உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஷா என்றாலே தி.மு.க.,வுக்கு கிலி; நடுங்க வைக்கும் நாகேந்திரன்

ஷா என்றாலே தி.மு.க.,வுக்கு கிலி; நடுங்க வைக்கும் நாகேந்திரன்

மதுரை : ''பா.ம.க., உட்கட்சி பிரச்னையில் பா.ஜ., சமரசம் செய்யவில்லை,'' என பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

மதுரையில் அவர் அளித்த பேட்டி:

மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று இரவு மதுரை வருகிறார். நாளை காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு, மாலையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார்.

ஆட்சி கலைப்பு

அவர், பா.ம.க., தலைவர் அன்புமணியை சந்திப்பது குறித்து இதுவரை திட்டம் எதுவும் இல்லை. தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி வர வேண்டும் என்பதற்காக கூட்டம் நடக்கிறது. அமித் ஷா எத்தனை முறை தமிழகம் வந்தாலும், தி.மு.க.,வை ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் முதல்வர் ஸ்டாலின். அந்த 'ஷா' தான் மஹாராஷ்டிராவில் ஆட்சியை கொண்டு வந்தார்; டில்லியிலும் கொண்டு வந்தார்.தி.மு.க.,வுக்கு ஷா என்றால் எப்போதும் பயம் உண்டு. 1976ல் தி.மு.க., ஆட்சியை கலைத்தது கே.கே.ஷா என்ற கவர்னர் தான். அன்று முதல், ஷா என்ற பெயரை கேட்டாலே தி.மு.க.,வுக்கு பயம் தான். பா.ம.க., பிரச்னையில் பா.ஜ., சமரசத்தில் ஈடுபடவில்லை. ஆடிட்டர் குருமூர்த்தி, மக்கள் நலன் விரும்பியாக ராமதாசை சந்தித்திருக்கலாம். கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., இருந்தது. அப்போது, அந்தக் கூட்டணியை ராமதாஸ் விரும்பவில்லை என கூறுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தமிழக பா.ஜ.,வில் நிறைய தலைவர்கள் உள்ளனர்.

சுகமான சுமை

அவர்களில் பலர் என்னை காட்டிலும் சீனியர். அனைவரும் என்னை சக தலைவனாகவே பார்க்கின்றனர். அதனால், அவர்களோடு எனக்கு எந்த நெருடலும் இல்லை. தமிழக பா.ஜ., தலைவர் பதவி எனக்கு சுகமான சுமை. தி.மு.க.,வுக்கு எதிரானவர்கள், ஓரணியாக திரள விரும்புகிறோம். இதில், ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார்; பா.ம.க.,வும் வரும்; தே.மு.தி.க., இணைவது பற்றி பொறுத்திருந்து பார்ப்போம். வேறு கட்சிகள் வருவது குறித்து முருக பக்தர்கள் மாநாட்டுக்கு முன் சொல்கிறோம். வேல் யாத்திரை, ரத யாத்திரை போல என்னுடைய யாத்திரை, சட்டசபைக்கு அதிக பா.ஜ., உறுப்பினர்களை அழைத்து செல்வதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

ராஜா
ஜூன் 08, 2025 08:48

எல்லாம் சரி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் எந்த மொழியில் சம்சாரிக்கும் அல்லது கதைக்கும்


முருகன்
ஜூன் 07, 2025 20:43

எடப்பாடி யை கேட்டால் உன்மை தெரியும்


nisar ahmad
ஜூன் 07, 2025 20:38

பேட்டை ரவுடியை கண்டால் நல்வர்கள் பயப்பட வேண்டிவரும்.அது இயல்புதானே ஆனா முடிவில் வெல்வது தீய சக்தி அல்ல.


மூர்க்கன்
ஜூன் 07, 2025 18:49

த்ரிஷா.. தக் லைப் .


Rajan A
ஜூன் 07, 2025 17:44

ஹோட்டலில் கூட பாதுஷான்னாலே பயம்


ராஜா
ஜூன் 07, 2025 15:36

வட மொழி பெயருடைய ஒருவருக்கு பயப்படும் அவசியம் இல்லை, ஆனால் அவர் கோத்ரா ரயிலில் செய்த சம்பவம் பயங்கரமானது தான் பயம்.தேடி வ‌‌‌ந்த பிரமுகர் காடுகளை அழித்த சம்பவம் தான் பயம்


தஞ்சை மன்னர்
ஜூன் 07, 2025 14:14

ஹி ஹி ஒரு அடியாளை பார்த்து பயப்படவேண்டிய நிலையில் அந்த கட்சி இல்லை மேலும் அதி முக உட்கட்சி விவகாரம் நாங்கள் காரணம் இல்லை ப ம கா உட்கட்சி விவகாரம் நாங்கள் காரணம் தேமு தி கா உட்கட்சி விவகாரம் நாங்கள் காரணம் இல்லை, நாம் தமிழர் உட்கட்சி விவகாரம் உட்கட்சி விவகாரம் நாங்கள் காரணம் இல்லை அவர்கள் அவர்கள் அவர்கள் உட்கட்சி விவகாரம் உள் நாட்டு விவகாரம் மட்டுமே பேசுவார்கள் இவங்கிக குருப்பு மட்டுமே அவிங்களை விட்டு விட்டு அடுத்தவன் இடத்தில் என்ன நடக்குது என்று பார்க்கும்


ஆரூர் ரங்
ஜூன் 07, 2025 18:12

MGR திமுக வை விட்டு வெளியேறிய போது திமுக உடைந்தததற்கு இந்திரா காங்கிரசின் சதிதான் காரணம் என்றார் கருணாநிதி. துவக்கம் அதுதான்.


Ramesh Sargam
ஜூன் 07, 2025 12:49

ஷா என்றாலே திமுகவினருக்கு ஷாக்.


S DHANAVEL
ஜூன் 07, 2025 12:34

DMK win 2026 election with more than 200 assembly seats...


RAAJ68
ஜூன் 07, 2025 12:06

ஷா என்றால் திமுகவுக்கு கிலி இல்லை. ஸ்டாலின் என்றால் தான் அமிர்தாவுக்கும் மோடிக்கும் கில்லி கில்லி கில்லி. பாகிஸ்தானுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பேசிக் கொண்டிருப்பவர்களை கைது செய்வதற்கு அமித்ஷாவுக்கு தைரியம் இல்லை. மற்ற மாநிலங்களில் கைது செய்யப்படுகிறார்கள் இங்கே வேடிக்கை பார்க்கிறார்கள் காரணம் மத்திய அரசு ஸ்டாலினை பார்த்து பயப்படுகிறது


சமீபத்திய செய்தி