உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருப்பரங்குன்றம் மலை என்ன கசாப்பு கடையா? மதுரை ஆதினம் கொதிப்பு

திருப்பரங்குன்றம் மலை என்ன கசாப்பு கடையா? மதுரை ஆதினம் கொதிப்பு

மதுரை; ''திருப்பரங்குன்றம் மலை என்ன கசாப்பு கடையா. மலையில் ஆட்டை அறுத்து வழிபாடு நடத்தக்கூடாது'' என மதுரை ஆதினம் கூறினார்.திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபட மதுரை ஆதினத்திற்கு போலீசார் தடைவிதித்தனர். இதனால் அவர் மடத்தில் இருந்து புறப்பட தயாரானவர் ஏமாற்றமடைந்தார். ஆதினத்தின் பாதுகாப்பு கருதிதான் தடை விதிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.நிருபர்களிடம் மதுரை ஆதினம் கூறியதாவது: நக்கீரர் முருகன் மலை குறித்துதான் பாடியிருக்கிறாரே தவிர, சிக்கந்தர் மலை என்று பாடவில்லை. இலக்கியத்திலும் முருகன் மலை என்றே கூறப்பட்டுள்ளது. மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் பாட்ஷா தர்காவில் ஒற்றுமையாக வழிபாடு நடத்தி வருகின்றனர். மலைக்கு கீழே ஒரு சைவ கோயிலும், மேலே ஒரு சைவ கோயிலும் உள்ள நிலையில் இடையில் உள்ள தர்காவில் வழிபாடு நடத்துவதில் தவறில்லை. ஆனால் அசைவ உணவு கொண்டு சென்று சாப்பிடலாமா? திருப்பரங்குன்றம் மலை என்ன கசாப்பு கடையா? மலையில் ஆட்டை அறுத்து வழிபாடு நடத்தக்கூடாது. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒரு மதத்தை புண்படுத்தும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது. வழிபாடு தவிர பிற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.திருப்பரங்குன்றம் செல்ல ஆதினத்திற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து ஹிந்து முன்னணி, பா.ஜ.,வினர் ஆதினம் மடம் முன்பு சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர்.

என்னை கொல்ல சதி 'பகீர்'

ஆதினம் நமது நிருபரிடம் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன் துறவியர் பேரவை அமைப்பில் இருந்து வந்ததாக கூறி ஒருவன் டிரைவர் வேலைக்கு சேர்ந்தான். நானும் அவனது பின்புலத்தை விசாரிக்காமல் சேர்த்துக் கொண்டேன். 2 மாதங்களுக்கு முன் நானும், அவனும் காரில் திருச்சி நோக்கி சென்றபோது, விபத்தை ஏற்படுத்தி என்னை கொல்ல சதி செய்தான். என் தினசரி நடவடிக்கைகள் குறித்து இரவு முழுவதும் யாருடனோ போனில் தகவல் தெரிவித்துக் கொண்டிருப்பான். இச்சூழலில்தான் அவன் என்னை கொலை செய்ய முயற்சி செய்தான். உடனடியாக அவனை வேலையை விட்டு அனுப்பி விட்டேன். அவன் தீவிரவாதியாக இருப்பான் என சந்தேகமாக உள்ளது. ஏனெனில் ஹிந்துக்கள் உரிமைகள் குறித்து தொடர்ந்து நான் தைரியமாக பேசி வருவதால் அவன் பணம் பெற்றுக்கொண்டு கொலை செய்ய திட்டமிட்டிருக்கலாம். போலீசில் புகார் கொடுத்தால் சில பெரிய ஆட்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நான் கொடுக்கவில்லை. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Oviya Vijay
ஜன 26, 2025 23:36

அவ்ளோதான் முடிச்சு விட்டீங்க போங்க என்பது தான் அவரது நிலை. புரிந்து கொள்ளுங்கள்.


Oviya Vijay
ஜன 26, 2025 20:21

மடத்தனமாக Vivek இங்கே என்னுடைய பதிவின் மேல் அவர் கருத்தை பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். சீமான்... அதுவே ஒரு வெத்து வேட்டு... இன்னமும் அவருக்கு நீங்கள் முட்டுக் கொடுத்துக் கொண்டுள்ளீர்களா... இப்போவே பாதி கட்சி காணாமல் போயி விட்டது... 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் அது முழுமையாக கலைந்து விடும்... அவ்ளோதான் முடிச்சு விட்டீங்க போங்க என்பது தான் அவரது நிலை. புரிந்து கொள்ளுங்கள்.


Ram pollachi
ஜன 26, 2025 19:06

சாமீ நாமக்கல் நரசிம்மர் ஆலயத்தின் மேலேயும் பச்சை கொடி பறக்குது அது எப்படி? எல்லாவற்றுக்கும் படையெடுப்பு தான் காரணம்.


Duruvesan
ஜன 26, 2025 18:09

அய்யா எல்லாம் சரி நீங்க 2026 ல அவங்க குடும்பம், சேகர் பாபுவுக்கு ஆசி வழங்குவீங்க,


sundarsvpr
ஜன 26, 2025 14:24

தி மு க வில் பெருபான்மையோர் ஹிந்துக்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்.


RAJ
ஜன 26, 2025 13:49

ஒண்ணுமில்ல சாமி, ஒண்டவந்த பிடாரிகள் நமக்கு சூனியம் வைக்குதுங்க... நம்ப ஜனங்க வாயபொளந்து தூங்குதுங்க.. இதுல சில நச்சுப்பாம்புகளும் புல்லுருவிகளும் நம்ப சொத்தை தின்னுட்டு நம்ப முதுகுல குத்துதுங்க..


Svs Yaadum oore
ஜன 26, 2025 13:36

என்ன பேசாராரு இவரு?? டிரைவர் கொலை செய்ய முயற்சி செய்தானாம் .... ஆனால் போலீசில் புகார் கொடுத்தால் சில பெரிய ஆட்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இவர் கொடுக்கவில்லையாம் ....


sridhar
ஜன 26, 2025 13:26

இப்போது பொங்கும் ஹிந்து 2026 மே மாதம் 1000 ருபாய் வாங்கிக் கொண்டு அடங்கிவிடுவான்.


Oviya Vijay
ஜன 26, 2025 13:16

இவருக்கென்று என்ன வரலாறு இருக்கிறது. வேலை வெட்டி என்று எதற்கும் செல்லாமல் கடவுளின் காப்பாளன் என்பது போல் தன்னைத் தானே உருவகப்படுத்திக் கொண்டு அதனால் சுற்றி ஜால்ரா தட்டும் மற்ற சங்கிகள் மூலமாக கிடைக்கும் பணத்தில் நோகாமல் நொங்கு தின்று சொகுசு வாழ்க்கை வாழும் ஒரு ஜீவன்.. அவ்வளவே... அந்த காலத்தில் வாழ்ந்த ஆன்மீக பெரியவர்கள் என்றால் அவர்களது கனிவான பேச்சுக்களும் அவர்களது அருமையான உபதேசங்களும் மனம் குளிர கேட்டு உளம் மகிழ்ந்தோம். அதற்கு மிகப்பெரிய உதாரணம் கிருபானந்த வாரியார். அவரையும் இவரையும் ஒப்பிடக் கூட முடியுமா??? இவரைப் போன்ற ஆதீனங்கள் இப்போது அரசியல் பேசுபவர்களாக மாறிவிட்டனர். ஆன்மீகப் பெரியவர்கள் என்ற போர்வையில் வலம் வரும் இவரைப் போன்றோர்களை மக்கள் புறந்தள்ள வேண்டும்...


Kasimani Baskaran
ஜன 26, 2025 13:40

பகுத்தறிவு இல்லை என்றால் கூட பரவாயில்லை - ஆனால் அடிப்படை அறிவு கூட இல்லை என்றால் சிக்கல்தான். ஆதீனம் இந்துக்களின் பிரதிநிதி. ஆகவே மத கலவரம் உண்டு பண்ணுவது போன்ற கருத்துக்களை தவிர்ப்பது நாகரீகமானது.


ஆரூர் ரங்
ஜன 26, 2025 13:43

வாரியார் சுவாமிகள் திராவிஷ ஆட்களின் தாக்குதலில் பாதிக்கப்பட்டது வரலாறு. அந்தக் காலத்திலிருந்தே திராவிஷ ஆட்கள் அப்படித்தான்.


Kasimani Baskaran
ஜன 26, 2025 14:10

"தாக்குதலில் பாதிக்கப்பட்டது" - பலவான் யார் பக்கமும் போகமாட்டார்கள். சீமானிடம் இவர்கள் பருப்பு வேகாது. முடை நாற்றம் எடுத்த வரலாறும் சொந்தக்காரர்கள் திராவிட மத மட்டைகள். தீம்கா பற்றி ராமசாமி எழுதிய வசனங்களை பிரபலப்படுத்தினால் போதும் திராவிட மதத்தினர் அடங்கிவிடுவார்கள்.


vivek
ஜன 26, 2025 19:49

எவ்ளோ வக்கனையா பேசினாலும் ஒவியரு சீமான் கிட்டே மண்டியிட்டு தான் உட்காருராரு...பாவம்.


Ganapathy
ஜன 26, 2025 12:48

ஒருவேளை அறிவாலயத்துலேந்து தமிழகபோலீசுக்கு சோறுபோகுதோ என்னமோ? அப்படியே எஸ்டிபிஐ கட்சியும் ரமதான் கஞ்சி ஊத்தப்போகுதோ என்னமோ? ஏன்னா விசுவாசம்னு ஒண்ணு இருக்குல்ல?


முக்கிய வீடியோ