உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சிவகங்கை பெண் டாக்டரை தாக்கியதும் காட்டேஜ் ஓனரை கொன்றதும் ஒரே நபர்!

சிவகங்கை பெண் டாக்டரை தாக்கியதும் காட்டேஜ் ஓனரை கொன்றதும் ஒரே நபர்!

சிவகங்கை: சிவகங்கை பயிற்சி பெண் டாக்டரை தாக்கிய நபரும், கொடைக்கானல் காட்டேஜ் உரிமையாளரை எரித்துக் கொன்றதும் ஒரே நபர் என, தெரியவந்துள்ளது. அவரை போலீசார் விரட்டி பிடித்ததில் கையில் முறிவு ஏற்பட்டது.சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மார்ச் 24 இரவு, 11:00 மணிக்கு பெண் பயிற்சி டாக்டரை ஒருவர் தாக்கினார். அவரை பிடிக்க டி.எஸ்.பி., அமலஅட்வின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் சிவகங்கை, ஆவரங்காட்டை சேர்ந்த சந்தோஷ், 20, என்பவரை அடையாளம் கண்டு, ஆவரங்காட்டில் பதுங்கி இருந்த அவரை பிடிக்க சென்றனர். போலீசாரை கண்டதும் சந்தோஷ் ஓடிய போது கீழே விழுந்து வலது கையில் முறிவு ஏற்பட்டது. போலீசார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lu1redfw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போலீசார் கூறியதாவது: சந்தோஷ் சிறுவயதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். பெற்றோர் அவரை அழகர்கோவில் அருகே உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கொடைக்கானலை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சிவராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.வேலைக்காக ஹோட்டலுக்கு சந்தோஷ் மார்ச் 13ல் நண்பர்களுடன் சென்றார். அங்கு மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களுடன் சேர்ந்து சிவராஜை கொலை செய்து எரித்தார். அங்கிருந்து தப்பிய சந்தோஷ் உள்ளிட்ட நண்பர்கள் சென்னை சென்றனர்.சிவகங்கை திரும்பிய சந்தோஷ் அன்று இரவு, நேரு பஜாரில் உள்ள பாரில் மது அருந்தினார். இரவு எங்கே செல்வது என்று தெரியாமல் மருத்துவக்கல்லுாரி அருகே துாங்கினார். இரவு, 11:00 மணிக்கு பயிற்சி பெண் டாக்டர் போன் பேசியபடி செல்வதை பார்த்தார்.அவரது போன், செயின் உள்ளிட்டவற்றை பறிப்பதற்காக அவரை பின்தொடந்த சந்தோஷ் அவரை தாக்கினார். அப்போது டூ வீலரில் யாரோ வருவதை உணர்ந்தவர் அங்கிருந்து தப்பித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
மார் 28, 2025 20:52

கொலை, கொள்ளை, பலாத்காரம் போன்ற குற்றம் செய்பவர்களை கண்டதும் சுட்டுத்தள்ளவேண்டும். சுட்டுப்பிடிப்பது, வழக்கு, ஜாமீன் என்று இழுத்தடிப்பது நிறுத்தப்படவேண்டும்.


Karthik
மார் 28, 2025 20:26

இதமாரி கேஸ் மறுக்கா வந்தா.. குற்றவாளியை பிடிக்க துரத்தி சென்றபோது கால் தடுக்கி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்புடின்னு பேட்டி குடுத்துட்டு, அவனிடம் போதுமான ஸ்டேட்மென்ட்ட வாங்கின பெறவு "" சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்"" னு சொல்லி கேஸ்ஸ முடிச்சுவுடுங்க காவல்துறையே.. பூமிக்கு தேவையில்லாத பாரம் இந்த ஆணி.


Kogulan
மார் 28, 2025 16:05

சட்டம் தன் கடமையை சரிவர செய்யாதவரைக்கும் தவறு செய்ய பயம் வேண்டாம்,


Siva Balan
மார் 28, 2025 11:15

ஒருத்தனுக்கு மாவு கட்டு போட்டாலே அடுத்து அவன் திராவிட மாடலில் அமைச்சராவதற்கு தகுதியுடையவன் என்று அர்த்தம்.


Haja Kuthubdeen
மார் 28, 2025 10:02

இவனை அடித்தே கொல்லனும்..வெளியே விட்டால் பலரை கொல்லுவான்.


அப்பாவி
மார் 28, 2025 09:45

மாவுக்கட்டு போட்டாச்சுல்ல... வெளங்கிடும். அண்ணா , கலைஞர் பொறந்த நாள் வந்துரும்.


naranam
மார் 28, 2025 09:32

இவனை உடனே கொன்று விடுங்கள்.


முருகன்
மார் 28, 2025 08:10

இவனை தூக்கில் போட வேண்டும்


முக்கிய வீடியோ