நம்ம ஊர் பெண்களின் மகிழ்ச்சி தமிழ்முகம் புகைப்பட கண்காட்சி
சென்னை; கேரளாவைச் சேர்ந்தவர்நியா ஜெரா. அரசு அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பயணம் செய்து, அது தொடர்பாக கட்டுரை எழுதுவதும், புகைப்படம் எடுப்பதும் பிடித்த பொழுதுபோக்கு.தமிழகத்தில் பயணம் செய்தபோது எடுத்த பெண்களின் புகைப்படங்களை தொகுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாடமியில், 'தமிழ்முகம்' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியை நடத்தி வருகிறார்.பெரும்பாலும் உழைக்கும், தெருவோர வியாபாரம் செய்யும் பெண்களின் முகங்களை பதிவு செய்துள்ளார், ஒவ்வொரு முகத்திலும் வறுமையைத் தாண்டிய மகிழ்ச்சியும், நம்பிக்கையும் தெரிகிறது.கண்காட்சி குறித்து, நியா கூறுகையில், ''உலகின் மிகப்பழமையான நாகரிகங்கள் நிறைந்து விளங்கும் பிரதேசங்களில் தமிழகமும் ஒன்று. கலை, இலக்கியம், பாரம்பரியம் ஆகியவற்றை அடிப்டையாகக் கொண்ட கலாசார மையமாக, தமிழகம் சிறப்புற்று விளங்குகிறது.