உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மாணவர் சேர்க்கை சரிவு எதிரொலி: 70 தனியார் பாலிடெக்னிக்கிற்கு பூட்டு

மாணவர் சேர்க்கை சரிவு எதிரொலி: 70 தனியார் பாலிடெக்னிக்கிற்கு பூட்டு

சென்னை: மாணவர் சேர்க்கை சரிவால், நடப்பு கல்வியாண்டு, 70 தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள், தங்கள் கல்வி நிறுவனத்தை மூட, உயர்கல்வித் துறையிடம் அனுமதி கோரி உள்ளன. தமிழக உயர்கல்வித் துறையின், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ், 55 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள்; 400க்கும் அதிகமான தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. சில ஆண்டுகளாக, டிப்ளமா படிப்பின் மீது, மாணவ, மாணவியரிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. இதனால், டிப்ளமா மாணவர் சேர்க்கை, கடும் சரிவை சந்தித்து வருகிறது. நடப்பு கல்வியாண்டு, அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மொத்தமுள்ள 22,600 இடங்களில், 12,000 இடங்கள்; தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1.30 லட்சம் இடங்களில், 24,000 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. தொடர் மாணவர் சேர்க்கை சரிவால், நடப்பு கல்வியாண்டில், 70 தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள், மாணவர் சேர்க்கையில் பங்கேற்கவில்லை. இக்கல்லுாரிகள், தங்களின் கல்வி நிறுவனத்தை மூட அனுமதி கோரி, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துக்கு கடிதம் எழுதி உள்ளன. அந்த கல்வி நிறுவனங்களிடமும், உயர்கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளது. இது குறித்து, உயர்கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: கல்வி நிறுவனத்தை மூடினால், அங்கு பணியாற்றும் விரிவுரையாளர்கள் நிலை, ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் நிலை என்ன, அவர்களின் மாற்று வேலை வாய்ப்பு குறித்து, கல்வி நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும், 70 கல்வி நிறுவனங்களில், மற்ற வகுப்புகளில் மாணவர்கள் படித்து வந்தால், அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும், கல்வி நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Nryn
செப் 03, 2026 18:09

it's a bad trend. Once considered equivalent to Engineering degrees, many students opted for the course and get unto employment. May be due to poor standard in politechnic institutions as seen everywhere. The standard should be improved in such a manner that industries should go to Politechnics for recruiting. Polytechnic institutions can have collaboration with industries for imparting practical training in their factories to the students. The fees can be subsidized by govt to attracts. Improving educational standard is vital. If this is not happening even (poor standard) medical educational institutions in future may also be shunned by students. People want improvement in education quality.


சந்திரசேகர்
செப் 03, 2026 08:55

ஒரு நேரத்தில் டிப்ளோமா படிப்பது கனவாக இருந்தது. ஆனால் இன்று இதை படிக்க ஆளில்லை என்பது வருத்தமான விஷயமாக உள்ளது. இன்று எல்லோரும் ஏதோ ஒரு படிப்பில் டிகிரி வாங்கி அரசாங்கம் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்று அரசாங்க ஊழியராக ஆசைப்படுகிறார்கள். ஆனால் எல்லோருக்கும் அரசாங்கத்தால் வேலை கொடுக்க முடியாது. ஒரு லட்சம் சீட்டுக்காக பத்து லட்சம் பேர் தேர்வு எழுதும் நீட் தேர்வை போல. மாற்று எதுவென்பதை தீர்மானிக்க வேண்டும்


vijay
செப் 03, 2026 06:05

pavam..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை