உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நாம் தமிழர் கட்சி அதிருப்தியாளர்கள் வேல்முருகனுடன் கைகோர்க்க முடிவு

நாம் தமிழர் கட்சி அதிருப்தியாளர்கள் வேல்முருகனுடன் கைகோர்க்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாம் தமிழர் கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள் இணைந்து, 'தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் அரசியல் அதிகாரத்திற்காக, தமிழக வாழ்வுரிமை கட்சியுடன் இணைந்து, தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட திட்டமிட்டுள்ளனர்.நாம் தமிழர் கட்சியில், சிறப்பாக பேசக்கூடிய மேடை பேச்சாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் திறம்பட செயல்படும் நிர்வாகிகளை வளைக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rcbykiga&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இணைந்து செயல்பட

அதன் விளைவாக, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கோவை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகி உள்ளனர். அதில், கோவை மாவட்ட நிர்வாகிகள், அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்து உள்ளனர். மற்ற மாவட்டத்தினர், தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தை துவக்கி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து, தமிழர் ஒருங்கிணைப்பு இயக்க நிர்வாகிகள் கூறியதாவது: சீமான் மட்டுமே தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை என, தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்களை நம்ப வைத்து செயல்பட்டுக் கொண்டிருந்தார். இதை வைத்து, நிறைய நிதியும் திரட்டப்பட்டது. ஆனால், சீமானின் அரசியல் நடவடிக்கைகள் நேர்கொண்டதாக இல்லை. இவை, சீமானை நம்பி அரசியல் பயணம் மேற்கொண்ட, எங்களை போன்றவர்களை வெகுவாக பாதித்துள்ளன. அதனால், அவரை நம்பி தொடர்ந்து அரசியல் செய்ய விருப்பமில்லாததால், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி விட்டோம்.

கூடிய மக்கள்

தமிழ் மண்ணில் துாய தமிழ் தேசிய அரசியல் உயிர்த்தெழ வேண்டும் என்பதற்காக, தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளோம். திருச்சி உழவர் சந்தை திடலில், மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தை, கடந்த 27ம் தேதி நடத்தினோம். வேல்முருகன் பங்கேற்ற அந்த கூட்டத்தில், சீமானுக்கு வழக்கமாக கூடும் கூட்டம்போல் மக்கள் கூடினர். நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தோரும் பெருமளவில் வந்தனர்.

உண்மையான தீர்வு

கன்னியாகுமரி, அரக்கோணம், ராமநாதபுரம், தென்காசி, மதுரை, தேனி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி மீதான அதிருப்தியாளர்களும் பங்கேற்றனர்.தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கமும், தமிழக வாழ்வுரிமை கட்சியும் இனி, மக்கள் பிரச்னைகளுக்காக அரசியல் ரீதியில் இணைந்து செயல்படும். நிறைய பொதுப் பிரச்னைகளுக்காக குரல் எழுப்பி, உண்மையான தீர்வுக்காக போராடுவது என முதல் கட்டமாக முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Jay
நவ 29, 2024 16:30

அடுத்த முறை திமக ஆட்சிக்கு வராமல் போகிறது என்றால் அதற்கு ஒரு காரணம் சீமான் ஓட்டை பிரித்ததாகவோ, அதமுக வலிமையான கூட்டணி அமைத்ததாகவோ, திமக வழுவான கூட்டணி இல்லததாகவோ இருக்கும். ஆகவே இது எல்லாம் நடக்காமல் ஆலமர குடும்பம் பார்த்துக் கொள்ளும்.


மாயவரம் சேகர்
நவ 29, 2024 14:09

சில வருடங்கள் முன்பு விஜயகாந்த் கட்சியை அவரது கட்சி தலைவர் சந்திரகுமார் என்பவரை வைத்து உடைத்தது திமுக. இது போன்ற வேலைகளை திமுக செய்யும் அதுவும் ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால் மிகச் சிறப்பாக செய்யும் . இதை அரசியல் ராஜதந்திரம் என பாராட்டவும் ஒரு கூட்டம் உள்ளது . தவெக அதிமுக கட்சிகள் கை கட்டி வேடிக்கை பார்க்கும் ..பாஜக தவறு என்று சொன்னாலும் பதறுவார் சீமான்.


kulandai kannan
நவ 29, 2024 13:44

டம்ளர் சாமான் கட்சியிலிருந்து டோல் முருகன் கட்சிக்கா? அதுவே ஒரு லெட்டர் பேடு கேஸ்.


KavikumarRam
நவ 29, 2024 12:50

சைமன் செபாஸ்டியன் எனும் பிரிவுனைவாத சக்தியை அறுபது வருட சீனியர் திராவிட மாடல் பிரிவினைவாத கிரிமினல் சக்தி எப்படி வளரவிடும்??? அதுவும் சைமன் செபாஸ்டியன் கட்சி ஆரம்பித்து ஈழத்த்தமிழர்களின் பணத்தை வஞ்சகமாக வாங்கிக்கொண்டு தன் குடும்பத்தை மட்டும் வளமாக்கிக்கொண்ட நயவஞ்சகன். பாவங்கள் இந்த இரு நயவஞ்சகக்கூட்டத்தையும் சும்மா விடாது. இவர்களின் அழிவு கூடியவிரைவில் நடக்கும்.


NACHI
நவ 29, 2024 09:50

எங்குட்டாச்சும் போய் தொலையும்


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 29, 2024 09:36

இப்போ புரியுதா


குமரன்
நவ 29, 2024 08:25

கணக்கு சரியாகத்தான் வருகிறது பாமகவை பிரித்து வேல்முருகன் நாதகயை பிரித்து வேல்முருகனுடன் கூட்டணி வேல்முருகனோ திமுகாவின் பி டீம் ஆக திமுக இந்த மாதிரி பிரித்தாளும் சூழ்ச்சியை வேறு எவராலும் முடியாது உதாரணமாக அதிமுக கூட்டணி பலம்வாய்ந்ததாக இருக்ககூடாது என்பதில் எடப்பாடி ஜெயகுமார் திமுகாவிற்கு எவ்வளவு உதவியாக இருக்கிறார் எல்லாம் கொடநாடு குடைச்சல்


P. Senthil
நவ 29, 2024 07:59

நல்லது.


ஆராவமுதன்,சின்னசேலம்
நவ 29, 2024 06:21

சீமானின் நாதக கட்சியில் இருப்பவர்களோ அல்லது அவரது கட்சியில் இருந்து பிரிந்து சென்று திமுகவிலோ வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியில் சேருபவர்களோ யாராக இருந்தாலும் எப்படியோ நாசமா போனால் சரி.


வைகுண்டேஸ்வரன்
நவ 29, 2024 09:42

ஆஹா என்ன நல்ல மனசு இந்த எதிர்மறை வார்த்தைகள் தான் பாஜக வினரின் பலவீனம். திமுக வின் பலம்.


புதிய வீடியோ