உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., - எம்.பி.,க்களை சந்திக்காமல் ஜனாதிபதி முர்மு தவிர்ப்பது ஏன்?

தி.மு.க., - எம்.பி.,க்களை சந்திக்காமல் ஜனாதிபதி முர்மு தவிர்ப்பது ஏன்?

- நமது நிருபர் -பழைய ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தக்கோரி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளிக்க, தி.மு.க., - எம்.பி.,க்கள் நேரம் கேட்டுள்ளனர். அதற்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இதுவரை அனுமதி தரப்படவில்லை என, தெரிகிறது.தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், நேற்று முன்தினம் அறிவாலயத்தில், அக்கட்சியின் எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது. அதில், 'வாக்காளர் பட்டியலில் உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன. எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டு எடுக்க வேண்டும். அதற்காக, பழைய ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல்களை நடத்த வேண்டும்' என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த தீர்மானங்களை, எம்.பி.,க்கள் அனைவரும் ஒன்றாக சென்று, டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து கொடுக்கும்படி ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படி, மூத்த எம்.பி., ஒருவர், டில்லியில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தை தொடர்பு கொண்டு, ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு எந்த பதிலும் ஜனாதிபதி மாளிகை தரப்பில் இருந்து வரவில்லை.இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: ஆயுதபூஜை விடுமுறை என்பதால், எம்.பி.,க்கள் சந்திப்பை ஜனாதிபதி தவிர்த்திருக்கலாம். மருத்துவ படிப்புககான, 'நீட்' தேர்வு எதிர்ப்பு தொடர்பாக, தி.மு.க., சார்பில், 85 லட்சம் கையெழுத்து படிவங்களை, ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கினோம்; அதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி விவகாரங்கள், ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்காக நிலுவையில் உள்ளதால், எம்.பி.,க்களை சந்திப்பதை, ஜனாதிபதி விரும்பாமல் இருக்கலாம். இருப்பினும், சட்ட ரீதியான போராட்டத்தை தொடருவோம். எங்கள் மனுக்கள் மீது ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதுவரை நாங்கள் போராடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Tetra
அக் 20, 2026 04:40

வாக்குச்சீட்டு முறை வந்தால் பெட்டிகள் எரிக்கப்படும் பூத்கள் சூறையாடப்படும். அரிவாள்கள் பேசும். வாக்குச்சாவடியில் மக்கள் இருக்க மாட்டார்கள். கழக கண்மணிகளே தங்கள் தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். இதுதாண்டா த்ராவிடம்


Aarbinms
அக் 20, 2026 03:02

அலிபாபாவே தோத்து மூலையில் ஒக்காந்துட்டார். உதவாததும் அடுத்தாத்த பாக்க பருந்துடுத்து. இதுல மிச்சம் மீதி என்ன செய்யும்?


Suppan
அக் 19, 2026 21:26

இந்த வெட்டி அங்கத்தினர்கர்களுக்குத்தான் வேறு வேலையில்லை. தீய்ந்து போன நீட் எதிர்ப்பு, பழைய வாக்குச்சீட்டு முறை, ஹிந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி, என்றெல்லம் ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து வேடிக்கை காண்பிப்பார்கள். இவையெல்லாம் கவைக்கு உதவாதவை. மக்களை ஏமாற்றும் வேலை


PARTHASARATHI J S
அக் 19, 2026 18:26

ஜனாதிபதி அம்மா அவர்களை சந்தித்தபின் அந்த எம்.பிக்களை தனது விசேஷ அதிகாரத்தால் தகுதி நீக்கம் செய்யவும்.


BALAKUMAR
அக் 19, 2026 18:25

2021 வெற்றி பெற்ற போதே பழைய ஓட்டு சீட்டு முறை வேண்டும்னு நீங்க எல்லா MLA வும் ரிசைன் பன்னிட்டு போராட்டம் பண்ணிருந்த மக்கள் உங்கள நம்பி இருப்பாங்க . இருக்குற வரை சுகமா இருந்துட்டு இப்போ வயிறு எரியுது. நாட்டுக்கு இவங்க சாபகேடு.


karupanasamy
அக் 19, 2026 16:36

வெட்டிப்பசங்க வேலையத்தகூட்டம் பூனையை சறச்சங்களாம்.


ராமகிருஷ்ணன் பரமக்குடி
அக் 19, 2026 13:46

திமுக எம்பிகள் ஏறக்குறைய எல்லாரும் குற்றவாளிகள், ஏகப்பட்ட கேஸில் சம்மந்தப்பட்டவர்கள், ஜனாதிபதியிடம் கூட குற்றச்செயல்களை செய்யக்கூடிய கும்பல் அதனால ஜனாதிபதி தவிர்த்து வருகிறார்.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 19, 2026 20:35

ஒரு கேசிலாவது ஒருவர் மீதாவது நடவடிக்கை எடுத்தார்களா?


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 19, 2026 10:42

இவர்கள் ஜனாதிபதியை சந்திப்பதே அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளத்தான் என்பதை யாரோ முன்கூட்டியே சொல்லி இருப்பார்கள்


Ramanujadasan
அக் 19, 2026 10:18

மருத்துவ படிப்புககான, நீட் தேர்வு எதிர்ப்பு தொடர்பாக, தி.மு.க., சார்பில், 85 லட்சம் கையெழுத்து படிவங்கள் எல்லாம் தசரா சுண்டல் விநியோகத்திற்கு பயன்படுத்த பட்டு விட்டன .


பல்லவி
அக் 19, 2026 09:29

எதிர் கோஷம் எழுப்ப சந்தர்ப்பம் கிடைக்கும் போது விட மாட்டார்கள் போல


புதிய வீடியோ