உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஹைட்ரஜன் குண்டு எப்போ தான் வெடிக்கும்?

ஹைட்ரஜன் குண்டு எப்போ தான் வெடிக்கும்?

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ஓட்டு திருட்டு என்கிற பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்.சமீபத்தில் இது தொடர்பாக மீடியாவை சந்தித்தார். தான் வெளியிடப் போவது ஒரு, 'ஹைட்ரஜன்' குண்டு என பத்திரிகையாளர் சந்திப்பிற்கு முன்பாக சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். கர்நாடகாவின் ஆலந்த் சட்டசபை தொகுதியில் 6,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது குறித்த விசாரணை நடத்தாமல் உள்ளது தேர்தல் ஆணையம் என குற்றஞ்சாட்டினார். ஆனால், இது முற்றிலும் தவறு. இது குறித்து ஆணையம் அப்போதே போலீசில் புகார் அளித்துள்ளது என, தேர்தல் ஆணையம் பதில் அளித்துவிட்டது. மேலும், 'ஆன்லைன்' முறை யில் வாக்களர்களை நீக்க முடியாது என, ராகுல் புகாருக்கு மறுப்பு தெரிவித்தது.தவிர, இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்தான் வெற்றி பெற்றுள்ளார். இந்த விபரங்கள் வெளியான பின், தன் குற்றச்சாட்டுகளை அடக்கி வாசித்தார் ராகுல்.இதற்கிடையே டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் ஒரு விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது. முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஒருவர் ராகுலுக்கு மிகவும் நெருக்கமாம். இவருக்கும் இப்போதுள்ள தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும் ஆகாதாம்.இதனால் ஆணையத்திற்கு எதிராக ராகுலிடம் பல விஷயங்களை சொல்லி ஞானேஷ் குமாருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறாராம், டில்லியில் வசிக்கும் இந்த முன்னாள் தேர்தல் ஆணையர்.முன்னாள் தேர்தல் ஆணையர்கள் ஒரு 'வாட்ஸாப்' குழு நடத்தி வருகின்றனராம். அதில் இந்த தேர்தல் ஆணையர் குறித்து பல விஷயங்கள் விவாதிக்கப்படுகிறதாம். இதற்கிடையே, ராகுலின் ஹைட்ரஜன் குண்டு புஸ்வாணமாகிவிட்டதே என கிண்டலடிக்கின்றனர் பா.ஜ.,வினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sun
செப் 21, 2025 23:31

எப்புடியும் கல்யாணத்துக்கு முன்னாடி வெடிச்சிடும்!


Balasubramanian
செப் 21, 2025 21:27

மக்கள் இனியும் இவரை நம்புவதற்கு பதில் டிரம்பை நம்பலாம்!


சிட்டுக்குருவி
செப் 21, 2025 20:47

பாம் மெண்டாலிட்டி அழிக்கும் மெண்டாலிட்டி .அழிக்கும் மெண்டாலிட்டி உள்ளவர்கள் ஒருபோதும் ஆக்கபூர்வமாக நினைக்கமாட்டார்கள் .ராகுல் காந்தி தனக்கிருந்த சிறிது ஆக்கபூர்வ சிந்தையையும் இழந்துவிட்டார் என்றே தோன்றுகின்றது .அவருக்கு ஒரு மனோதத்துவ மருத்துவர் தேவைப்படுகின்றார் .காங்கிரெஸ்ஸார் புரிந்து செயல்படுவது அவசியம் .


RAAJ68
செப் 21, 2025 17:21

உடல் முழுவதும் விஷம்.உள்ளத்தில் கல்மிஷம். அகங்காரம் ஆத்திரம் இயலாமை எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற பேராசை.


திகழ் ஓவியன் எனும் Oviya Vijay
செப் 21, 2025 14:04

இங்கே தீய முக ரோபோக்கள் வன்ம கருத்து சொல்ல வராது...


சோமசுந்தரபிள்ளை
செப் 21, 2025 12:48

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டு பீகார் தேர்தலுக்குப் பிறகு தெரிந்துவிடும்


vbs manian
செப் 21, 2025 09:17

இப்போதைக்கு இவர்தான் பெரிய ஹைட்ரஜன் bomb.


வாய்மையே வெல்லும்
செப் 21, 2025 06:15

எதிரிக்கு எதிரி கண்டிப்பாக வீணா வெட்டிப்பேச்ச்சு பேசி காலத்தை ஒட்டி பழகும் கலகசிகாமணி வெத்துவேட்டு திருவாளர் ராவுல் வின்சியை சேரும் என சொன்னால் அதற்கு ஆயிரம் அல்லக்கைகள் மொகரையில் கோவம் பொத்துக்கிட்டு வரும். இன்னிக்கு சொல்றேன் ராஜீவ் ராகுலின் வளர்ச்சியை பார்த்து மேலிருந்து கண்ணீர் விடுவார். அப்படியே பிரசுரிக்கவும்


Moorthy
செப் 21, 2025 05:15

இப்போது ஹைட்ரஜன் குண்டு நமத்து போனதால் ஹெச் 1 பி குண்டை கையில் எடுத்துள்ளார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை