உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சென்னை ஏர்போர்ட்டில் புதிய செயலி

சென்னை ஏர்போர்ட்டில் புதிய செயலி

சென்னை,விமானங்களின் விபரங்கள் மற்றும் விமான நிலைய வழிகாட்டுதல்களுக்காக, 'சென்னை சர்வதேச விமான நிலையம்' என்ற செயலி, விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை விமான நிலையத்தில், பயணியர் சிரமமின்றி வந்து செல்ல, விமான நிலைய ஆணையம் சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, சென்னை சர்வதேச விமான நிலையம் என்ற செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.இதில், விமானங்கள் குறித்த, 'ரியல் டைம்' தகவல்கள், தற்போதைய நிலை போன்ற வசதிகளை அறிய முடியும். விமான நிலையத்திற்குள் உள்ள உணவகங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வழிகாட்டி வசதிகளும் உள்ளன.மொபைல், 'புளூடூத்' இணைத்து, இவற்றை துல்லியமாக பயன்படுத்த முடியும். பயணியர் சந்திக்கும் சவால்கள் மற்றும் புகார்களுக்கென தனி வசதிகளும், இதில் இடம் பெற உள்ளன.பயணியர் டிக்கெட் மற்றும் மொபைல் எண் விபரங்களை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். புகார்களுக்கு 15 நிமிடங்களில் தீர்வு காண, குழுவையும் ஏற்படுத்த உள்ளோம். விரைவில் இந்த செயலி பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாற்றம் வேண்டும்

செயலியில் சில அடிப்படை விஷயங்களை மாற்றம் செய்ய வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.l அவசர கால எஸ்.ஓ.எஸ்., என்ற சேவை, பயணியருக்கு இக்கட்டான சூழலில் உதவும். இவை செயலியில் இடம் பெறவில்லைl டிக்கெட் முன்பதிவு, ஏர்போர்ட் ப்ரீபெய்டு டாக்ஸி முன்பதிவு குறித்து இடம் பெறவில்லைl பெங்களூரு விமான நிலைய செயலியில், மாநில அரசின் பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது தயாராகி வரும் செயலில், அந்த வசதி கிடையாதுl 'ட்யூட்டி ப்ரீ' பொருட்களை செயலியில் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளும் வசதி இல்லை. மாறாக, தனி இணையதள முகவரிக்கு சென்று வாங்கும்படியே செயலியில் உள்ளதுl மருத்துவ உதவி தேவைப்பட்டால், செயலி வாயிலாக அழைக்கும் வசதிகளையும் இணைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