உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விபரீதமாகிறதா விஷ காய்ச்சல்?

விபரீதமாகிறதா விஷ காய்ச்சல்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதும், அதனால் சில இடங்களில் மரணங்கள் ஏற்படுவதுமாக உள்ளது. இந்நிலையில், கொசுக்களால் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.அதேநேரத்தில், அதிகரித்து வரும் டெங்கு மரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.'

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு குறைவு தான்'

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில், பொது சுகாதார இயக்குனர் செல்வவிநாயகம் பேசியதாவது:தமிழகத்தில், 33 மாவட்டங்களில் மலேரியா பாதிப்பு இல்லை. கொசுக்கள் வாயிலாக பரவும் நோய்களில் டெங்கு முக்கியமானது. தமிழக மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது குறைந்தளவு தான் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் பறக்கும் அதிகபட்ச துாரமே, 500 மீட்டர் தான். பெரும்பாலான நேரங்களில் டெங்கு கொசு உருவாவதற்கு மக்களே காரணம். டெங்கு கொசுவை கட்டுப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத் துறை உள்ளது. எந்த காய்ச்சலாக இருந்தாலும் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.'கோவிட் வைரஸ்' கண்டறிவதற்கான ஆர்.டி.பி.சி.ஆர்.' பரிசோதனை கருவிகள், அதற்கான கட்டமைப்பை பெரியளவில் உருவாக்கியிருந்தோம். தற்போது அதற்கான பணிகள் முடிந்த நிலையில், அந்த கருவிகளையும் கட்டமைப்பையும் வேறு நோய்கள், வைரஸ்களை கண்டறிவதற்கு பயன்படுத்த முடியுமா என்ற ஆராய்ச்சியில் உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.

'மரணத்தை வௌிப்படையாக சொல்ல வேண்டும்'

சேலம் மாவட்டம், மேச்சேரியில் அ.தி.மு.க., வின் சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:மழை விட்ட பின்பும் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் குழந்தைகள், டெங்கு காய்ச்சலால் பாதிக்கின்றனர். தற்போது டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணத்தை அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். தேவையான இடங்களில் வார்டுகள் அமைக்க வேண்டும்.களப்பணிக்கு மருத்துவ குழு நேரில் செல்ல வேண்டும். அப்படி எந்த குழுவும் செல்லவில்லை. முகாம் நடத்த தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளதாக, பழனிசாமி ஆதாரத்துடன் கூறியுள்ளார். சில பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை உள்ளூர்களில் கொள்முதல் செய்கின்றனர். இந்த அரசு தேவையான மருந்து, மாத்திரைகளை தடையின்றி கொள்முதல் செய்து மாவட்ட, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை