உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சட்டத்துக்கு உட்பட்டே கனிமங்கள் வேறு மாநிலங்கள் செல்கின்றன: சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்

சட்டத்துக்கு உட்பட்டே கனிமங்கள் வேறு மாநிலங்கள் செல்கின்றன: சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்

சென்னை: சட்டத்துக்கு உட்பட்டே கனிமங்கள் வேறு மாநிலங்கள் செல்கின்றன என அமைச்சர் துரைமுருகன் தெவித்தார்.இது அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: மாநிலத்தில் இப்போது, 104 சுரங்கங்கள், 1,496 குவாரிகள் உள்ளன. 2024- - 25ம் ஆண்டில், 408.62 லட்சம் டன் பெரும் கனிமங்கள், 618.27 லட்சம் கன மீட்டர் சிறு கனிமங்கள், 18.97 லட்சம் டன் தீக்களிமண், சிலிக்கா மணல் உள்ளிட்ட கனிமங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.கனிமங்களில் இருந்து, 2020 - -21ல், 983 கோடி ரூபாய், 2021- - 22ல் 1,212 கோடி ரூபாய், 2022 - -23ல் 1,679 கோடி ரூபாய், 2023- - 24ல் 1,735 கோடி ரூபாய், இந்த ஆண்டு பிப்ரவரி வரை, 1,074 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. நான்காண்டு கால தி.மு.க., ஆட்சியில், 6,400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது.தமிழகத்திலிருந்து கனிமங்கள் வெளி மாநிலங்களுக்கு செல்வதாக, இங்கே பேசிய எம்.எல்.ஏ.,க்கள் குறிப்பிட்டனர். அண்டை மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்வதை தடை செய்ய முடியாது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கனிம உரிமைத்தொகை, மாவட்ட கனிம நிதி, பசுமை நிதி செலுத்தி, இரண்டு சோதனைச் சாவடிகளில் சோதனை செய்த பின்னரே கனிமங்களை, மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியும். அனுமதியின்றி சிறு கல்லைக்கூட கொண்டு செல்ல முடியாது. எனவே, கனிம வளங்கள் கொள்ளை போகிறது என, இனி யாரும் சொல்ல முடியாது. சட்டத்திற்கு உட்பட்டே, வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன.அனுமதியின்றி கனிமங்களை கடத்துபவர்கள் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த நான்காண்டுகளில், அனுமதியின்றி கனிமங்களை கொண்டு சென்ற, 21,163 வாகனங்களை பிடித்துள்ளோம். ஆய்வு செய்து, 152 குவாரிகளில் விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

अप्पावी
மார் 25, 2025 19:03

கனிமம் வெட்டிங். கழகத்துக்கு கட்டிங். இது சட்டபூர்வ செட்டிங்.


PARTHASARATHI J S
மார் 25, 2025 18:59

ஆறுமாதம் பார்டரில் எந்த கனிமமும் செல்லக்கூடாது என்று அறிவித்து விடுங்கள். அதை மீறி செல்லும் லாரிகளை சுட்டுப்பிடியுங்கள்.


எவர்கிங்
மார் 25, 2025 18:45

அதாவது சட்டப்படியே சுரண்டி சொத்து சேர்க்கிறானாம்


சந்திரசேகர்
மார் 25, 2025 17:41

மக்களுக்கு இன்னும் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.தான் வாங்கும் பிச்சை காசுக்கு ஓட்டு போட்டு தன் சந்ததி இன்னும் 50 அல்லது 100 வருடத்தில் அழிய போகிறது என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மலை காடு தண்ணீர் விவசாயம் அழிந்த போது எல்லோரும் செத்து மடி வார்கள் .


Nathan
மார் 25, 2025 16:39

அட முட்டா பயலே அவுங்க மாநிலத்தில் மலை இல்லையா அவனுங்க மாநில இயற்கைய பாதுகாக்க நீங்க ஏன் கேனத்தனமா இங்கே இருக்கும் இயற்கையை அழிக்கிறீர்கள்


M.Mdxb
மார் 25, 2025 15:16

அனுமதியின்றி கனிமங்களை கடத்துபவர்கள் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. யார் திருடுறா யார்மீது நடவடிக்கை ஒன்னும் புரியலையே மாப்பிளை இவர்தான் ஆனா இவர் போட்டுஇருக்குற சட்டை???


lana
மார் 25, 2025 15:13

ஒரு லாரி மண‌ல் சுமார் 1000 ரூபாய். இது தான் அரசு வருவாய். ஆனால் உண்மையில் நாம் கொடுக்கும் விலை. மீதி யாருக்கு செல்கிறது. இந்த 1000 ரூபாய் உம் எல்லா வண்டிகள் க்கும் கட்டுவது கிடையாது. without உண்டு. அரசு வருவாய் 1000 கோடி என்றால் இவர்கள் வருவாய் ஒரு 50 மடங்கு அதிகம்


kamal 00
மார் 25, 2025 14:39

ஏன் .....


Nandakumar Naidu.
மார் 25, 2025 13:12

உன் வீட்டு சட்டத்திற்கு உட்பட்டா?


Rajarajan
மார் 25, 2025 13:11

அப்போ IIT மணல் சுரண்டல் பத்தி சொன்னது பொய்யா ?? அப்போ பொதுமக்கள் நாங்கள் தான் முட்டாள்களா ??


S.V.Srinivasan
மார் 25, 2025 14:03

நீங்கள் சொன்ன கருத்து உண்மை என்று சொன்னாலும் சொல்வார்


சமீபத்திய செய்தி