உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் தயங்குவதன் பின்னணி

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் தயங்குவதன் பின்னணி

சென்னை: சட்டசபை தேர்தல் வரை அதிகாரப்பூர்வமாக கட்சி பிளவுபடுவதை தவிர்க்கவே, அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தயங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2024 டிச., 28ல் நடந்த பா.ம.க.. பொதுக்குழுவில், ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல் பகிரங்கமாக வெடித்தது. எட்டு மாதங்கள் கடந்தும் இருவரும் சமாதானமாகவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oga6ds4n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 கடந்த எட்டு மாதங்களில், அன்புமணிக்கு ஆதரவளிக்கும் மாநில பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, மாநில செய்தி தொடர்பாளர் பாலு ஆகியோரின் கட்சி பதவியை ராமதாஸ் பறித்தார். அதன்பின், அன்புமணி ஆதரவாளர்களாக செயல்படுகின்றனர் என்பதற்காக, எம்.எல்.ஏ.,க்கள் சிவகுமார், வெங்கடேஸ்வரன், சதாசிவம் ஆகியோரை கட்சியிலிருந்து 'சஸ்பெண்ட்' செய்தார். புதிதாக 90க்கும் அதிகமான மாவட்டச் செயலர்களை நியமித்தார். ஆனால், மகன் அன்புமணி மீது மட்டும் ராமதாஸ் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அவர் இல்லாமல், கட்சிக்கு புதிய நிர்வாகக்குழுவை அறிவித்த ராமதாஸ், கடந்த ஜூலை 8ம் தேதி, திண்டிவனம் அருகே ஓமந்துாரில் பா.ம.க., செயற்குழுவை கூட்டினார், அதில், அன்புமணி மீது ராமதாஸ் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், வழக்கம்போல் விமர்சனத்தோடு நிறுத்திக் கொண்டார்.கடந்த ஆகஸ்ட் 17ல் நடந்த பொதுக்குழுவில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவற்றுக்கு ஆகஸ்ட் 31க்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என, அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. அதை தொடர்ந்து, கடந்த 1ம் தேதி நடந்த பா.ம.க., ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்திலும், அன்புமணி மீது நடவடிக்கை இல்லை. இந்நிலையில், பா.ம.க., நிர்வாகக்குழு கூட்டம், தைலாபுரத்தில் நேற்று நடந்தது. இதில், ராமதாஸ், அவரது மகள் ஸ்ரீ காந்திமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதிலும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக, நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க, வரும் 10ம் தேதி வரை அன்புமணிக்கு அவகாசம் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக, ராமதாஸ் ஆதரவாளர்கள் கூறியதாவது:

பா.ம.க., கட்சி பெயர், சின்னம், கொடி, தலைமை அலுவலகம் ஆகியவை அன்புமணி கட்டுப்பாட்டில் உள்ளன. தேர்தல் கமிஷனும், அவரது தலைமையை தான் அங்கீகரித்துள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேரில், மூன்று பேர் அன்புமணி பக்கம் உள்ளனர். எனவே, அன்புமணியை கட்சியை விட்டு நீக்கினால், கட்சி பெயர், கொடி, சின்னம் அனைத்தும் அன்புமணியிடம் சென்று விடும் அல்லது இருவரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். கட்சி அதிகாரப்பூர்வமாக பிளவுபட்டால், யாரும் கூட்டணி அமைக்க முன்வர மாட்டார்கள். கூட்டணி பேரம் நடத்த முடியாது.அதனால் தான், கூட்டணி இறுதியாகும் வரை அல்லது சட்டசபை தேர்தல் வரை இப்படியே கொண்டு செல்ல, ராமதாஸ் முடிவு செய்துள்ளார். எனவே, அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர். அன்புமணி பதிலளிக்க காலம் நீட்டிப்பு அன்புமணி மீது, 16 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு, அவைகளுக்கு உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதே நேரம், நோட்டீசுக்கு அளிக்கப்படும் விளக்கம், சரியில்லாத பட்சத்தில், அவர் மீது என்னவிதமான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும், ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைத்த அறிக்கை குறித்தும், நிர்வாக குழு கூடி ஏற்கனவே விவாதித்தது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஏற்கனவே அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு அன்புமணியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனால், பதில் அனுப்ப, மேலும் ஒரு வார காலம் அவகாசம் வழங்க முடிவெடுக்கப்பட்டது. வரும் 10 ம் தேதிக்குள் அன்புமணி விளக்கம் அளிக்க தவறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

