உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம்; அ.தி.மு.க.,வினர் அச்சம்!

இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம்; அ.தி.மு.க.,வினர் அச்சம்!

இரட்டை இலை சின்னம் குறித்து, தேர்தல் கமிஷன் விசாரிக்கலாம் என்ற, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவால், அ.தி.மு.க., வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமோ என்ற அச்சம், அக்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது.இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக,தேர்தல் கமிஷன் விசாரணைக்கு ஏற்கனவே விதித்த தடையை, சென்னை உயர் நீதிமன்றம், நேற்று நீக்கியுள்ளது. விசாரணைக்கு தடை கோரிய பழனிசாமியின் மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., கட்சி விதிகளில் திருத்தம் செய்து, பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள், அதன் அடிப்படையில் பொதுச்செயலராக பழனிசாமி தேர்வானது, இரட்டை இலை சின்னம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதா மறைவுக்கு பின், 2017ல் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அப்போது, பன்னீர்செல்வம் மனுவை விசாரித்த தேர்தல் கமிஷன், பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் பழனிசாமி முதல்வராக இருந்தபோதும், இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.பழனிசாமியுடன் பன்னீர்செல்வம் இணைந்த பின்னரே, இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைத்தது. ஏழு ஆண்டுகளுக்குபின், மீண்டும் இரட்டைஇலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2017ல் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டபோது பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக, மத்தியில் ஆளும் பா.ஜ., இருந்தது. இப்போதும் அவரைத்தான் பா.ஜ., ஆதரிக்கிறது. இதுதான் பழனிசாமி ஆதரவாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ., மேலிடத்தை பொறுத்தவரை, 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடிக்க, எந்த முடிவுக்கும் தயாராக உள்ளது. அ.தி.மு.க., இல்லாத கூட்டணியால், தி.மு.க.,வை வெல்ல முடியாது என்றும், பா.ஜ., மேலிடம் கருதுகிறது. ஆனால், பா.ஜ., திட்டங்களுக்கு உடன்பட, பழனிசாமி மறுத்து வருகிறார். பா.ஜ.,வுக்கு பதிலாக, விஜய்யின் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். த.வெ.க.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைத்தால், பா.ஜ., தனித்து விடப்படும் நிலை ஏற்படும். இதை தவிர்ப்பதற்காக, அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்த, பா.ஜ., எதையும் செய்யும் என்ற அச்சம், பழனிசாமி ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பல்லவி
பிப் 13, 2025 21:08

இரண்டு இலை இல்லாமல் போனால் மூன்று இலை வைத்துக்கொள்ளலாமே


Kadaparai Mani
பிப் 13, 2025 13:29

தீர்ப்பு அதிமுகவிற்கு பழனிசாமி அவர்களுக்கு சாதகமாக வந்து உள்ளது .கோர்ட் சட்டப்படி விசாரிக்க சொல்லி உள்ளது .தேர்தல் கமிஷன் நியதி தவறி ஒன்றும் செய்ய முடியாது


Haja Kuthubdeen
பிப் 13, 2025 11:01

எங்களுக்கு எதற்கு அச்சம்...இரட்டை இலை என்றல்ல எந்த சின்னம் என்றாலும் ஒரே மணிநேரத்தில் தமிழக மக்களிடம் கொண்டு செல்லும் திறமை ஆற்றல் வேகம் கொண்ட தொண்டர்கள் அஇஅதிமுகவினர்.


Muralidharan S
பிப் 13, 2025 10:51

அழியவேண்டிய இரண்டு திராவிஷங்களில், ஒன்று படிப்படியாக தேர்தலுக்கு தேர்தல் அழிந்து வருகிறது.. ரயிலில் ஒருவன் பெட்டியை பறிகொடுத்தானாம்.. ஆனால் அவன், பெட்டி போனா என்ன? தாக்கோல் இவிட உண்டுnnu சொன்னானாம்.. அது மாதிரி மக்கள் ஆதரவு தொலைந்து போன கட்சிக்கு - இலை சின்னம் இருந்தா என்ன போனா என்ன .....


M Ramachandran
பிப் 13, 2025 10:05

பழனிச்சாமி ஒரு சுய நல வியாதி. தீ மு க்கா வுடன் கள்ள உறவு.


baala
பிப் 13, 2025 09:49

இலையை முடக்கினால், இருக்கும் வாக்கும் சுத்தம்


Haja Kuthubdeen
பிப் 13, 2025 11:32

கணவு வேண்டாம். புரட்சிதலைவர்.. அம்மாவின் கட்சி இது... கட்சி இரண்டாகி சேவலில் போட்டியிட்டு பலத்தை நிரூபித்தவர்கள் நாங்கள்.. சின்னம் நோ மேட்டர்.


Smbs
பிப் 13, 2025 08:23

என்ன குதி குதித்தாலும் முடக்குனாலும் .பி.சே.பி. தல தூக்காது குடச்சல் குடுத்தா மரண அடிவாங்கும் பி.சே.பி


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 13, 2025 12:00

நீங்க கவலைபடாதிங்கண்ணே....பி சே பி கூடத்தான் ஐ தி மு க கூட்டணி வைத்தாகனும்....வேற வழி இல்ல....!!!


புதிய வீடியோ