உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மீண்டும் மாறுகிறது அரசு பஸ்களின் நிறம்

மீண்டும் மாறுகிறது அரசு பஸ்களின் நிறம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் பஸ்களின் நிறத்தை மாற்ற, தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது.தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் பச்சை நிறத்தில் இருந்தன. பி.எஸ்., நான்கு ரக பஸ்கள் வருகையால், இவற்றின் நிறம் நீலத்துக்கு மாற்றப்பட்டது. பயணியரின் பார்வைக்கு பளிச்சென தெரிய வேண்டும் என்பதற்காக, வெளியூர் பஸ்களின் நிறம் மஞ்சளுக்கு, 2023ல் மாற்றப்பட்டது. பெரும்பாலான மாவட்டங்களில் மஞ்சள் நிற பஸ்கள் இயங்கி வரும் நிலையில், மீண்டும் பஸ்களின் நிறத்தை மாற்ற முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இனி வர உள்ள பஸ்கள், மேல் பகுதி கருப்பு, கீழ் பகுதி சாம்பல் நிறத்தில் இருக்கும். 'பார்டர்' மஞ்சள் மற்றும் வெண்மை நிறத்துடன் இருக்கும். விழுப்புரம், கரூர், நாகர்கோவில், திருநெல்வேலி பணிமனைகளுக்கு முதல் கட்டமாக தருவிக்கப்படும் இந்த நிற பஸ்கள், அடுத்ததாக மாநிலம் முழுதும் இயக்கத்துக்கு கொண்டு வரப்படஉள்ளன.பச்சை நிறம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 'சென்டிமென்ட்' ஆன நிறம். மஞ்சள் நிறம் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 'சென்டிமென்ட்' ஆன நிறம் என, கூறப்பட்டது. தற்போது, புதிய பஸ்களின் நிறத்திலும், 'சென்டிமென்ட்' ஏதாவது இருக்குமா என்ற, கேள்வி எழுகிறது.போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'முன்னர் அரசு பஸ்களுக்கு ஒரே வண்ணம் மட்டும் தீட்டப்பட்டது. தற்போது, ஆம்னி பஸ்கள் போல இருப்பதற்காக, வெவ்வேறு வண்ணங்கள் தீட்டப்படுகின்றன. இதில், 'சென்டிமென்ட்' எதுவும் கிடையாது' என்றனர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Lawarance las
ஜூலை 09, 2025 20:11

இது கொஞ்சம் சந்தோசமாக இருந்தாலும், செலவை குறைத்து ,இன்னும் எத்தனையோ ஊர்களில் சரியான பேருந்துகள் இல்லை, அதற்காக செலவிடலாம்,


Lawarance las
ஜூலை 09, 2025 20:08

உண்மைதாங்க, எத்தனையோ ஊர்களில் போக்குவரத்துகள் சரியாக இல்லை.


Kirupanandan Natarajan
ஜூலை 09, 2025 09:32

இந்த வெட்டி செலவு செய்வதற்கு தமிழகத்தில் இன்னும் பேருந்து வசதி இல்லாத இடங்கள் நிறைய இருக்கிறது. அங்கு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கலாம்.


Balakrishnan karuppannan
ஜூலை 08, 2025 12:23

தண்ட செலவு. மீண்டும் ஊழல் செய்ய வழி வகுக்கும்..


S.jayaram
ஜூலை 08, 2025 08:59

புதியதாக வரக்கூடிய பேருந்துகளில் நிறங்கள் மாற்றலாம், ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்தை நிறம் மாற்றுகின்றோம் என்ற பெயரில் மேலும் நஷ்டத்திற்கு உள்ளாக்குவது ஏற்கமுடியாத ஒன்று இப்படித்தான் வீண் விரயங்கள் செய்கிறது இந்த அரசு


metturaan
ஜூலை 07, 2025 22:14

வண்ணம் மாறுவதால் எதுவும் மாறாது.... மக்கள் எண்ணம் மாறவேண்டும்...ஒரு முடிவோடு காசு பார்க்கும் இந்த ஆட்சி மாறனும்...


Mahendran Puru
ஜூலை 07, 2025 20:21

நிறம் மாறட்டும். அத்துடன் பராமரிப்பின் தரமும் உயர வேண்டும். பேருந்துகள் புதிதாக வந்தபின் துடைத்து சுத்தம் செய்கிறார்களா என்பது கேள்விக்குறி.


Rajarajan
ஜூலை 07, 2025 16:39

ஒய்யார கொண்டையாம், தாழம் பூவாம்.


SANKAR
ஜூலை 07, 2025 16:12

black for front of bus foolish.its visibility will be near zero in night.as far as I know globally big passenger buses are not painted in black.in US bright yellow for school buses is mandatory and compulsory for best visibility


Sivakumar
ஜூலை 07, 2025 15:51

செண்டிமெண்ட் எதுவும் கிடையாது - சொல்லிட்டாங்கல்ல. எல்லாருக்கும் தேர்தல் செலவுக்கும் பண முடிப்புக்கும் இந்த contract எடுத்து சமாளித்துக் கொள்ளவும் அவ்வளவுதான்!!


சமீபத்திய செய்தி