kumarkv
செப் 06, 2025 06:50

அப்பாவும் மகனும் சேர்ந்து செத்துப்போன கட்ச்சிக்கு இப்படி ஒருநாடகமாடி உயிர் கொடுக்ககிராகள்


panneer selvam
செப் 04, 2025 22:21

Ramdass ji is lost his mental balance and rocked the boat he built . He may continue to tirade on Anbumani for some more time till he finds a alliance partner in forthcoming Tamilnadu State Assembly . Ramdass ji should understand that age is his enemy and he does not know digital world


VENKATASUBRAMANIAN
செப் 04, 2025 18:42

இதெல்லாம் தேவையா வயது ஆனாலே புத்தி மந்தம் என்று கூறுவார்கள். இப்போது மட்டும் யார் கூட்டணி சேர்ப்பார்கள். குடும்ப சண்டையே தெருவிற்கு கொண்டு வந்துள்ளார்கள்


பேசும் தமிழன்
செப் 04, 2025 18:33

ஊர் உலகத்தில் நடப்பது போல.... இங்கேயும்.... பிரச்சினை நடக்கிறதா ?


Anand
செப் 04, 2025 17:31

பூமிக்கு பாரம்.


ஆரூர் ரங்
செப் 04, 2025 11:12

வளர்த்து விட்ட அப்பாவே மார்பில் பாய்ந்தது நியாயமா?


saravan
செப் 04, 2025 10:42

ஓரமா போய் ஓய்வெடுங்க பெருசு ...


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 04, 2025 10:31

பாமக ஒரு குடும்ப கட்சி மற்றும் சாதி ரீதியான கட்சி. இந்த கட்சியின் வளர்ச்சி இவ்வளவுதான். இந்த கட்சி வேறு ஏதாவது ஒரு கட்சியை சார்ந்து இருந்தால் தான் கட்சி உயிரோடு இருக்கும். இந்த சாதியின் ஓட்டுகள் தான் இதன் பிரதான சொத்து. இந்த ஓட்டுகள் வெற்றி தோல்வியை சில தொகுதிகளில் தீர்மானிக்க முடியும் என்றாலும் தனித்து இந்த கட்சியால் எங்கும் வெற்றி பெற முடியாது. இதை உணர்ந்து தான் விசிக போன்ற கட்சிகள் திமுக வோடு எப்பொழுதும் ஒட்டி கொண்டு உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியும் சாதி கட்சி போன்று சுருங்கி விட்டது. அதன் பழமை வாய்ந்த சிந்தனை சிறு பான்மை மதம் என்று சொல்லி கொள்ளும் முஸ்லிம் கிறிஸ்துவ மதங்களுக்கு ஆதரவாகவே கம்யூனிஸ்ட் கட்சி உள்ளதால் அதுவும் முஸ்லிம் கிறிஸ்துவ சாதிக்கட்சி போல மாறி விட்டது. இது போன்ற கட்சிகள் எல்லாம் இன்னும் இருநூறு முன்னூறு ஆண்டுகள் ஆனாலும் திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக போன்ற கட்சிகளோடு இணைந்து இருந்தால் தான் உயிரோடு இருக்கும்.


அப்பாவி
செப் 04, 2025 09:38

தானாட வில்லையம்மா சதையாடுது... தந்தை என்றும் பிள்ளையென்றும் விளையாடுது...எல்லா சிச்சுவேஷனுக்கும் நம்மகிட்டே பாட்டு இருக்கு.


krishna
செப் 04, 2025 08:16

எங்க பணபெட்டி குறைந்து விடும் பயமா?


சமீபத்திய செய்தி