உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இந்தியர்கள் குடியேற விரும்பும் வெளிநாடுகள் எவை? ஆய்வு சொல்வது இதுதான்!

இந்தியர்கள் குடியேற விரும்பும் வெளிநாடுகள் எவை? ஆய்வு சொல்வது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''22 சதவீதத்திற்கும் அதிகமான வசதி படைத்த இந்தியர்கள், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடாவில் குடியேற விரும்புகின்றனர்'' என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பணக்கார இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரித்து வருகிறது. வெளியுறவு அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின் படி ஆண்டுக்கு 25 லட்சம் இந்தியர்கள் உலகின் பிற நாடுகளில் குடியேறுகின்றனர். வெளிநாடுகளில் பணக்கார இந்தியர்கள் குடியேறுவது தொடர்பாக, கோடக் மற்றும் இ.ஒய்., கன்சல்டன்சி சார்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.அதிக சொத்து மதிப்பு கொண்ட இந்தியர்கள் 122 பேர் இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றனர். அதன் முடிவில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: 22 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேற விரும்புகின்றனர். அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் குடியேற விரும்புகின்றனர். குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் வழங்கப்படும் கோல்டன் விசா திட்டம் முக்கியம் பங்கு வகிக்கிறது. பெரும்பாலானோர் தங்கள் இந்திய குடியுரிமையைத் தக்க வைத்துக் கொண்டு விருப்பமான நாட்டில் நிரந்தரமாக வசிக்க விரும்புகிறார்கள். வாழ்க்கைத் தரம், கல்வி உள்ளிட்டவற்றை மேம்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

अप्पावी
மார் 27, 2025 14:38

கர்மபூமி


Natarajan Ramanathan
மார் 27, 2025 12:32

ரத்த வெறி பிடித்த அமைதி மார்க்க அயோக்கியர்களை துரத்தி விட்டாலே நாடு நலம்பெறும்.


S.Subramanian
மார் 27, 2025 11:05

உண்மை தான்


Sampath Kumar
மார் 27, 2025 11:01

ஆக ஹிந்தியாவில் இருக்க விரும்பவில்லை பண்ணைக்காரன் அவன் இஷ்ட்டம் ஆனல் ஏழைகள் பிள்ளைக வழி அற்றவரக்ள் தான் இந்த நாட்டின் உண்மையான குடிமகன்கள் இந்த லக்கனத்தில் வல்லரசு கனவு வேற விளங்கிடும்


தஞ்சை மன்னர்
மார் 27, 2025 10:45

இப்படி சொல்ல நாம வெட்கப்படவேண்டும் காரணம் தினம் ஒரு மத கலவரம் தினம் ஒரு சாதி பிரச்சினை கிளப்பி விட்டு நாட்டை அமைதி கெடுத்து கொண்டு இருக்கும் பி சே பி தலைமையிலான அரசு இருக்கும்வரை இப்படித்தான் ஆகும்


Sundad மணி
மார் 27, 2025 11:19

சனாதனத்தை ஒழித்து, மற்ற மதங்களிடம் சரண் புகுந்தால், நாட்டில் சாதி மத பிரச்சினைகள் இருக்காது. ஹிந்தியை ஒழித்தால் மற்ற மொழிகள் செழிக்கும்...


hariharan
மார் 27, 2025 10:08

பிறந்தது முதல் சுடுகாட்டுக்கு போகும்வரை வரி. தங்க நகை 3% GST, மருத்துக்காப்பீடு 18%, ரயில், விமான பயணம் 5% கருத்தடை பொருள்கள் 12%. ஆனால் பெட்ரோலுக்கு GST கிடையாது. ஆனால் அதில் மகா கொள்ளை. இவையெல்லாம் சரி. தரமான குப்பை இல்லாத சாலை, தரமான அரசு பள்ளிகள், தரமான அரசு மருத்துவமனைகள், தரமான ஏரிகள், குளங்கள் இவைகளை ஏன் அரசால் வழங்க முடியவில்லை? ஏனென்றால் அனைத்து சேவைகளும் தரமற்றதாக இருக்கிறது. லஞ்சமும், வேலைகளை குறித்த நேரத்தில் முடிக்காமல் இருப்பது, தரமற்ற அதிகாரிகள், தரமற்ற அமைச்சர்கள், தரமற்ற கட்சிகள் இருக்கும் வரை இவை அனைத்தும் தொடரும். நாம் தரமில்லாத அரசின் கையாலாகத சேவைகளுக்கு வரி கொடுத்துக்கொண்டுதான் இருக்க வேண்டும். ஆகையால்தான் வசதி படைத்தவர்கள் வெளிநாடுகளில் குடியுறிமை பெற்று சென்றுவிடுகின்றனர். இங்கு நமக்கு தேவையில்லாத விஷயங்களுக்கு முன்னுரிமை, மக்களை திருப்தி படுத்த தேவையற்ற சலுகைகள், அரசியல்வாதிகளின் ஆணவப்போக்கு, மொழியை வைத்து அரசியல், மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சி இவைகளில் சிக்கித்தவிக்காமல் அவர்கள் சென்றுவிடுகின்றனர். அதிகம் படித்த இளைஞர்களும் வெளிநாடுகளில் மேலும் படித்து வல்லுனர்களாகி அங்கேயே தங்கி விடுகின்றனர். இதுவே இன்றைய எதார்த்தம்.


Yasararafath
மார் 27, 2025 09:57

இந்தியர்கள் அனைவரையும் நாடு கடத்த வேண்டும்


Sundad மணி
மார் 27, 2025 11:21

அமைதி மார்கத்தினரும் இந்தியர் பட்டியலில் உள்ளார்களா?


Priyan Vadanad
மார் 27, 2025 08:33

பணக்காரர்கள் தங்கள் செல்வத்தை பயன்படுத்தி மக்கள் உழைப்புக்கு வழி செய்தால் நாடு எவ்வளவோ உண்மையான வளம் பெரும். ஆனால் வரியம்மா இந்த சாதாரண பணக்காரர்களை பெருந்தலைவர்களின் நண்பர்கள் தவிர்த்து விட்டு வைக்கமாட்டார்களே.


Priyan Vadanad
மார் 27, 2025 08:28

ஏழை மக்களை சுரண்டி ஒருசிலரை மட்டும் கோடிஸ்வரர்களாக்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் நன்றாக ஒர்கவுட்டாகி வருகிறது என்பதால் நமது பாரதத்துக்கு பெருமை என்று கொட்டடி முரசே.


Kumar Kumzi
மார் 27, 2025 09:43

என்ன செய்ய கொத்தடிமைகள் ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஓட்டு போட்டுட்டு இப்படியே புலம்ப வேண்டியது தான்


Ramesh Sargam
மார் 27, 2025 08:25

நேர்மையான ஆட்சி இருந்தால், ஊழல் இல்லாமல் இருந்தால் இந்தியாவைவிட்டு ஏன் வெளியேறவேண்டும்?


மூர்க்கன்
மார் 27, 2025 10:36

அப்போ இங்க நிலைமை இப்ப அப்படி இல்லைங்கிறது வெட்ட வெளிச்சமாகுது??


முக்கிய வீடியோ