உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தனியார் பள்ளிகள் அங்கீகார விவகாரம்: திமுக மாஜி மகேஷுக்கு நெருக்கடி?

தனியார் பள்ளிகள் அங்கீகார விவகாரம்: திமுக மாஜி மகேஷுக்கு நெருக்கடி?

சென்னை: அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக கூறப்படும் விவகாரத்தில், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் அளித்த புகாரால், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்றிதழ்களை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சமீபத்தில் சென்னையில் வழங்கினார். இது குறித்து, தனியார் பள்ளி கூட்டமைப்பினர் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cvh6wnzn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதாவது, 'தமிழகத்தில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், தடையில்லா சான்றிதழ் வழங்க, முந்தைய ஆட்சியினருக்கு 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்தது. 'ஆனால், த.வெ.க., ஆட்சியில் 1 ரூபாய் கூட செலவு இல்லாமல் அங்கீகாரம் பெற்றிருக்கிறோம்' என, அந்த கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறினர். இதன் வாயிலாக, கடந்த தி.மு.க., ஆட்சியில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகி உள்ளன. இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆட்சி காலத்தில், பள்ளி கல்வித் துறையில் ஆசிரியர் பணியிட மாறுதல், 'ஸ்மார்ட்' வகுப்பறை திட்டம், தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் என, தொட்ட இடமெல்லாம் ஊழல் மலிந்து கிடந்தன. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விவகாரத்தில், அப்போதைய அமைச்சர் மகேஷுக்கு நெருக்கமான மூவரணி தான், இது போன்ற முறைகேட்டில் ஈடுபட்டது. முன்னாள் தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., ஒருவரும், நெருங்கிய உறவினர் ஒருவரும், மகேஷுக்கு பி.ஏ.,வாக இருந்தனர். அவர்களோடு, தி.மு.க., செய்தி தொடர்பு குழுவின் முக்கிய பொறுப்பில் இருப்பவரும் இணைந்து வசூல் செய்துள்ளார். ஆசிரியர் பணியிட மாறுதல், தனியார் பள்ளி அங்கீகாரம் விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளது. இந்த வசூலுக்காகவே, சென்னை தேனாம்பேட்டையில் ஒரு அலுவலகத்தை வைத்திருந்தனர்; முறைப்படி வழங்க வேண்டிய அங்கீகாரத்தை, லஞ்சம் வாங்கிய பின்னும் வழங்காமல் இழுத்தடித்து உள்ளனர். அந்த கோபத்தில் தான், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் வெளிப்படையாக பேட்டி கொடுத்தனர். அதன் வாயிலாக, இந்த முறைகேட்டை தற்போதைய அரசு தோண்டி எடுத்துள்ளது. தனியார் பள்ளிகள் சார்பாக அளிக்கப்படும் புகார் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், 'மாஜி' அமைச்சர் மகேஷுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Mani . V
ஜூன் 20, 2026 04:23

எது கண்டிஷனை பாலோ செய்த நம்ம ஆஸ்கர் நாயகனுக்கு நெருக்கடியா? செல்லாது, செல்லாது.


Vasan
ஜூன் 19, 2026 22:45

தலைமுறை தலைமுறையாக, தமிழகத்திற்கு உழைத்த, தியாகிகளின் மேல் அபாண்டமாக பழி போடாதீர்கள். அன்பில் ராமலிங்கம், அன்பில் பொய்யாமொழி, அன்பில் மகேஷ் ஆகியோர் தியாகிகள். அன்பில் ராமலிங்கம் அவர்கள் கலைஞர் கருணாநிதியுடன் சேர்ந்து தமிழ்நாட்டிற்க்காக பாடுபட்டார், அவர் மகன் பொய்யாமொழி அவர்கள் இவர் மகன் ஸ்டாலினுடன் சேர்ந்து அந்த உழைப்பை தொடர்ந்தார், அவர் பேரன் மகேஷ் இவர் பேரன் உதயாவுடன் சேர்ந்து அந்த உழைப்பை மேன்மேலும் தொடர்ந்தார். நாட்டின் நன்மைக்காக, தலைமுறை தலைமுறையாய் பணியாற்றினால், இப்படி தான் கெட்ட பெயர் கிடைக்கிறது. எல்லாம் கலியுகம்.


VKRISHNAMOORTHY
ஜூன் 22, 2026 16:58

அது அன்பில் ராமலிங்கம் இல்லை அன்பில் தர்மலிங்கம்


aru
ஜூன் 19, 2026 20:37

முன்னால் ஊழல் அமைச்சர்களை பிடித்து திகார் ஜெயிலில் போட வேண்டும்


Vasan
ஜூன் 19, 2026 23:01

It will be Houseful. Thihar jails Tamilnadu branch will be constructed.


சிவகுமார்
ஜூன் 19, 2026 19:26

கடவுளே கடவுளே!


JeevaKiran
ஜூன் 19, 2026 18:22

இத்தனைக்கும் காரணம் லஞ்சஒழிப்பு துறைதான். இவர்கள் சரியாக வேலை செய்தால் லஞ்சம் என்ற ஒன்று இருக்காதே? அதனால் முதல் குற்றவாளியாக லஞ்சஒழிப்பு துறையைத்தான் சேர்க்கணும்


kulanthai kannan
ஜூன் 19, 2026 17:40

ஜாடையே சரியில்லையே


lana
ஜூன் 19, 2026 16:33

சரி லஞ்சம் இப்போ வாங்கவில்லை அதுக்கு ஆக பள்ளியில் டொனேஷன் இல்லாம அட்மிஷன் கொடுப்பார்களா. இவர்கள் என்னவோ யோக்கியன் மாதிரி


பைரவன்
ஜூன் 19, 2026 16:15

திராவிஷ மாடலின் ஒரு கொசுறு தான் இது. திராவிஷங்கள் மீண்டும் தலைதூக்க கண்டிப்பாக நாம் அனுமதிக்கக் கூடாது.


அப்பாவி
ஜூன் 19, 2026 16:03

அஞ்சு வருஷமா ஒரு திருட்டு கும்பல் ஆட்சி செய்தது.


சுலைமான் சேட், பரங்கிப்பேட்டை
ஜூன் 19, 2026 15:55

இவ்ளோ கருத்துக்கள் போடும் நீங்க ஒருத்தரும் உச்ச நீதிமன்றம் என்ற ஒன்றை மறந்து விட்டீர்கள்.. எதற்கு சிபல், சிங்வி போன்ற மகான்கள் உள்ளனர்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை