உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பவன் கல்யாண் வியூக வகுப்பாளர் அ.தி.மு.க.,வுக்கு வியூகம் வகுப்பு

பவன் கல்யாண் வியூக வகுப்பாளர் அ.தி.மு.க.,வுக்கு வியூகம் வகுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆந்திராவில், ஜன சேனா கட்சி துவங்கிய தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், தொடர்ந்து 10 ஆண்டுகளாக தனித்து போட்டியிட்டார். ஆனால், தோல்வியே மிஞ்சியது.கடந்த 2024 சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் தெலுங்கு தேசம் - பா.ஜ., கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். இத்தேர்தலில், ஜன சேனா போட்டியிட்ட 21 சட்டசபை தொகுதிகள், இரண்டு லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற்றது. பவன் கல்யாண், ஆந்திராவின் துணை முதல்வராகவும் ஆகி உள்ளார். அவருடைய தனித்து போட்டியிடும் முடிவுக்கு தடை போட்டது, கட்சிக்காக நியமிக்கப்பட்ட வியூக வகுப்பாளர் தான்.சமீபத்தில், தமிழகத்தில் இரு முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் பவன் கல்யாண். அதில், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' கருத்தரங்கும் ஒன்று. அக்கருத்தரங்கில் பவன் கல்யாண் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சு அனைவரையும் கவர்ந்தது. இந்த பேச்சின் பின்னணியில் வியூக வகுப்பாளர் அறிவுரையே இருக்கிறது என்பதை அறிந்த அ.தி.மு.க., தரப்பு, தங்களுக்காக தமிழகம் வந்து செயல்பட அவரை அணுகியது. அவரும் ஒப்புக்கொள்ள, அவர் தன் டீம் வாயிலாக அ.தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கிறார். அவர் வகுத்துக் கொடுத்த வியூகத்தின் அடிப்படையிலேயே, தேர்தலுக்கு எட்டு மாதங்களுக்கு முன்பாகவே, 'பஸ் யாத்ரா' சுற்றுப் பயணத்தைத் பழனிசாமி துவங்கி, மக்களை சந்தித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 09, 2025 20:54

எனக்கு தெரிந்து பிரஷாந்த் கிஷோர் , சசிகாந்த் செந்தில் , ஆதவ் அர்ஜுன் தான் ,புதுசா யாருங்க அவரு ?


கொங்கு தமிழன் பிரசாந்த்
ஜூலை 09, 2025 17:53

பிஜேபி என்கிற அரக்கன் தன் சொந்த நண்பர்களை தின்ற கதை பல மாநிலங்களில் பார்த்து விட்டோம். அதை பார்த்துக்கூட பிஜேபி கூட கூட்டணியும், அவர்களின் கைக்கூலி தெலுங்கு பவன் கல்யாணிடம் மாட்டிகொண்டது பற்றி என்ன சொல்ல?


நிக்கோல்தாம்சன்
ஜூலை 10, 2025 07:58

அப்போ வெளிநாட்டு வந்தேறி தீவிரவாதிகள் அரக்கர்கள் இல்லை


முருகன்
ஜூலை 09, 2025 16:17

பசு .......புலி வேஷம்


Vijay D Ratnam
ஜூலை 09, 2025 16:12

ஐம்பெரும் தலைவர்களான அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வே.கி சம்பத், என்.வி.நடராஜன், மதியழகன் அவர்களால் 76 ஆண்டுகளுக்கு முன் 1949 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட திமுகவில் கருணாநிதி என்ற வைரஸ் தொற்றி மெல்ல மெல்ல பரவி திமுகவை குடும்ப கம்பெனியாக்கி அப்பன், மவன், மறுமவன், பேரன், கொள்ளுப்பேரன் வரை இறக்கி வாரிசு அரசியல் என்ற தொழுநோயால் பாதிக்கப்பட்டு செல்லரித்து கிடக்கிறது. செப்டம்பர் 1949 உருவாக்கப்பட்ட திமுகவின் எக்ஸ்பைரி டேட் மே 2025. அதற்கு மேல் அது இருப்பது மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்கும், தமிழினத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும்.


P. SRINIVASAN
ஜூலை 09, 2025 14:50

அவரே ஒரு வேஸ்ட்டு.. EPS கதை 2026 இல் முடியும்.. பிஜேபி விட்டு வெளியே வரலை என்றல் இவர் கதை கிளோஸ்.


Jagan (Proud Sangi )
ஜூலை 09, 2025 18:26

நாங்களும் அதேயே தான் எதிர்பார்க்கிறோம். ADMK காணாமல் போனால், திமுகவிற்கு எதிர் பிஜேபி என்று கொண்டு செல்லலாம். திமுக எதிர்ப்பு வாக்குகளே அதிகம். தனி ஆட்சி உறுதி. இந்த குறுக்கே வரும் கவுசிக்கை அதிமுக காலி செய்தால் நலம்


அப்பாவி
ஜூலை 09, 2025 14:24

ஆந்திரா பருப்பு இங்கே வேகாது.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 10, 2025 07:59

ஓஹோ ஆந்திரா வாடு திருட்டு ரயில் எறிவந்தா வேகாது என்று சொல்றீங்களா ?


Nada Rajan
ஜூலை 09, 2025 13:25

இந்த ஆளுக்கு வேற வேலை இல்லை


முக்கிய வீடியோ