சென்னை: 'யு டியூபர்' சவுக்கு சங்கர் வீட்டை சூறையாடிய நபர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.சென்னை, கீழ்ப்பாக்கம், தாமோதரமூர்த்தி தெருவில் வாடகைக்கு குடியிருக்கும், 'யு டியூபர்' சவுக்கு சங்கர் வீட்டை, மர்ம நபர்கள் நேற்று முன்தினம் சூறையாடினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wag9rq4w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 கமிஷனர் பரிந்துரை
டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் மலத்தைக் கரைத்து தெளித்து அசிங்கப்படுத்தினர். அப்போது வீட்டில், சங்கரின், 68 வயதான தாய் கமலா இருந்தார். இச்சம்பவம் குறித்து, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில், அவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, டி.ஜி.பி., அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கமலா அளித்த புகார் ஏற்கப்பட்டு, சி.எஸ்.ஆர்., ரசீது வழங்கப்பட்டு உள்ளது. சங்கர் அளித்த பேட்டியில், சென்னை மாநகர காவல் துறையினரையும், போலீஸ் கமிஷனர் மீதும் சில குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதனால், மற்றொரு விசாரணை அமைப்புக்கு மாற்ற, கமிஷனர் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில், கமலாவின் புகார் மனு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது' என கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட தகவல் போலீசாருக்கு நன்கு தெரியும். சம்பவ இடத்திலும் இருந்துள்ளனர். சந்தேகங்கள்
குற்றத்தில் ஈடுபடும் நபர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிப்பர். தப்ப முயன்றால், பிடித்துச் செல்வர். ஆனால், ஒரு கும்பல் வீட்டை சூறையாடுவதும், அங்கு மலத்தை வீசி அசிங்கப்படுத்துவதும் தெரிந்து இருந்தும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது, பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.சம்பவம் குறித்து போலீசார் வழக்கும் பதிவு செய்யாமல் உள்ளனர். சி.பி.சி.ஐ.டி., போலீசாரும் விசாரணையை துவக்காமல் உள்ளனர். அவர்கள் விரைந்து விசாரித்து, குற்றம் செய்த மர்ம நபர்களை சட்ட ரீதியாக கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
'காங்கிரஸ் மெம்பர் கார்டு இருக்கா?'
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: இந்தியாவில் இல்லாத ஒரு அற்புதமான திட்டத்தை, அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். இத்திட்டத்தில் தவறு இருந்தால், தகுந்த அதிகாரியிடம் முறையிடலாம் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, உண்மையை கொண்டு வரலாம். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், தொழில் முனைவோர் திட்டத்தின் பயனாளிகளை கொச்சைப்படுத்தி பேசக்கூடாது. குறிப்பிட்ட அந்த பயனாளிகளை, 'குடித்து விட்டு படுத்துக் கொள்கின்றனர். இவர்கள் தகுதி இல்லாதவர்கள். மலம் அள்ளுபவர்கள்' என, பேசக்கூடாது.யு - டியூபர் சவுக்கு சங்கர் அப்படித்தான் பேசியிருக்கிறார். அவர் அப்படி பேசியது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்; யாரும் தப்பிக்க முடியாது. அவரது வீட்டில், மலம் வீசியவர்கள் யாரிடமாவது காங்கிரஸ் உறுப்பினர் கார்டு இருக்கிறதா? இருந்தால் கொடுக்கச் சொல்லுங்கள். மாநகராட்சியில், நான் ஏதாவது ஒரு கான்ட்ராக்ட் எடுத்திருந்தால், அதையும் நீதிமன்றம் கொண்டு செல்லுங்கள்; வழக்கு போடுங்கள். தமிழக காங்., தலைவர் பதவியில் இருந்து என்னை எடுக்க வேண்டும் என்பதற்காக, திட்டமிட்டு இப்படி பொய் தகவல் பரப்புகின்றனர். கூடவே, அந்த இடத்தில் தனக்கு வேண்டப்பட்டவரை உட்கார வைக்க வேண்டும் என்பதற்காகவும் சவுக்கு சங்கர், பொய்யான தகவல் பரப்பி வருகிறார். அவரது செயல் திட்டம் பற்றி, தமிழக மக்களுக்கும் தெரியும். தமிழகத்தில் உள்ள தலைவர்களுக்கும், டில்லியில் உள்ள தலைவர்களுக்கும் தெரியும். மலம் வீசியதை யாரும் அனுமதிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியும் அனுமதிக்கவில்லை. சவுக்கு சங்கர் உள்நோக்கத்துடன், இந்த செயல் திட்டத்தை நிறைவேற்றியுள்ளார். என்னை திட்டினால், அவருக்கு பணம் நிறைய கிடைக்கும் என்றால் சம்பாதிக்கட்டும்; அவருக்கு வாழ்த்துகள்.இவ்வாறு அவர் கூறினார்.