உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திடீரென பாதை மாறும் பன்னீர்செல்வம்; மத்திய அரசுக்கு எதிராக ஆவேசம்

திடீரென பாதை மாறும் பன்னீர்செல்வம்; மத்திய அரசுக்கு எதிராக ஆவேசம்

சென்னை : அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பின், மத்திய அரசின் தீவிர ஆதரவாளராக இருந்த, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தன் பாதையை மாற்றி, நேற்று மத்திய அரசை கண்டித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தோல்வியை தழுவிய பின், பன்னீர்செல்வத்தை, கட்சியில் இருந்து பழனிசாமி நீக்கினார். கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இரு கட்சிகளும் தனி கூட்டணி அமைத்து களம் இறங்கின. பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்ற பன்னீர்செல்வம், ராமநாதபுரம் தொகுதியில், பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பின் அவர், தன் ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.,வில் இணைய மேற்கொண்ட முயற்சிகள், தோல்வி அடைந்தன. எனினும், பா.ஜ., கூட்டணியில் நீடித்ததுடன், ஒவ்வொரு செயலிலும், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு, அதற்கேற்ப கருத்து தெரிவித்து வந்தார். தற்போது மீண்டும் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி உருவாகி உள்ளது. இதனால் பன்னீர்செல்வம் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில், கடந்த 26ம் தேதி பிரதமர் மோடி, விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலைய துவக்க விழாவுக்காக துாத்துக்குடி வந்தார். அவரை வரவேற்க அனுமதி கோரி, பிரதமருக்கு பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. அதனால், 'இனியும் பா.ஜ.,வை நம்ப வேண்டாம். நம்மை கை கழுவிய, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியை தோற்கடிப்போம்' என, பன்னீர்செல்வத்தை வலியுறுத்தி உள்ளனர். அதைத் தொடர்ந்து, மத்திய அரசை கண்டித்து நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை:

'தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை பின்பற்றாததன் காரணமாக, 2024 - 25ம் ஆண்டு 'சமக்ரா சிக் ஷா' திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய 2,151 கோடி ரூபாய் நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது' என, மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, லோக்சபாவில் தெரிவித்துள்ளார். இந்நிதியை நம்பி, 65 லட்சம் மாணவ- - மாணவியர் தனியார் பள்ளிகளில், கல்வி பெற்று வருகின்றனர். இந்நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதன் காரணமாக, தனியார் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய துாய்மைப் பணி உள்ளிட்ட பல பணிகள் முடங்கிப் போயுள்ளன. மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக, கல்வி உரிமை சட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 25 சதவீதம் மாணவ - மாணவியரை, தனியார் பள்ளிகளில் சேர்க்க இயலாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், தனியார் பள்ளிகளில் தற்போது படித்து வரும், மாணவ - மாணவியரின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய அரசின் நடவடிக்கை, கல்வி உரிமை சட்டத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது. எனவே, 2,151 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Dharma Raj
ஜூலை 31, 2025 07:44

வடக்கே அதிமுக கூட்டணி வெற்றி பெற்று தெற்கே பல இடங்களில் டெபாசிட் இழக்கும் ஒருநாளும் எடப்பாடி முதல்வராக முடியாது


Dharma Raj
ஜூலை 31, 2025 07:36

தினம் தினம் கோழையாக வாழ்த்து சாவதை விட ஒருநாள் தைரியமாக வாழ்த்து விட்டு சாவாதே மேல் பிஜேபி நம்பாதீர்கள் , பிஜேபி ஒரு நரிக் கூட்டம் தன்னைத் தவிர யாரையும் வாழவும் வளரவும் விட மாட்டார்கள்


Mani . V
ஜூலை 31, 2025 05:20

ஓ.பி.எஸ் அய்யய்யோ நான் சொன்னது Overall Plumbing Service - OPS அந்தக் குடும்பத்தின் கக்கூஸ் அடைப்பு எடுக்கத் தயாராகி விட்டது மாதிரித் தெரிகிறது. அங்கு அதர்மயுத்தமெல்லாம் செய்ய முடியாது. அவுங்க "செஞ்சுருவாங்க".


Mani . V
ஜூலை 31, 2025 03:24

இவனெல்லாம் வாழவே தகுதி இல்லாதவன். நேற்று வரை பாஜக தன்னையும் சேர்த்துக் கொள்ளாதா? என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரிந்து, இப்பொழுது கதவு மூடப்பட்டவுடன் இப்படிப் பேசும் இந்த அதர்மயுத்தன் என்ன பிறவி? என்று தெரியவில்லை. அடுத்த ஆள் ரெடி.


MARAN
ஜூலை 30, 2025 21:31

இது ஒரு பச்சோந்தி


Nandakumar Naidu.
ஜூலை 30, 2025 21:07

சீ,சீ இந்த பழம் புளிக்கும் என்ற கதை தான் பன்னீர் செல்வம் கதை. கடைசியில் நாடும் இல்லை,வீடும் இல்லை கதை தான்.


sankar
ஜூலை 30, 2025 20:49

அன்வர் வழியில் விரைவில் ஜோதியில் ஐக்கியம்?


HoneyBee
ஜூலை 30, 2025 20:17

ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். உங்க நல்ல பெயர் கெடும். அம்புட்டு தான்


Partha
ஜூலை 30, 2025 19:34

டம்மி பீஸு


sankaranarayanan
ஜூலை 30, 2025 19:16

திடீரென பாதை மாறும் பன்னீர்செல்வம் உமக்கு இப்ப தான் சமக்கிற சிக்க்ஷ பற்றி தெரியுமா? மோடி இவரை பார்க்க அனுமதி தரவில்லையென்றால் உடனே எப்படி அய்யா உமக்கு இந்த ஞானோதயம் உண்டாயிற்று.உமக்கும் இந்த கல்விக்கும் என்னய்யா சம்பந்தம் இருக்கு.பேசாமல் திராவிட மாடல் அரசிற்கே ஆதரவு கொடுத்துவிங்க. அப்போ தான் ஒரு தொகையாவது பெட்டியில் வீடு தேடி வந்து சேரும்


புதிய வீடியோ