உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சட்ட விரோதமாக குவாரிகளில் கனிம கொள்ளை; உடுமலை அருகே அதிகாரிகள் குழு ஆய்வு

சட்ட விரோதமாக குவாரிகளில் கனிம கொள்ளை; உடுமலை அருகே அதிகாரிகள் குழு ஆய்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உடுமலை : உடுமலை மடத்துக்குளம் பகுதியில், விதி மீறி கனிம கொள்ளையில் ஈடுபட்ட கல் குவாரிகளில் உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதிகளிலுள்ள குவாரிகளில், சட்ட விரோதமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதோடு, கிரசர் ஆலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக அரைத்து, கேரள மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், நரசிங்காபுரத்தை சேர்ந்த ஜெகநாதசாமி, மடத்துக்குளம் தாலுகா மைவாடி கிராமத்திலுள்ள கே.எம்.எஸ்., கருப்புச்சாமி குவாரி, உமாதேவி குவாரி மற்றும் அக்சயராஜ் புளூமெட்டல்ஸ் ஆகிய குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, கூடுதல் பரப்பளவிலும், அபரிமிதமான ஆழத்திலும் சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.அதே போல், ஜல்லி கிரசர் ஆலையில், தினமும், 40 டன் மட்டுமே அரைத்து, ஜல்லி உற்பத்தி செய்ய அனுமதி பெற்ற நிலையில், பல மடங்கு கூடுதலாக, தினமும், 800 டன் வரை அரைக்கப்படுகிறது, என உரிய ஆவணங்களுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், 4 வாரங்களுக்குள், தாலுகா அளவிலான கண்காணிப்பு குழு அதிகாரிகள் கள ஆய்வு செய்து, விதி மீறல் குறித்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பவும், அதன் அடிப்படையில், மாவட்ட கலெக்டர் அபராதம், வழக்கு உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.அதன் அடிப்படையில், மடத்துக்குளம் தாசில்தார் குணசேகரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சத்யன், மாவட்ட துணை புவியியலாளர் வெங்கடேசன் மற்றும் வனத்துறை, போக்குவரத்து துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட கண்காணிப்பு குழு அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.அதிகாரிகள் கூறுகையில், 'குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, சட்ட விரோதமாக கூடுதலாக எவ்வளவு கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது, அதன் மதிப்பு உள்ளிட்டவை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை வழங்கப்படும். அதன் அடிப்படையில், அபராதம், உரிமம் ரத்து, வழக்கு உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Subash BV
ஏப் 10, 2025 20:28

ALL suitcases politics. NOT A ROCKET SCIENCE TO MONITOR. TECHNOLOGY AVAILABLE. BUT ACCOUNTABILITY OR WILL absent. CURTCY FROM OUR POLITICAL AND BUROCRAT THIEVES. NO CHOICE. WE ARE ELECTING THEM.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 10, 2025 09:21

வாளையாறு சோதனை சாவடியில் நின்று கவனித்தால் தினமும் கேரளாவிற்கு செல்லும் கனிம வளங்கள் எண்ணிக்கையில் அடங்காது. வானத்தில் உள்ள நட்சத்திரத்தை கூட எண்ணி விடலாம் ஆனால் கேரளாவிற்கு செல்லும் கனிம வளங்கள் அளக்க முடியாது. அதேபோல் கேஏஜி டைல்ஸ் கம்பெனி கலெக்ஷன் கூட எண்ணி விடலாம் ஆனால் கேரளா மருத்துவ கழிவுகள் உள்ளூர் மருத்துவ கழிவுகள் சாலையில் கொட்டப்படுவது கணக்கில் அடங்காது.


தமிழன்
ஏப் 10, 2025 08:40

இப்படிக்கு கேடுகெட்ட ஈன அதிகாரிகளும் அரசியல்வாதிகளும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை