வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மத்திய பாஜக அரசு இந்த விவரங்கள் எல்லாம் தெரிந்தே தங்க வியாபார லாபிக்கு ஆதாயம் கிடைக்க வேண்டி செய்திருப்பார்கள்!
அரசும், அதுக்கு யிசனை குடுக்கிற அதிகாரிகளும் தத்திகள். பின் விளைவுகளைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள்.
புதுடில்லி: ஒரு கதவு மூடினால், மறு கதவு திறக்கும் என்ற நம்பிக்கை வாசகத்தை பலரும் சொல்வதுண்டு. தங்கம் இறக்குமதியில் இதுவே விதியாகிப் போனது விந்தை தான்.தங்கத்தின் இறக்குமதி மீதான வரி 15 சதவீதமாக இருந்ததால், கடத்தல் தங்கத்தின் வருகை அதிகரித்தது. இதையடுத்து தங்க கடத்தலை தடுக்க, கடந்த பட்ஜெட்டில், வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது.இதனால், கடத்தல் தங்கம் குறைந்ததோ இல்லையோ, வரி ஏய்ப்பு வாயிலாக இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு அதிகரித்து விட்டது. அதுவும் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி!தங்கத்தின் இறக்குமதி வரியைக் குறைத்த அரசு, பிளாட்டினம் அலாய் இறக்குமதி விதியில் மாற்றத்தை அறிவித்தது. அதாவது, பல நாடுகளுடன் வரியற்ற வர்த்தக அனுமதியில் இருந்த பிளாட்டினம் அலாய் இறக்குமதியில், குறைந்தது 2 சதவீதத்துக்கு மேல் பிளாட்டினம் இருந்தால், வரிவிலக்கு வழங்கப்பட்டது.இதை நுாதன வழியில் பயன்படுத்திக் கொண்ட தங்க வணிகர்கள் பலர், அலாய் இறக்குமதியில் 2 சதவீதத்துக்கு மேல் பிளாட்டினம் இருக்குமாறு பார்த்துக் கொண்டு, கூடவே அதில் 15 முதல் 98 சதவீதம் வரை தங்கத்தை கலந்து இறக்குமதி செய்யத் துவங்கினர்.
சட்டரீதியான இறக்குமதியாக இது இருந்தாலும், 6 சதவீத வரி செலுத்தி, தங்கத்தை இறக்குமதி செய்யும் வணிகர்கள் ஒருபுறம் என்றால், பூஜ்யம் வரியில், அலாய் வடிவில் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதிப்பது, வணிக சமனற்ற நிலை. இதைத் தடுக்க அன்னிய வர்த்தகத்துக்கான பொது இயக்குனரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரேந்திர மேத்தா, செயலர் இந்திய புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன்
இரண்டு அல்லது அதற்கு மேல் உலோகம், தனிமங்களை இணைத்து உருவாக்கப்படுவது அலாய். குறிப்பாக தகரத்துடன் தாமிரத்தை கலந்தால் கிடைக்கும் அலாய், வெண்கலம். தாமிரம் மற்றும் துத்தநாகம் கலந்த ஒரு அலாய் பித்தளை. நிக்கல், வெண்கலம், ஜிங்க் கலந்த அலாய், துருப்பிடிக்காத உலோகமாகிறது.
வெளிநாட்டில் தங்கத்தை பிளாட்டினம் போன்றவற்றுடன் கலக்கின்றனர்.அங்கிருந்து இவை இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது.இந்தியா வந்த பின், சோதனை சாலை போன்ற மையத்தில் தங்கம் பிரித்து எடுக்கப்படுகிறதுசட்டத்தின் கண்ணில் மண்ணைத் துாவி வந்த தங்கம் உரிய இடத்தை அடைகிறது
2021 - 22 2,2002022 - 23 6,4002023 - 24 24,0002024 - 25 1,28,000
2020 - 21சிங்கப்பூர் 1,334இத்தாலி 451ஜெர்மனி 1812021 - 22இத்தாலி 905சிங்கப்பூ 503ஜெர்மனி 4802022 - 23ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 3,235ஜப்பான் 1,502இத்தாலி 6842023 - 24ஜப்பான் 14,974ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 5,162இத்தாலி 2,7562024 - 25ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 53,481ஜப்பான் 49,022ஆஸ்திரேலியா 9,353
மத்திய பாஜக அரசு இந்த விவரங்கள் எல்லாம் தெரிந்தே தங்க வியாபார லாபிக்கு ஆதாயம் கிடைக்க வேண்டி செய்திருப்பார்கள்!
அரசும், அதுக்கு யிசனை குடுக்கிற அதிகாரிகளும் தத்திகள். பின் விளைவுகளைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள்.