைகள் பறிக்க இலக்கு: ஈரானிய கொள்ளையன் வாக்குமூலம்

சென்னை: 'ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்தால், 20 லட்சம் ரூபாய்க்கு, நகை, பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம்' என, செயின் பறிப்பு ஈரானிய கொள்ளையன் சல்மான் உசேன் வாக்குமூலம் அளித்துள்ளார்.சென்னையில் ஆறு பெண்களிடம், 27 சவரன் நகைகளை பறித்த, 23 - 28 வயதுடைய ஈரானிய கொள்ளையர் மூன்று பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஜாபர் குலாம் உசேன், 28 என்பவர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்ற இருவரிடம் விசாரணை நடக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9kpgnsg2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அவர்களில், சல்மான் உசேன் என்பவர் அளித்துள்ள வாக்குமூலம்:

எங்களின் பூர்வீகம் ஈரான். அங்கிருந்து, எங்களின் தாத்தாக்கள், மஹாராஷ்டிர மாநிலம் அம்புவேலி பகுதியில் அகதிகளாக குடியேறினர். நாங்கள் ஷியா முஸ்லிம்கள். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வசித்து வருகிறோம். நாங்கள் ஐந்து குழுக்களாக பிரிந்து, நகை, பணத்தை கொள்ளையடித்து சொந்த ஊருக்கு திரும்புவோம். எங்கள் குழுவில், 20 பேர் உள்ளனர். ஒரு குழுவில் மூன்று தலைவர்கள் இருப்பர். ஒருவர் போலீசாரிடம் சிக்கிக் கொண்டாலும், மற்ற இருவர் எங்களை வழிநடத்துவர்.நான், ம.பி.,யில் வசிக்கிறேன். உ.பி., உள்ளிட்ட பல மாநிலங்களில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளேன். என் மீது, 45 வழக்குகள் உள்ளன. கடந்த, 2022 நவம்பரில் கைதாகி, உ.பி., மாநிலம், லக்னோ சிறையில் அடைக்கப்பட்டு, அதே ஆண்டில் ஜாமினில் வெளியே வந்தேன். அதிகாலையில் வயதான பெண்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால், அவர்களை குறி வைத்தே செயின் பறிப்பில் ஈடுபட முடிவு செய்தோம். எங்களுக்கு விமானத்தில் தப்பிச் செல்லும் பழக்கம் இருப்பதால், செயின் பறிப்புக்கு ஏற்ற இடமாக, சென்னையை தேர்வு செய்தோம்.நான் ஒருநாள் முன்னதாகவே சென்னைக்கு வந்து விட்டேன். சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி என, பல இடங்களுக்கு சென்று நோட்டமிட்டேன். அந்த இடங்களுக்கான, 'லொகேஷன்'களை, என்னுடன் கைதான, ஜாபர் குலாம் உசேன், மிசாம் அம்ஜித்துக்கும் அனுப்பினேன்.செயின் பறிப்பில் ஈடுபடுவதற்காகவே, ஆறு மாதங்களுக்கு முன், 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தை வாங்கினோம். எங்கள் கொள்ளை கும்பலில், நகைகளை உருக்கி விற்பனை செய்ய, ஒரு குழு செயல்படுகிறது. அந்த குழுவிடம் ஒப்படைத்து விட்டால், நகையை எடை போட்டு உருக்குவதற்கு முன்னதாகவே, எங்களுக்கு பணத்தைக் கொடுத்து விடுவர். போலீசாரிடம் சிக்கிக் கொண்டால், எங்களை ஜாமினில் வெளியே எடுக்கவும் ஒரு குழு உள்ளது. அதில், வழக்கறிஞர்களும் உள்ளனர்.ஒருமுறை கொள்ளையில் ஈடுபட, ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்தால், 20 லட்சம் ரூபாய்க்கு நகை, பணம் கொள்ளையடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம். மிசாம் அம்ஜித்திற்கு, ஆறு மாதங்களுக்கு முன்தான் திருமணம் நடந்தது. கொள்ளையில் ஈடுபட செல்கிறோம் என்றதும், அவரின் மனைவி, உணவு தயாரித்து, 'டிபன் பாக்சில்' கொடுத்து அனுப்பினார்.சுட்டுக் கொல்லப்பட்ட ஜாபர் குலாம் உசேன் மீது, பல மாநிலங்களில், 150 வழக்குகள் உள்ளன. அவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. ஜாபர், மிசாம் ஆகியோரின் மனைவியர் நெருங்கிய உறவினர். எங்களுக்காக மஹாராஷ்டிராவில், எம்.சி.ஓ.சி.ஏ., எனப்படும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டு சட்டம் இயற்றப்பட்டது. சில மாதங்களுக்கு முன்தான், இச்சட்டத்தில் ஜாபர் குலாம் உசேன் கைதாகி ஜாமினில் வெளியே வந்தார். அவரின் தந்தை குலாம் மீதும், 50க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளன.மிசாம் அம்ஜித் சகோதரர் அப்பாஸ், அவரின் தந்தை அம்ஜித் ஆகியோர், 2021 முதல் சிறையில் உள்ளனர். அவரின் ஐந்து மாமன்களும் சிறையில் தான் உள்ளனர். எங்கள் கொள்ளை கும்பலில் உள்ள தலைவர்கள் எல்லாரிடமும் துப்பாக்கி இருக்கும். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.கைதான சல்மான் உசேனை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை, ஏப்., 9ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Prabhakaran Rajan
மார் 28, 2025 19:30

இதில் பியூட்டி என்னவென்றால் கைதாகி ஜாமீனில் வந்தவர்கள் தான் அதிகமான குற்றம் செகின்ற்றனர். நமது சட்டங்கள் நீதிதுறை மிகவும் மோசமாக உள்ளது


shakti
மார் 28, 2025 18:43

சுப்ரிம் ... ஜாமீன் கொடுத்து விடுவர்...


Balaji Radhakrishnan
மார் 28, 2025 16:17

Judgement should give proper, I.e. severe punishment. Others from this gang should be caught by shooting them.


Venugopal, S
மார் 28, 2025 08:09

background biodata super...


subramanian
மார் 28, 2025 15:04

Idiot


Varadarajan Nagarajan
மார் 28, 2025 07:36

பிடிபட்டவன்மீது இவ்வளவு வழக்குகள் உள்ளதாக வாக்குமூலம் கொடுக்கின்றான். ஆனால் நீதியரசர்கள் இவர்களுக்கு ஜாமீன் கொடுக்கின்றார்கள். அப்படியென்றால் என்ன நீதி இது. நீதியென்பது பாதிக்கப்பட்டவர்களுக்கா அல்லது குற்றம்செய்பவர்களுக்கா என வலுவான சந்தேகம் வருகின்றது. அல்லது மற்ற மாநிலங்களில் இவர்கள் மீதுள்ள குற்றங்களை ஜாமீன் கொடுப்பதற்குமுன் நீதியரசர்கள் கவனத்தில்கொள்வதில்லையா? சட்டமன்ற நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்ட நமது காவல்துறைக்கு பாராட்டுக்கள். இதுபோல் தொடர்ந்து மக்களின் பாராட்டுக்களை பெறுமாறு காவல்துறை சுறுசுறுப்புடனும் சுதந்திரமாகவும் செயல்படவேண்டும்.


Karthik
மார் 28, 2025 10:32

ஜாமீன் கொடுப்பதற்குமுன் நீதியரசர்கள் கவனத்தில்கொள்வதில்லையா? உங்கள் கேள்வி ஞாயமானது தான்.. ஆனால் நீங்கள் இதற்கான பதிலை டில்லி ஐகோர்ட் நீதிபதியிடம் கேட்டு பார்கலாம்.. அவரிடம் மூட்டை மூட்டையாக இருப்பதாக செய்தி..


N Annamalai
மார் 28, 2025 06:47

இதுவே ஈரானில் செய்து இருந்தால் ?.இவன் கூட்டத்தில் ஒருத்தன் கூட உயிர் உடன் இருந்து இருக்க முடியாது .


Padmasridharan
மார் 28, 2025 06:45

Chain snatchers ஐ பிடித்ததற்கு வாழ்த்துக்கள். இது போல் mobile snatchers யையும் காவலர்கள் கூட்டு கூட்டாக ரோட்டில்_கடற்கரையில் மக்களிடமிருந்து 3000௹ பறிக்கிறார்களே இவர்களின் இலக்குகளை மட்டும் கண்டும், காணாதது போல் இருக்கிறார்களே, ஏன்


m.arunachalam
மார் 28, 2025 06:15

மது அருந்தி உயிர் போனவனுக்கு மாலை போட வரிசையில் செல்லும் தலைவர்கள் நிறைந்த சிறப்பான பெருமை கொண்ட தமிழ்நாடு .


Selva
மார் 28, 2025 05:50

எங்கள் தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் 1 லட்சம் செலவழித்தால் குறைந்தபட்சம் 1 கோடி எதிர்பார்ப்பார்கள்.


நிக்கோல்தாம்சன்
மார் 28, 2025 05:36

என்ன பொழப்புடா இது ? ஒருபுறம் பங்களாதேசிகள் , இன்னொரு புறம் ஈரானியர்கள் விளங்கிடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை