சென்னை: பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும், கட்சியை தன் கட்டுப்பாட்டில் அன்புமணி வைத்திருப்பதாகவும் ராமதாசை சமாதானப்படுத்தும் முயற்சியை குடும்பத்தினர் தொடர்வதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bw4vd4mj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ம.க., தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நீக்கி, செயல் தலைவராக நியமித்தார். ஆனாலும், 'தலைவராக தொடர்ந்து செயல்படுவேன்' என அறிவித்துள்ள அன்புமணி, மே 11ல் மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், சமாதான முயற்சியை தொடரும் குடும்பத்தினர், ராமதாஸ், அன்புமணி இருவரிடமும் தொடந்து பேசி வருகின்றனர். இது தொடர்பாக, பா.ம.க., நிர்வாகிகளிடம் பேசியபோது, 'ராமதாஸ் மீது கட்சி நிர்வாகிகள் பெரும் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தாலும், 90 சதவீதத்திற்கும் அதிகமான நிர்வாகிகள், அன்புமணி பக்கமே உள்ளனர். கட்சியை முழுக்க அன்புமணியே கட்டுக்குள் வைத்துள்ளார்.'கட்சியின் அதிகாரப்பூர்வ இ - மெயில் முகவரி உள்ளிட்டவை அன்புமணியிடமே உள்ளன. அதனால்தான், ராமதாஸை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட கட்சியின் பொருளாளர் திலகபாமாவை கட்சியில் இருந்து விலக வலியுறுத்தி, புதிய இ - மெயில் முகவரியில் இருந்து கட்சியின் பொதுச்செயலர் வடிவேல் ராவணன் அறிக்கை அனுப்பிஉள்ளார்' என்றனர்.திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, ராமதாஸ் நேற்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின், தன்னை சந்தித்த கட்சி நிர்வாகிகளுடன், 'தலைவராக தொடருவேன்' என்ற அன்புமணியின் அறிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.அப்போது, பொதுக்குழுவை கூட்டி, முறைப்படி தலைவர் பதவியை தான் ஏற்பது குறித்து, ராமதாஸ் ஆலோசித்ததாக தெரிகிறது.அதனால், அன்புமணியின் அறிவிப்புக்கு, ராமதாஸ் எதிர்வினை எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு, அக்கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது.