உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விநாயகர் சதுர்த்தி நாளில் கச்சத்தீவில் கொடியேற்றுவோம்: அர்ஜூன் சம்பத்

விநாயகர் சதுர்த்தி நாளில் கச்சத்தீவில் கொடியேற்றுவோம்: அர்ஜூன் சம்பத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சாரங்கபாணிபேட்டையில், 400 ஆண்டுகள் பழமையான காசி விஸ்வநாதர் கோவிலுக்கு, கிராம மக்கள் சொந்த செலவில் திருப்பணி செய்துள்ளனர்.இதை ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று பார்வையிட்டு, கிராம மக்களை பாராட்டினார். பின், அவர் அளித்த பேட்டி: காசி விஸ்வநாதர் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஆனாலும், திருப்பணிக்கு நிதி ஒதுக்கவில்லை. இருந்தபோதும், அந்த நிதியை எதிர்பாராமல், கிராம மக்கள், தாங்களே ஒன்று சேர்ந்து நிதி திரட்டி, கோவிலை புதுப்பித்துள்ளனர். திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேகத்துக்கு தயார் நிலையில் உள்ளது.இதே கிராமத்தில், திருப்பணி நடைபெற்று வரும் வரதராஜ பெருமாள் கோவில் அருகில், குளக்கரையில் சிலர் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளனர். இதனால், அக்குளத்தில், நீராடும் பெண்கள், குழந்தைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது; அதனால், அதை அகற்ற வேண்டும்.கச்சத்தீவில் தேசிய கொடி ஏற்றும் முயற்சி நடந்து வருகிறது. இந்தாண்டிலும், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி மற்றும் அடுத்தாண்டு குடியரசு தினம் ஆகிய மூன்று நாட்களிலும் தேசிய கொடி ஏற்ற முயற்சிப்போம். கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது என்பதை அறிவிக்கவே இந்த முயற்சி.கடந்த 1972ல், தி.மு.க., ஆட்சியின் போது, தமிழகத்தின் பிரதான கோவில்கள் முன்பு, ஈ.வே.ரா., சிலைகள் அமைக்கப்பட்டன. அந்த சிலைகளை அகற்றுவதோடு, பக்தர்கள் மனதை புண்படுத்தும் விதமாக, அதில் உள்ள நாத்திக வார்த்தைகளை நீக்க வேண்டும். அந்த சிலைகளை அகற்றும் வரை போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

sankaranarayanan
ஜூலை 09, 2025 19:55

தி.மு.க., ஆட்சியின் போது, தமிழகத்தின் பிரதான கோவில்கள் முன்பு, ஈ.வே.ரா., சிலைகள் அமைக்கப்பட்டன. அந்த சிலைகளை அகற்றுவதோடு, பக்தர்கள் மனதை புண்படுத்தும் விதமாக, அதில் உள்ள நாத்திக வார்த்தைகளை நீக்க வேண்டும். கோவிலுக்குள்ளே சிலைகள் இருக்கும்போது கோவிலுக்கு வெளியே மனித சிலைகள் அமைக்க அவசியமே இல்லை.இதற்கு ஆகும் செலவை ஏழைமக்களுக்கு அளிக்கலாம் சிலைகளை அகற்றுவது என்பது நல்ல முடிவே.


வல்லவன்
ஜூலை 09, 2025 17:42

ஏன் மற்ற நாள்ள கொடி ஏத்துனா கொடி ஏறாதா பெட்டர் மாக்ஸ் லைட்டேதா வேணுமா


குடிகாரன்
ஜூலை 09, 2025 16:18

கூலிக்கு மாரடிப்பதில் ஓவியாவை மிஞ்ச ஆளில்லை


Murthy
ஜூலை 09, 2025 14:58

கச்சத்தீவை காங்கிரஸ் தாரை வார்த்தது .......பிஜேபியும் அதை பின்பற்றுகிறது


P. SRINIVASAN
ஜூலை 09, 2025 14:52

இவர்களின் சம்பாதிப்பதற்கு அப்பாவி மக்களை பயன்படுத்தறாங்க. இவர்களுக்கு வேற வேலை கிடையாது. மக்களே உஷார்


vivek
ஜூலை 09, 2025 16:08

நம்ம சீனு திமுகவை சொல்றாரு .... திருந்தி புரிஞ்சா சரி


MUTHU
ஜூலை 09, 2025 14:05

கோமாளிகள்.


ராஜா
ஜூலை 09, 2025 14:01

இந்த மனுசன் இம்புட்டு நாள் எங்க இருந்தார்.நுழலும் தன் வாயால் கெடும்.


Murali Krishna Nainiyappan
ஜூலை 09, 2025 12:19

ஏன் பாகிஸ்தான் பங்களாதேஷ் சியாச்சின் சீன பெருஞ்சுவர் , பர்மா மலேசியா சிங்கப்பூர் இலங்கை எல்லா ஒரு காலத்தில் இந்தியர்கள் ஆளுமையில் தானே இருந்தது.அங்கும் சென்று கொடியேத்தி உன் குடிகாத்து ஊரான் குடியை கெடுக்க.


Oviya Vijay
ஜூலை 09, 2025 11:59

யோவ் சம்பத்து... நோகாம நொங்கு தின்னுகிட்டு உடம்ப வளர்த்துகிட்டு வர்றியே... உழைச்சு சம்பாதிக்கணுங்கிற எண்ணம் இருக்கா இல்லையா... வியர்வைய சிந்தி உழைச்சா தான்யா சாப்பிடுறது உடம்புல ஒட்டும்... மனசுல நிம்மதியும் கிட்டும்... உன்ன மாதிரி ஆளுங்களுக்கு அந்த கடவுள் கூட சப்போர்ட் பண்ண மாட்டாரு... உம்மோட வாய்ச்சவடாலுக்கு மட்டும் குறைச்சல் இல்லை... வாலைச் சுருட்டி வெச்சுக்கோ ராசா...


vivek
ஜூலை 09, 2025 12:42

நம்ம ஓவியம் என்னமா கதறுதான் பாருங்க.....திமுக 100 தொகுதிகளில் வீக்.....ஆனாலும் புலம்புரான்


guna
ஜூலை 09, 2025 12:43

இருநூறு கேடு கெட்ட பிறவியடா நீ ஆர்டிஸ்ட்


தஞ்சை மாமன்னர்
ஜூலை 09, 2025 18:42

குணா அவர்களே நீங்கள் சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் ஆர்ட்டிஸ்ட்....!! 200


Ganesh S
ஜூலை 09, 2025 21:00

கிராமத்து கோயில்கள் பலவற்றில் கிராமத்தாரே பணம் போட்டு குடமுழுக்கு நடத்துகிறார்கள்.அறநிலையத் துறை தங்கள் பெயரை போட்டுக் கொள்கிறது.


சமீபத்திய செய்தி