உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வடக்கின் ஆதிக்கத்திற்கு தமிழகம் தலைவணங்காது; அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்

வடக்கின் ஆதிக்கத்திற்கு தமிழகம் தலைவணங்காது; அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்

சென்னை: ''வடக்கே இருந்து வரக்கூடிய எந்த ஒரு ஆதிக்கத்திற்கும், தமிழக வரலாற்றில் எந்த காலகட்டத்திலும் தலை வணங்கியதில்லை,'' என, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.சட்டசபையில் நேற்று பட்ஜெட் விவாதத்திற்கு பதில் அளித்து, தங்கம் தென்னரசு பேசியதாவது: மத்திய அரசு, கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி, 19,068 கோடி ரூபாய் மட்டும் தான். ஆனால், உ.பி.,க்கு, 2025 - 26ல் மட்டும் ஒதுக்க உத்தேசித்துள்ள தொகை, 19,858 கோடி ரூபாய். அதாவது, தமிழகத்துக்கு மூன்று ஆண்டுகளில் கொடுக்கக்கூடிய தொகை, ஒரே ஆண்டில், உ.பி.,க்கு வழங்கப்பட்டுள்ளது.தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வந்தாலும் கூட, இந்தியாவிலேயே மிக அதிகமான மதிப்பீட்டிலான சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை, மத்திய அரசின் நிதி உதவி இல்லாமல், தன் சொந்த நிதி ஆதாரங்களை கொண்டு, தமிழகம் செயல்படுத்த ஆரம்பித்தது. பிரதமரை நேரில் சந்தித்து முதல்வர் வற்புறுத்திய பின்தான், மத்திய அரசு தன் பங்கை வழங்கியது.உலகெங்கும் பல நாடுகளும், 'செமி கண்டக்டர்' துறையில் போட்டி போட்டு செயலாற்றி வருகின்றன. எனவே, அந்த துறையில் தமிழகம் முன்னிலை பெற வேண்டுமென்ற நோக்கத்துடன், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து, செமி கண்டக்டர் திட்டம் ஒன்றை, ஐந்தாண்டு திட்டமாக அரசு அறிவித்துள்ளது. அதில், இரு செமி கண்டக்டர் தொழில் பூங்காக்கள், கோவை சூலுார், பல்லடத்தில் நிறுவப்பட உள்ளன.

தொழில் பூங்காக்கள்

கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்தில், 14.17 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்து இயங்கி வருகின்றன. தற்போது, 32.10 லட்சம் தொழில் நிறுவனங்கள் இயங்குகின்றன. நான்கு ஆண்டுகளில் மட்டும், 32 'சிப்காட்' தொழில் பூங்காக்கள், 16,880 ஏக்கரிலும், 28 'சிட்கோ' தொழிற்பேட்டைகள், 1,213 ஏக்கரிலும் உருவாக்கப்பட்டு உள்ளன.தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை, கலைஞர் கனவு இல்லம், புதுமைப் பெண், தமிழ் புதல்வன், விடியல் பயணம் என, பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்திய பின்பும், வருவாய் பற்றாக்குறையை, 68,000 கோடி ரூபாயில் இருந்து, 41,000 கோடி ரூபாயாக குறைத்திருக்கிறோம்.நவீன குலக்கல்வி திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வரும் வேளையில், தமிழகம் எல்லாருக்கும் எல்லாம் என்ற முழக்கத்தை முன்வைத்து, வெற்றிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. பல நாடுகளில் தமிழ் புத்தகக் கண்காட்சிகள் நடத்த, அரசு திட்டமிட்டிருக்கிறது. நான்கு ஆண்டுகளில், 93 விளையாட்டு வீரர்களுக்கு அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மறுக்கின்றனர்

கடும் மழையிலும், வெயிலிலும், 100 நாள் வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு உரிய நிதியை கொடுங்கள் என்று, மத்திய அரசிடம் கேட்கிறோம். இன்று வரை மறுக்கின்றனர். குழந்தைகளின் கல்விக்கான நிதியை தர மறுக்கின்றனர். 'நீட்டிய இடத்திலே கையெழுத்தைப் போட்டு, நாங்கள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு போ' என்று சொல்லக்கூடிய அந்த வல்லாதிக்க மனோபாவம் காரணமாக, தமிழகம் இன்று வஞ்சிக்கப்பட்டு வருகிறது.'அப்படி கையெழுத்து போட்டுவிட்டு போனால் தான், நாங்கள் உரிய நிதியை விடுவிப்போம் என்று சொன்னால், தன்மான உணர்வோடு, 2,000 கோடி ரூபாய் அல்ல, 10,000 கோடி ரூபாயை நாங்கள் இழந்தாலும், எங்கள் கொள்கையை இழக்க மாட்டோம்' என்று, முதல்வர் பிரகடனம் செய்துள்ளார்.

மண்ணின் குணம்

மக்கள் நலனுக்கு எதிராக, தலைநகரில் இருந்து எடுக்கப்படும், எந்த ஒரு நடவடிக்கைக்கும் எதிரான குரல் கொடுப்பதற்கு, சென்னை மாகாணம் வழி வழியாய் திகழ்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் பக்கத்தில்தான் என்றைக்கும் இருப்போம் என்பது, இந்த மண்ணின் குணம்.வடக்கே இருந்து வரக்கூடிய எந்த ஒரு ஆதிக்கத்திற்கும், தமிழக வரலாற்றில் எந்தக் காலக் கட்டத்திலும் தலை வணங்கியதில்லை. மகா அலெக்சாண்டர் இந்தியாவுக்கு வந்தார். அவருடைய வெற்றிப் பாதையில் தமிழகம் ஒருபோதும் இருந்ததில்லை. மவுரிய பேரரசர் சந்திரகுப்த மவுரியரால் தமிழக எல்லையை தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை. அவுரங்கசீப்பால், 'மலை எலி' என்று அழைக்கப்பட்டவர் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி; அவரால் கூட தமிழகத்தை ஆட்சி செய்ய முடியவில்லை. இந்த வரலாறு, தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரித்தான வரலாறு.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

பல்லவி
மார் 23, 2025 04:21

நீதிபதி வீட்டில் தீ எரிந்த லஞ்ச பணம் எவ்வளவு எங்கே சம்பாதித்தது எல்லாமே வடக்கன் கிட்ட இருந்து கிடைத்தது


திருட்டு திராவிடன்
மார் 22, 2025 22:19

இன்னும் எத்தனை காலம் தான் வடக்கு தெற்கு என்று பேசிக் கொண்டிருப்பீர்கள். நல்ல ஆட்சி செய்ய அருகதையற்ற இடியட்ஸ்.


ManiK
மார் 22, 2025 18:45

திமுக என்றால் திமிர்பிடித்த மயக்க கழகம் என்றாகிவிட்டது. 2026 ல் மக்கள் தான் இவர்களுக்கு பாடம் சொல்லித்தர வேண்டும்.


M S RAGHUNATHAN
மார் 22, 2025 16:20

திப்பு சுல்தான் மைசூர் பிரதேசத்தில் பெர்சிய மொழியை ஆட்சி மொழியாக கொண்டுவந்தவன். பல்லாயிரக் கணக்கான ஹிந்துக்களை கொன்றவன். இன்றும் யார் வேண்டுமானாலும் கர்நாடகாவில் உள்ள மேல் கோட் என்ற ஊருக்கு சென்றால் விவரம் அறியலாம். ஒரு தீபாவளிக்கு முந்தைய நாள் ஆயிரக் கணக்கான பிராமணர்களை கொன்றான். அதில் பெண்கள், குழந்தைகள் உண்டு. காரணம் மதம் மாற மறுத்தது. இவர்கள் எல்லாம் ஹீரோக்கள். ஆனால் சாவர்க்கர், பாஷ்யம் , திலகர் போன்றவர்கள் ஜீரோக்கள். எப்படி தேசம் உருப்படும்.


M S RAGHUNATHAN
மார் 22, 2025 16:15

மாலிகபூர் என்ற முஸ்லிம் தளபதி தமிழ் நாட்டில் இருந்த முக்கியமான கோயில்களை தாக்கி, நகைகள், ஸ்வாமி சிலைகள் ஆகியவற்றை கொள்ளை அடித்தவன். ஶ்ரீரங்கம், மற்றும் மதுரை கோயில்கள் தரை மட்டம் ஆக்கப் பட்டது. இவர்கள் அமைதி மார்க்கத்தை சேர்ந்தவர்கள்.


M S RAGHUNATHAN
மார் 22, 2025 16:12

அவுரங்கசீப் செய்த அட்டூழியங்கள்: 1. தன் தந்தையை சிறை வைத்தது. 2. தன் சகோதரர்கள் அனைவரையும் கொன்று அரியாசனம் ஏறினான். 3. மதம் மாற மறுத்த ஹிந்துக்கள் மீது ஜேசியா வரி விதித்தான். 4. குரு தேஜ் பகதூர் என்ற சீக்கிய குருவை கொல்ல ஆணை பிறப்பித்தார் 5. அவர் பேரன்கள் 2 பேரை போரிலும் மீதி 2 பேரை சிறிய பாலகர்கள் கொடூரமாக கொலை செய்ய காரணமானவன். 5. சத்ரபதி சிவாஜியின் மகன் இஸ்லாத்திற்கு மாற மறுத்ததால் அவனை கொல்ல ஆணையிட்டான். இவனை கொண்டாடுவது நாகரீகம் என்றால், தமிழகத்தில் Colnel நீல் என்பவரின் சிலையை ஏன் அப்புறப் படுதப்பட்டது. வரலாறு தெரியாத அமைச்சர்கள் நம் துர் பாக்கியம் .


M S RAGHUNATHAN
மார் 22, 2025 16:02

அவுரங்கசீப், மாலிகாபூர், திப்பு சுல்தான் போன்ற கொடுங்கோலர்கள் சரித்திரத்தில் கிடையாது.


M S RAGHUNATHAN
மார் 22, 2025 15:52

தமிழில் ஒரு பழமொழி உண்டு. கெட்டிக்காரன் புளுகு 8 நாள். தமிழக அரசு நிதி நிலை அறிக்கையில் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி வரவில்லை என்றாலும் அதை சேர்த்து கல்விக்கு ஒதுக்கிவிட்டோம். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கிடைக்கும் நிதியை வேண்டாம் என்று சொல்லிவிட்டோம் என்றது. இதில் இருந்து தமிழக அரசு PM Sree திட்டத்தின் கீழ் நிதி வேண்டாம் என்று மறுத்து விட்டது தெரிகிறது. இத்தனை நாள் கல்விக்கு நிதி தரவில்லை என்று ஓட்டியது பொய் என்று தெரிந்து விட்டது. அரசு திட்டத்தை செயல் படாமல் வைத்து அதற்கான நிதியை கேட்டது என்பது தெளிவானது.


Ganapathy
மார் 22, 2025 13:15

திமுக மந்திரிகளின் பேச்சுகள் வெட்கக்கேடானமுறையில் வெறும் பொய்களால் நிரப்ப படுகின்றன. மக்களின் அவையில் கூச்நாச்சமில்லாமல் திராவிடகளவாணிகழக மந்திரிகளால் மட்டுமே பொய்யுரை கூற முடியும். தமிழகம் மற்றும் உத்திரபிரதேசத்தின் பொருளாதார மக்கள் தொகை பரப்பளவு நகரங்கள் போன்ற விவரங்கள் தெரிநாதவர்களை தற்குறி திமுக மந்திரிகளின் பொய்கள் ஏமாற்றாது.


Sridhar
மார் 22, 2025 13:04

நோக்கம் அதுமட்டுமாக இருந்திருந்தால், அவர்கள் இஸ்லாமியர்களை விரட்டி முடித்தபிறகு தமிழக மன்னர்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு சென்றிருக்கலாமே? அவர்கள் இங்கு வந்து நம் மக்களை ஆட்சி செய்தது உண்மைதானே? ஆக தமிழகம் தெலுங்கு மன்னர்களால் ஆளப்பட்டிருக்கிறது என்பதை மறுக்கமுடியாதே? தெலுங்கு நாடும் வடக்கேதான் இருக்கிறது எனும்போது "வடக்கின் ஆதிக்கத்துக்கு தமிழகம் தலைவணங்காது" எனும் வீராவேசம் கேலிக்குரிதாகிறதல்லவா?


ஆரூர் ரங்
மார் 22, 2025 15:02

இப்போது கூட தெலுங்கு ஆட்சிதான் நடக்கிறது. அதுக்கென்ன?.


முக்கிய வீடியோ