உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பள்ளி ஆண்டு விழாவுக்கு ரூ.2,500 மட்டும் போதுமா?

பள்ளி ஆண்டு விழாவுக்கு ரூ.2,500 மட்டும் போதுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அரசால் இயக்கப்படும் பள்ளிகளில், தலா ஒரு பள்ளிக்கு, ஆண்டு விழா நடத்த வெறும் 2,500 ரூபாய் மட்டுமே அரசு ஒதுக்கி இருப்பதால், ஆசிரியர்கள் திணறுகின்றனர்.தமிழகத்தில் அரசால் நடத்தப்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் ஆண்டு விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து, பள்ளிக் கல்வி இணையதளத்தில் பதிவும் செய்ய வேண்டியது கட்டாயம்.மொத்தமுள்ள 37,576 பள்ளிகளுக்கு, 14.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

ஆண்டு விழா

அதில், 100 மாணவர் எண்ணிக்கை உள்ள 26,082 பள்ளிகளுக்கு, தலா 2,500 ரூபாய்; 101 முதல், 250 மாணவர்கள் எண்ணிக்கை உள்ள, 7,397 பள்ளிகளுக்கு, 4,000 ரூபாய்; 251 முதல், 500 மாணவர் எண்ணிக்கை உள்ள, 2,377 பள்ளிகளுக்கு, 8,000 ரூபாய்; 501 முதல் 1,000 மாணவர் எண்ணிக்கை கொண்ட, 2,377 பள்ளிகளுக்கு, 15,000 ரூபாய்.கிட்டத்தட்ட, 1,001 முதல், 2,000 மாணவர்கள் எண்ணிக்கை உள்ள, 327 பள்ளிகளுக்கு, 30,000 ரூபாய்; 2,001க்கு மேல் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள, 45 பள்ளிகளுக்கு, 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது.அனைத்து முதுகலை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலர் மகேந்திரன் கூறியதாவது:பள்ளியில் ஆண்டு விழா நடத்த வேண்டும் என்றால், மைக் செட், பந்தல், சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை, மாணவர்களுக்கு பரிசு என குறைந்தபட்சம், 7,000 முதல், 10,000 ரூபாய் வரை செலவாகும்.

இயலாத சூழல்

ஆனால், 250 மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட 89 சதவீதம் பள்ளிகளுக்கு, 2,500 முதல் 4,000 ரூபாய் வரையே நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த குறைந்தபட்ச தொகையை வைத்து, மாணவர்களுக்கு பரிசு பொருள் வாங்கவோ, விழா செலவுகளை செய்வதற்கோ இயலாத சூழல் உருவாகிவிடும். ஏழை, நடுத்தர மக்கள் படிப்பதால், பெற்றோரும், உதவி செய்யும் சூழலில் இல்லை. ஆண்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்றால், அரசு ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

lana
ஜன 09, 2025 15:06

நக்கி கொண்டு போன பாலம் க்கு 16 கோடி கொடுக்க முடியும். கார் ரேஸ் நடத்த பணம் இருக்கும். பள்ளி க்கு என்றால் இருக்காது. இது தாண்டா திருட்டு திராவிட மாடல்


PARTHASARATHI J S
ஜன 09, 2025 10:28

பொரி, கடலை வாங்கக்கூட இந்த பணம் போதாது. பாவம் ஆசிரியர்கள். நிதிநிலையால் ஒரு நிகழ்ச்சி ரத்தாவது வருத்தமே. ஸ்டாலின் பொருளாதார அறிவை எண்ணி வியக்கிறேன்.


Rajasekar Jayaraman
ஜன 09, 2025 10:24

அமைச்சர்கள் டீ குடிக்க மட்டுமே கோடிக்கணக்குல தேவை.


VENKATASUBRAMANIAN
ஜன 09, 2025 08:11

திருட்டு திராவிடம். அமைச்சர்கள் அனைவரும் சேர்ந்த கொடுத்தாலே போதும். இரண்டு வருடங்கள் ஆண்டு விழா நடத்தலாம். கனி அக்கா ஒருவரே கொடுத்தால் போதும். ஆனால் இவர் சுரண்டுவதிலே குறியாக உள்ளனர்


புதிய வீடியோ