உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கடனாளியானது தான் மிச்சம் த.வெ.க., முன்னாள் நிர்வாகி புலம்பல்

கடனாளியானது தான் மிச்சம் த.வெ.க., முன்னாள் நிர்வாகி புலம்பல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகப்பட்டினம் : சமூகத்தில் மாற்றத்தை எதிர்பார்த்து, த.வெ.க.,வில் களமாடினோம். கடனாளி ஆனதால், வேறு வழியின்றி தி.மு.க.,வில் இணைந்தோம் என, தி.மு.க.,வுக்கு கட்சி மாறிய த.வெ.க., பிரமுகர் கூறினார்.நாகை மாவட்டம், திருமருகல், தெற்கு ஒன்றிய த.வெ.க., செயலராக இருந்தவர் ஜெகபர்தீன், 30. அப்பகுதி கட்சி நிர்வாகிகள் மற்றும் தன் ஆதரவாளர்களுடன் நேற்று நாகை மாவட்ட தி.மு.க., செயலர் கவுதமன் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.அப்போது ஜெகபர்தீன் கூறுகையில், ''விஜயின் தீவிர ரசிகர்களான நாங்கள், த.வெ.க., துவங்கியதும் சமூக மாற்றம் ஏற்படும்; சிறுபான்மையினருக்கு முன்னேற்றம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், அரசியலுக்கு புதிது என்றாலும் தீவிரமாக பணியாற்றினோம். மாவட்ட நிர்வாகிகள் உத்தரவுப்படி நலத்திட்ட உதவிகள், அன்னதானம் என பல நிகழ்ச்சிகளுக்கு, எங்களின் தகுதிக்கு மீறி கடன் வாங்கி ஏராளமாக செலவு செய்தோம். இதனால் கடனாளியாகி விட்டேன்.''ஆனால், விஜய் கட்சி நடத்தும் விதத்தை பார்த்தால், அவரால் தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டோம். இனியும் கட்சிக்காக கடன் வாங்கி செலவு செய்வது என்பது, என்னை போன்றவர்களை பெரும் ஆபத்துக்குள் தள்ளும் என்பதை, கால தாமதமாக உணர்ந்து கொண்டோம். ''இனியும், அக்கட்சியை நம்பி அரசியல் செய்ய விருப்பமில்லை. இந்த விஷயங்களை, நடிகர் விஜய் கவனத்துக்கு எடுத்து செல்லலாம் என்றால், அதற்கு வாய்ப்பில்லை. அவரை சுற்றியிருக்கும் ஜால்ரா கூட்டம், என்னை போன்றவர்களை அண்ட விடவில்லை. அதனால், ஆளுங்கட்சியான தி.மு.க.,வை நோக்கி பயணப்படுகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Rathna
ஜூன் 06, 2025 14:27

போட்ட முதலீட்டுக்கு வட்டி வரவில்லை. அது தவிர சிறுபான்மை வேற


RAMESH
ஜூன் 02, 2025 06:29

கடைசியாக வாழ்க்கையை பாரு... பொண்டாட்டி குழந்தைகள் என்று குடும்பத்தை பாரு....மிச்ச வாழ்க்கையை அழித்து கொள்ளாதே......


Kothandaraman Ramanujam IITM
ஜூன் 01, 2025 20:11

நல்லவேளை! இந்த துரோகி திருட்டுக்கும்பலுடன் ஐக்கியமாயிட்டார் , இல்லையென்றால் வெற்றி பெற்ற பிறகு விஜயின் பேரை கெடுத்திருப்பார்


Chandrasekaran Balasubramaniam
ஜூன் 01, 2025 19:23

எந்த கட்சிக்கும் போகாத்தீங்கடா. அப்பா அம்மா சொல் கேட்டு ஏதாவது ஒரு வேலைக்கு போய் குடும்பத்தை கவனிங்க. நாட்டுக்கும் நல்லது வீட்டுக்கும் நல்லது. அரசியல் வியாதிகளை நம்பாதீங்க.


senthik
ஜூன் 01, 2025 16:25

he didn't come to do service to the people. he came to loot money by position. then he has to go and join dmk as like his earlier member of vaishnavi.


சந்திரன்
ஜூன் 01, 2025 10:38

இவரை போன்ற முஸ்லிம் கிருத்துவர்கள் சிறுபான்மை சமுதாய முன்னேற்றத்தை மட்டுமே குறியாக கொண்டு செயல்படுவார்கள். ஆனால் மானங்கெட்ட இந்து மக்கள் அரசியல்வாதிகள் மதசார்பின்மை உணர்வோடு வாழனும். இல்லை என்றால் சங்கி என முத்திரை குத்தப்படும்


ராமகிருஷ்ணன்
ஜூன் 01, 2025 10:35

எப்படியும் தேர்தலுக்கு பிறகு ஓடி போகப் போகிறார்கள். இப்பவே போயி தொலை தேர்தல் முடிவுகள் தெரிந்து விட்டதா.


kskmet
ஜூன் 01, 2025 10:31

தீசட்டிக்கு பயந்து தீக்குள்ளேயே விழுந்து விட்டாரே பாவம்.


புரொடஸ்டர்
ஜூன் 01, 2025 09:04

ரம்பாவிடம் சொல்லியிருந்தால் "புஸ்ஸி"ஜோசப் விஜய் தவெக தொண்டர்கள் கடனை தீர்த்திருப்பான்.


Anantharaman
ஜூன் 01, 2025 08:49

கடன் தொல்லை தீர திமுகவில் சேர்ந்தால் கடுப்பில் ஈட்டிக் கடனை அடைக்கலாம்தாளே! இது ஒன்றே திமுகவின் ஆதார ஊழலுக்கு சாட்சி.


சமீபத்திய செய்தி