உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தகவல் தொழில்நுட்பத்தில் பின்தங்கிய தமிழக காவல் துறை: ஐகோர்ட் அதிருப்தி

தகவல் தொழில்நுட்பத்தில் பின்தங்கிய தமிழக காவல் துறை: ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: தகவல் தொழில்நுட்பத்தில், தமிழக காவல் துறை பின்தங்கி இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி, 13.66 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, சென்னையைச் சேர்ந்த ஜெயசிங் வசந்த் ரஞ்சித் என்பவருக்கு எதிராக, வேலுாரை சேர்ந்த மனோகர் தாஸ் என்பவர், 2020ல் சென்னை, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், 2022ல் மனோகர் தாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரணையின் போது, இரண்டு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று, காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை முடித்து வைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி நடவடிக்கை எடுக்கவில்லை என, மனோகர் தாஸ் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்துள்ள உத்தரவு:நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றும் வகையில், உரிய விதிகளை காவல்துறை வகுக்க வேண்டும். மேலும், நீதிமன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதை, 'ஆன்லைன்' முறையில் கண்காணிப்பதாக கூறினாலும், கள நிலவரம் வேறாக இருக்கிறது.பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும், நீதிமன்ற கதவை தட்ட வேண்டி உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில், தமிழக காவல் துறை பின்தங்கி உள்ளது. விசாரணை அமைப்புகளை முழுமையாக, 'டிஜிட்டல்' மயமாக்குவதற்கான காலம் வந்து விட்டது. நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது சட்டப்படியும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதற்கான நிலையான வழிகாட்டுதல்களை பிறப்பித்து, அவற்றை பின்பற்றுவதை, டி.ஜி.பி.,யும் உள்துறையும் உறுதி செய்ய வேண்டும்.நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து, போலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.,க்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

sridhar
மே 03, 2025 12:34

வீண் பழி. நாங்கள் எல்லாவற்றிலும் தான் பின்தங்கி இருக்கிறோம், சாராய வியாபாரம் தவிர.


Rengaraj
மே 03, 2025 10:38

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் , பலமுறை சொல்லியும் பல்வேறு அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கூட தமிழக அரசு கோர்ட் உத்தரவை மதிப்பதில்லை அல்லது சுணக்கம் காட்டுகின்றன இதெற்கெல்லாம் காரணம் அரசுக்கு வக்காலத்து வாங்கும் , அரசுக்கு ஆதரவாக வாதாடும் வக்கீல்கள், ப்ளீடர்கள், அட்டர்னி இப்படி தமிழக அரசு சட்டத்துறை நிர்வாகமே ஒழுங்காக செயல்படுவதில்லை. இந்த துறைக்கு , இந்த துறையில் வேலை செய்யும் இவர்களுக்கு அரசு தரப்பில் எதற்கு ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் தரவேண்டும் ? இவர்களுக்கு தண்டனையும் அபராதமும் மீண்டும் வாதாடுவதற்கு தடையும் போடவேண்டும். அப்போதுதான் இந்த துறை ஒழுங்காக வேலை செய்யும்.


M S RAGHUNATHAN
மே 03, 2025 09:44

யாரோ எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி நடக்கிறது என்று கொக்கரித்தார்.


அப்பாவி
மே 03, 2025 08:37

ரெண்டு மாசத்துல இறுதி அறிக்ஜை தாக்கல் செய்யப்படும்னு போலீஸ் சொல்லிச்சாம். உடனே ஜட்ஜுங்க வழக்கை முடிச்சு வெச்சுட்டாங்களாம்.. சினிமால, டி.வி சீரியல்ல கூட இதுமாதிரி காமிச்சா கூட ஒத்துக்க மாட்டாங்க எசமான். அதுவும் தமிழ்நாட்டு போலீச நீங்க இந்த அளவுக்கு நம்பறீங்கன்னா உங்களுக்குத்தான் தொழில் நுட்பம் பத்தலை


RAMAKRISHNAN NATESAN
மே 03, 2025 08:18

மன்னர் குடும்ப ஆட்சி யில எதுலயும் டுமீலகம் பின்தங்காதே ? இது ஏதோ ஆரியசதியாக இருக்கும் ...... உ பி [கூலிப்படை] கோபம் .......


rama adhavan
மே 03, 2025 07:54

போலீஸ் என்னும் ஆங்கில சொல்லுக்கு ஒவ்வொரு எழுத்துக்கும் அருமையான பொருள் உண்டு. அது தற்போதைய தமிழக போலீசிற்கு தெரிய வாய்ப்பு இல்லை. இதனை தமிழில் காவல் என பிளாட்களின் செக்யூரிட்டி என்பது போல் மாற்றி பெருமையை குறைத்து விட்டனர். தமிழில் வேறு நல்ல சொல்லே இல்லையா?


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 03, 2025 07:34

அதெல்லாம் சரி. அந்த விண்ணப்பதாரருக்கு என்ன விடை? சும்மா பிலிம் காட்டினால் போதுமா?


G Mahalingam
மே 03, 2025 07:11

திருடனுடன் போலீஸ் கைகோர்த்து கொள்ளை அடிப்பது கடந்த 10 ஆண்டாக நடை பெறுகிறது. இது இந்தியா முழுவதும் நடக்கிறது. போலீசை பல ரவுடிகள் அடிப்பதும் இப்போது அதிகம். காரணம் அவனிடம் போன தடவை மாமூல் வாங்கி இருப்பான்.


raja
மே 03, 2025 07:07

இதுக்கும் தான் தான் திருட்டு திராவிட மாடல் அரசுதான் காரணம் என்று ஸ்டிக்கர் ஒட்டுவானா சோன முத்து...


raja
மே 03, 2025 07:04

திருட்டு மாடல் அரசால் தான் மாநிலம் நம்பர் ஒன்னு நம்பர் ஒன்னு என்று பெருமை படுவது எல்லாம் பொய்யா கோவால்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை