உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அனைவரையும் அரவணைத்து செயல்படுங்கள்: நயினாருக்கு மோகன் பகவத் ஆலோசனை

அனைவரையும் அரவணைத்து செயல்படுங்கள்: நயினாருக்கு மோகன் பகவத் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அனைத்து தரப்பையும் அரவணைத்து செயல்பட்டால் சாதிக்கலாம்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் ஆலோசனை வழங்கி உள்ளார்.கோடை விடுமுறை காலமான ஏப்ரல், மே மாதங்களில், ஆண்டுதோறும் மாநில அளவிலான பயிற்சி முகாம்களை ஆர்.எஸ்.எஸ்., நடத்தி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1231ud5n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த ஆண்டு, தமிழகத்தில் கோவை, நாமக்கல் உள்ளிட்ட நான்கு இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி முகாம்கள் நடந்து வருகின்றன. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடில் உள்ள தனியார் பள்ளியில், 'கார்யகர்த்தா விகாஸ் வர்க' எனப்படும் பொறுப்பாளர்கள் மேம்பாட்டு முகாம், கடந்த ஏப்ரல் 19 முதல் நடந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ்., ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் பங்கேற்றுள்ள பயிற்சியாளர்களுக்கு வழிகாட்டுவதற்காக, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் நேற்று முன்தினம் திருச்செங்கோடு வந்தார். அவரை, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகன் ஆகியோர் சந்தித்து பேசினர். கடந்த ஏப்ரல் 12ல், தமிழக பா.ஜ., தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்ற போது, ஆர்.எஸ்.எஸ்.,சில் பாடப்படும், 'கேசவனை நாம் வணங்குவோம்; அவர் பாதையிலே நாமும் செல்லுவோம்; லட்சியத்தை எய்து காட்டுவோம். 'நாம் நிச்சயமாய் வெற்றி நாட்டுவோம்' என்ற பாடலை பாடினார். இதில், கேசவன் என்பது ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் கேசவ பலிராம் ஹெட்கேவாரை குறிக்கிறது. அதாவது, அ.தி.மு.க.,வில் இருந்து வந்திருந்தாலும், ஆர்.எஸ்.எஸ்., வழியில் செல்வேன் என்பதை சூசகமாக நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திருச்செங்கோடு வந்த மோகன் பகவத்தை சந்தித்துள்ளார். அப்போது கேசவ விநாயகன் உடனிருந்தார். தமிழக அரசியல் சூழல் குறித்து கேட்டறிந்த மோகன் பகவத்திடம், 'அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணி உருவான பின், ஆளும் தி.மு.க., கூட்டணிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. 'அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணிக்கு, மேலும் பல கட்சிகள் வரும் வாய்ப்பு உள்ளது. அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்' என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ., வளர்ச்சிக்கான தன் செயல் திட்டத்தையும் விவரித்து உள்ளார்.இது தொடர்பாக தயாரித்து வைத்திருக்கும் அறிக்கையையும் மோகன் பகவத்திடம் நயினார் நாகேந்திரன் கொடுத்துள்ளார். அதோடு, தமிழகத்தில் மாவட்டங்கள் மற்றும் மாநில அளவுக்கான பா.ஜ., நிர்வாகிகள் தேர்வு குறித்தும், நீண்ட நேரம் விவாதித்து ஆலோசனைகள் பெற்றுள்ளார். இப்படி, கட்சியின் நிகழ்கால மற்றும் எதிர்காலம் குறித்த செயல்பாடுகள் அனைத்தையும் விவரித்த நயினாரின் கருத்துகளை கேட்டுக் கொண்ட மோகன் பகவத், 'தலைவர் பதவியை ஒரு பொறுப்பாக எடுத்துக் கொண்டு, அனைத்து தரப்பையும் அரவணைத்து செல்லுங்கள். 'பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களிடமும் கட்சியை வேகமாக கொண்டு செல்லுங்கள். அப்படி செய்யும்பட்சத்தில், அது வரும் சட்டசபை தேர்தலிலேயேகூட நல்ல பலனை கொடுக்கலாம்' என ஆலோசனை வழங்கியதாக, பா.ஜ., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

saravanan
மே 09, 2025 07:34

அணைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்வது என்பது மக்களோடு ஒன்றாக இணைந்து அவர்கள் சந்திக்கும் சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான பிரச்சினைகளை களைவதுதான் மக்களின் கஷ்ட காலங்களில் துணை நிற்பதை விட சிறந்த சேவை என்ன இருக்க போகிறது அந்த சமுதாய பணியை ஆர் எஸ் எஸ் பேரியக்கம் சத்தமில்லாமல் சிறப்பாகவே செய்து வந்திருக்கிறது சமுதாய நீதி அணைவருக்கும் கிடைக்கவும், நாட்டு வளர்ச்சியின் பயன் அணைவரையும் சென்றடையவும், திறமையானவர்களுக்கு சமவாய்ப்பு நல்கிடவும் பாஜக போராட வேண்டும் மக்களின் தீர்ப்பு வேண்டுமானால் மகேசன் தீர்ப்பாக இருக்கலாம் ஆனால் மக்களின் பிரச்சினை மகேசனின் பிரச்சினையாகிவிடாது அந்த புனித பணியை பாஜகவினர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். பிரதமர் மோடியின் லஞ்ச ஊழலற்ற மக்கள் நல பணிகளை தமிழகம் முழுவதும் எடுத்து சென்றாலே பாதி வெற்றி உறுதி நமது பழம் பெருமையை இழந்திடாத, அதே சமயம் வளர்ச்சியை நோக்கிய ஒரு புதிய தமிழகத்திற்கான விடிவெள்ளி பயணம் பாஜகவால் தொடங்கப்பட வேண்டும்


சிவம்
மே 08, 2025 19:34

இலா கணேசன், பொன்னார், சிபி, ராஜா, தமிழிசை போன்றோர் அனைவரையும் அரவணைத்து சென்றதால்தான் பிஜேபி தமிழ் நாட்டில் வளரவில்லை. இவர்களுக்கு பிறகு புயலென வந்த அண்ணாமலை எவரையும் அரவணைத்து செல்லாததால் பிஜேபி தலை நிமிர்ந்தது. இப்போது மீண்டும் அரவணைத்து செல்ல போவதால் திக்கு தெரியாமல் போக போகிறது.


கிஜன்
மே 08, 2025 08:21

நெஞ்சில் தைத்த முள் ....


pmsamy
மே 08, 2025 06:30

அவர் சொல்லிட்டார்


சாமானியன்
மே 08, 2025 06:21

பிராமணர்கட்கும் எம்.எல்.ஏ சீட் தரவும். தேசப்பற்றுள்ள கிருத்துவ, முஸ்லீம் சமுதாயத்தவர்கட்கு தாங்கள் எதிரானவர் அல்ல என்பதை ஒவ்வொரு பரப்புரையிலும் சொல்லுங்க.


M R Radha
மே 08, 2025 16:43

லாங் லிவ் ராஜாஜி காமராஜர் மேல் உள்ள பகை உணர்ச்சி காரணமாக "அறிஞர்க்கெல்லாம் அறிஞர்" அண்ணா தோரேக்கு சப்போர்ட் செஞ்சி த்ரவிஷன்களை வாழ வெச்சி தமிழகத்தை நாசமாக்கியவர்


முக்கிய வீடியோ