உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விடியல் பயணத்திற்கு புதிய பஸ்கள்; பெண்கள் ஓட்டுகளை கவர யுக்தி

விடியல் பயணத்திற்கு புதிய பஸ்கள்; பெண்கள் ஓட்டுகளை கவர யுக்தி

ஸ்ரீவில்லிபுத்துார்: 'விடியல் பயணத்திற்காக, தமிழகம் முழுதும் புத்தம் புதிய டவுன் பஸ்கள் இயக்கப்படுவது, வரும் சட்டசபை தேர்தலில், பெண்களின் ஓட்டுகளை கவர தி.மு.க.,வின் யுக்தி' என, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தெரிவித்தனர்.2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட மகளிருக்கான இலவச பயண திட்டத்தை, ஆட்சிக்கு வந்ததும் செயல்படுத்தினர். இலவச பஸ்களை பெண்கள் அடையாளம் கண்டு கொள்ள, முகப்பு பகுதியில் பிங்க் கலர் பெயின்ட் அடிக்கப்பட்டது. திட்டம் பெண்களுக்கு சவுகர்யமாக இருந்தபோதிலும், இயக்கப்பட்ட பஸ்கள் பழசாக இருந்ததால், பல்வேறு பிரச்னைகளை மகளிர் சந்தித்தனர். இப்பஸ்களில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை குறித்து, தினமும் தரவுகளை மாநில அரசு நிர்வாகம் சேகரித்த போதிலும், குறைபாடு உள்ள பஸ்கள் இயக்கப்பட்டதால், பல இடங்களில் டிரைவர்-கண்டக்டர்களோடு பெண்கள் வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில் விடியல் பயணத் திட்டத்தை செம்மைப்படுத்தி, பெண்களிடம் அரசுக்கு நல்ல பெயர் ஏற்படுத்துவதற்கு, தற்போது தமிழகம் முழுதும் புத்தம் புதிய டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதை அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களே கொடியசைத்து துவக்கி வைத்துள்ளனர்.'இப்படி செய்திருப்பது, வரும் சட்டசபை தேர்தலில் பெண்கள் ஓட்டுகளை தி.மு.க.,வுக்கு கவரும் யுக்தி' என, போக்குவரத்து கழக ஊழியர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Prabakaran J
ஜூன் 16, 2025 17:34

After the election, everything will be converted into spl - deluxe bus - itha than solla varanga vidiya Arasu uzhiyargal.


சிந்தனை
ஜூன் 16, 2025 13:40

இந்த இலவச பஸ்ஸில் ஏறும் பெண்களுக்கு ஒரு பாக்கெட் சாராயம் இலவசம்


அப்பாவி
ஜூன் 16, 2025 07:28

வரும் தேர்தலில் வென்றால் ஆளுக்கு ஒரு பஸ்ஸே இலவசமாகத் தரப்படும். மாசம் ஆயிரம் லிட்டர் டீசலும் உண்டாம். விதி 110 ந் கீழ் குடுக்கலாம்னு பேசிக்கிறாங்களாம்


Mani . V
ஜூன் 16, 2025 04:52

தேர்தல் நேரத்தில் போடும் பிச்சைக்கு ஸாரி இலவசத்துக்கு மயங்கும் தமிழக மக்கள் இருக்கும் வரையிலும் ஊழல் பேர்வழி கருணாநிதி குடும்பம்தான் தமிழ்நாட்டை கொள்ளையடிக்கும் ஸாரி ஆட்சி செய்யும்.


Raja
ஜூன் 16, 2025 06:54

ஆட்சி மாற்றத்தை எதிர் பார்க்கும் மக்கள் தற்போது அதிகரித்து உள்ளனர்.. மாற்று இல்லாதது தான் பெரும் ஏமாற்றம்..