உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா விவகாரம்; மதிமுக முடிவுக்கு விஜய் தடை

எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா விவகாரம்; மதிமுக முடிவுக்கு விஜய் தடை

- நமது நிருபர் - ம.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா விவகாரத்தில், துரை வைகோவின் யோசனையை ஏற்க, முதல்வர் விஜய் மறுத்து விட்டதாக தெரிகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5s0zkzs8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் நான்கு தொகுதிகளில், உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க., போட்டியிட்டது. அதில், இரு தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தலில் த.வெ.க.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், தி.மு.க., கூட்டணியில் தனிச்சின்னத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ், வி.சி.க., - முஸ்லிம் லீக் மற்றும் கம்யூ., கட்சிகள் அணி மாறின. இதில், காங்., - வி.சி.க., மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள், அமைச்சரவையிலும் சேர்ந்துள்ளன. இதனால், 'தி.மு.க., சின்னத்தில், ம.தி.மு.க.,வினர் போட்டியிட்டது துரதிருஷ்டமானது' என, ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ, தன் மனக் குமுறலை வெளிப் படுத்தி இருந்தார். இந்நிலையில், திருச்சி சென்றிருந்த முதல்வர் விஜயை அவர் சந்தித்தார். அத்துடன், கடந்த 4ம் தேதி முதல்வர் விஜயை அவரது வீட்டிலும் சந்தித்து பேசினார். இதுகுறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: த.வெ.க., அமைச்சரவையில் இடம் பெற முடியாமல் போனதால், துரை வைகோ மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார். அதனால், முதல்வரை சந்தித்த துரை வைகோ, 'நீங்கள் சொன்னால், இப்போதே எங்கள் இரு எம்.எல்.ஏ.,க்களையும் ராஜினாமா செய்ய வைத்து, தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறி, உங்களுடன் கூட்டணிக்குள் வந்து விடுகிறோம்; நாம் இணைந்து இடைத்தேர்தலை சந்திக்கலாம்' என்று கூறியிருக்கிறார். ஆனால், முதல்வர் விஜய்க்கு இதில் விருப்பமில்லை. ஏனென்றால், த.வெ.க., கூட்டணியில் இருந்து கம்யூ., கட்சிகள் வேண்டுமானால் வெளியேற வாய்ப்புள்ளது. அவர்களின் நான்கு எம்.எல்.ஏ.,க்களை ஈடுகட்ட, அ.தி.மு.க.,வில் இருந்து நான்கு பேர் வந்து விட்டனர். ஏற்கனவே, குதிரை பேரம் என, த.வெ.க., அரசு மீது விமர்சனம் இருக்கிறது. இந்நிலையில், தி.மு.க., சின்னத்தில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்தால், த.வெ. க.,வுக்கு கெட்ட பெயர் தான் கிடைக்கும். அதன் தாக்கம், இடைத்தேர்தலில் த.வெ.க.,வின் வெற்றியை பாதிக்கும் என்று முதல்வர் விஜய் நினைக்கிறார். இருப்பினும், ம.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைத்து, கூடுதல் தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்தித்தால், த.வெ.க.,வுக்கு நல்லது என, அதன் அரசியல் வியூக வகுப்பாளர்கள் கருதுகின்றனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

பெரிய ராசு
ஜூன் 09, 2026 22:22

ராஜினாமா செய்து போட்டியிடுங்கள் ...ட்ராவ்வ்ஸ்ரை கழட்டிருவாங்க தமிழா மக்கள் செம காண்டுல இருக்காங்க ...


Ranjith
ஜூன் 09, 2026 18:18

இப்பொழுது விஜய் ஆட்சிக்கு முட்டு கொடுத்து இருக்கும் கட்சிகள் அனைத்தும் DMK தொண்டர்களின் உழைப்பால் கிடைத்த வெற்றி இல்லாமல் வேற இவர்களின் கட்சிக்கு கிடைத்த வாக்குகளால் அல்ல . இவர்களின் வோட்டு வங்கி எப்பவோ கீழே போய் விட்டது . வெட்கமே இல்லாமல் தமிழக வாக்காளர்களின் மன நிலைக்கு எதிரே செய்ததால் வர போகும் காலங்களில் அனுபவிப்பார்கள்.


Raajan
ஜூன் 09, 2026 13:10

எப்படியாவது பதவிக்கு வரவேண்டும். பதவி வெறி. கடைசி வரை தீம்கவிற்கு பக்க பலமாக இருப்போம் என்று சொன்ன வாய் எது?


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 09, 2026 12:48

தயவு செய்து இந்த வைகோவை மட்டும் அருகில் சேர்க்காதீர்கள் விஜய் அவர்களே. உங்களையும் குட்டிசுவராக்கி விடுவார், ஜாக்கிரதை.


ராமகிருஷ்ணன் பரமக்குடி
ஜூன் 09, 2026 12:22

வை கோ வின் ராசியை நினைத்து விஜய் பயந்து போய் விட்டார். தப்பித்தவறி வைகோவையும் சேர்த்து விட்டால் tvk ஆட்சி நிச்சயம் நிலைக்காது. ஒரு வேளை திமுகவின் திட்டமிட்ட சதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


R SRINIVASAN
ஜூன் 09, 2026 11:49

அதிமுக 4 எமேலஏக்களும் சஸ்பெண்ட் செய்ய படுவார்கள் இ விஜய் அவர்களை நம்பி காலம் தள்ள முடியாது


Rathna
ஜூன் 09, 2026 11:28

அவனவன் பதவிக்கு ஆலா பறக்கிற நிலைமைக்கு தள்ளீடீங்களே. இதென்னடா வெங்காய திராவிட கூட்டத்திற்கு வந்த சோதனை.


chinnamanibalan
ஜூன் 09, 2026 10:52

மதிமுக வில் இருந்து பலரும் வெளியேறி விட்ட நிலையில், திமுக சின்னத்தில் நின்று வெற்ற இருவரையும் ராஜினாமா செய்ய வைத்து, மீண்டும் இடைத் தேர்தலில் நிறுத்தி, வெற்றி பெற வைத்தால், தமிழக அமைச்சரவையில் மதிமுக கட்சிக்கும் ஒரு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கைதான்!


Om prakash
ஜூன் 09, 2026 10:27

கட்சியை கலைத்து விடலாம்


sankar
ஜூன் 09, 2026 10:18

நேற்று வந்தவன் ஆர்டர் போடற அளவுக்கு கட்சி இருக்கு - சூப்பர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை