உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., கூட்டணியை விரும்பும் ராமதாஸ்; மூத்த அமைச்சர் வாயிலாக ரகசிய துாது

தி.மு.க., கூட்டணியை விரும்பும் ராமதாஸ்; மூத்த அமைச்சர் வாயிலாக ரகசிய துாது

தி.மு.க., கூட்டணியை விரும்பும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அதற்காக மூத்த அமைச்சர் ஒருவர் வாயிலாக, முதல்வருக்கு துாது அனுப்பியுள்ளார்.கடந்த 2021 சட்ட சபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு ஐந்து தொகுதிகளில் மட்டுமே பா.ம.க., வெற்றி பெற்றது; லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் தோல்வியை தழுவியது. அதனால், அடுத்தாண்டு ஏப்ரலில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், எந்த கூட்டணியில் பா.ம.க., இடம்பெறும் என்ற, கேள்வி எழுந்துள்ளது.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தி.மு.க., கூட்டணியை விரும்புவது, மாமல்லபுரம் மாநாட்டின் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் நடத்தப் போவதாக கூறிய ராமதாஸ், 'இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிடுவதற்கு, முதல்வர் ஸ்டாலினை விட்டால் வேறு ஆளில்லை' என்றும் குறிப்பிட்டார்.இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச, வடமாவட்டத்தை சேர்ந்த மூத்த அமைச்சர் வாயிலாக, ராமதாஸ் முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது, கூட்டணியை உறுதி செய்யவும் ராமதாஸ் தரப்பில் ஆர்வம் காட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.அதே நேரம், 'பா.ம.க., இடம்பெறும் கூட்டணியில், வி.சி., இடம்பெறாது' என, அக்கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்து பேசி வருகிறார். எனவே, அவரை சமரசப்படுத்தினால் மட்டுமே, பா.ம.க.,வை தி.மு.க., கூட்டணியில் சேர்க்க முடியும் என்ற நிலை உள்ளது.அதனால், கூட்டணிக்குள் வர வேண்டும் என்றால், வி.சி.,யை சமாதானப்படுத்தும் பொறுப்பை பா.ம.க., தான் செய்ய வேண்டும் என, தி.மு.க., தரப்பில் கூறியிருப்பதாக தெரிகிறது. அதை மனதில் வைத்தே, 'சித்திரை முழுநிலவு மாநாட்டில், பட்டியலின மக்களுக்கு மேலும் 2 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Jagan (Proud Sangi )
மே 13, 2025 18:55

தலித் இளைஞர்கள் பெரிய அளவில் விஜய் பக்கம் போகிறார்கள் என்பது சில கட்சிகள் நடத்திய முதற்கட்ட சர்வேக்களில் தெரிய வருவதால், விசிக போனால் நட்டம் இல்லை என்பதால் இந்த நகர்வு.


ராமகிருஷ்ணன்
மே 13, 2025 18:08

திண்டிவனம், பண்ருட்டி ஏரியாவில் உள்ள மரவெட்டி கும்பலுக்கு இவ்வளவு ஆசைகள் கூடாது. அப்பன் திமுக ஆதரவு, மவன் அதிமுக ஆதரவு, குடுமிப்பிடி சண்டை TVK வின் பில்டப்பு அதிகம் தான். அதனால எடப்பாடி உஷாராக பி ஜே பி யுடன் கூட்டணி சேந்துட்டாரு. சென்ற தேர்தலில் ஓட்டுகளை தொகுதி வாரியாக கூட்டினால் பி ஜே பி யின் கூட்டணி தான் ஆட்சிக்கு வரும் என்று தெளிவாக தெரிகிறது.


Narasimhan
மே 13, 2025 17:10

சீக்கிரம் அதை செய்யுங்கள். ஆமை புகுந்துடிச்சுனா மக்களுக்கு நல்லது


Bala
மே 13, 2025 16:17

அட கழிசடையே இதுக்கு பருத்தி மூட்டை கோடௌனிலேயே இருந்திருக்கலாம். இந்த மாதிரி ஆட்களாலதான் தமிழனை எவனும் மதிப்பதில்லை. ஒரு அரசியல் கட்சி ஒட்டுமொத்த தமிழர்களின் நலனுக்காக இருக்கவேண்டுமே தவிர ஒரு குடும்பத்தின் நலனுக்கு மட்டுமே அல்லது ஒரு ஜாதியின் நலனுக்கு மட்டுமே செயல்பட்டால் எல்லாம் வல்ல இறைவன் பேரருளாளனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 13, 2025 13:58

பாமக எந்த அணியில் உள்ளதோ அந்த அணி தோற்றுவிடும். 2026 தேர்தல் முடிவுகள் கருத்து கணிப்பு


Haja Kuthubdeen
மே 13, 2025 12:36

ஒவ்வொரு தடவையும் தப்பு கணக்கா! பாமக எதிர் பார்க்கும் தொகுதிகள் நிச்சயம் திமுக கூட்டணியில் வாய்ப்பே இல்லை...


Balaji Radhakrishnan
மே 13, 2025 12:33

ஊழலுக்கு துணை போகும் ராமதாஸ்.


Rajasekar Jayaraman
மே 13, 2025 11:55

இவனுக்கு பணம் பதவி தான் முக்கியம் தமிழகம் எப்படி குட்டி சுவறானாலும் கவலை இல்லை இந்த கூட்டத்தை தனிமை படுத்த வேண்டும் ஜெய்ஹிந்த்.


Youvaraj V
மே 13, 2025 10:40

ஐயாவின் கணக்கு தப்பாய் போகும்.


theruvasagan
மே 13, 2025 10:20

பெட்டி மேலே பெட்டி வந்து என்னைச் சேரும். அதை வாங்கி வந்த பெருமை எல்லாம் என்னயே சேரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை