வாசகர்கள் கருத்துகள் ( 24 )
அண்ணாமலை. ப ஜ க வலுவிழக்கும் ப ஜ க எவ்வளவு சதம். விட்டு எதிர் பார்க்கிறேன். என்பதை பற்றி ஒரு வார்த்தை. கூற வில்லை. அண்ணாமலை. ப ஜ கனவில்தான் இருக்கிறாரா. மோதிஜி எவ்வளவு. மதிப்போடு இவரை வைத்திரருந்தார். எல்லாவற்றையும். எறிந்து விட்டாரா.
இன்று தான் அண்ணாமலை தமிழ்நாட்டின் உண்மை நிலையை கூறி இருக்கிறார்
எடப்பாடியை கழட்டிவிடவேண்டியது கட்டாயம்,
ப ஜா கா வுக்கு உங்களை போன்றவர்கள் தான் சிறந்த தலைவராக இருக்க முடியும்
உண்மையை பேசியதற்கு நன்றி .
திரு அண்ணாமலை அவர்களை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கிய பின்பு பாரதியா ஜனதா கட்சியின் வளர்ச்சி தமிழ்நாட்டில் குறைந்து கொண்டு வருகிறது அந்த ஐ பி எஸ் நேர்மைக்கு தான் இளம் வயதினர் ஆதரவு கொடுத்தனர் பாரதிய ஜனாதிவிற்கு அல்ல
தமிழ்நாட்டில் தனிப்பட்ட ஒருவருக்காக ஒட்டுமொத்த மக்களும் திரண்ட ஒரே தலைவர் புரட்சிதலைவர் ஒருத்தர் மட்டும்தான். பிஜெபியில் அண்ணாமலை ஒரு சிறு துரும்பு மட்டுமே.. அண்ணாமலை கட்சிக்கு வரும் முன்பே ஓரளவு தடம் பதித்து பலர் எம் பி..எம் எல் ஏ ஆகியும் உள்ளனர்.
அவர்களின் காலம் சினிமாவை பார்த்து மக்கள் பிரமித்து இருந்த காலம் அந்த காலத்தையும் இப்போது உள்ள காலத்தையும் ஒப்பிட்டு பார்க்க கூடாது
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான பா.ஜ.க வின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆளும் தி.மு.க தான் அடுத்து வரும் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்கிற ரீதியில் கருத்து கூறுகிறார். இளம் வயது வாக்காளர்கள் எல்லாம் ஏதோ எல்லோரும் விஜய்க்கு வாக்களிக்கப் போவது போவது போல் பேசுகிறார். அப்ப இளம் வயது வாக்காளர்கள் பா.ஜ.கவிற்கு வாக்களிக்க மாட்டார்களா? கூட்டணி என வந்த பின் பொறுப்புள்ள ஒரு தலைவர் எதிர்மறை கருத்துக்களை கூறுவது இரு கட்சியின் தொண்டர்களையும் குழப்பமடைய செய்து விடும். அண்ணாமலை கூறுவதுதான் கட்சியின் கருத்தா? என்பதை பா.ஜ.க தலைமை தெளிவு படுத்த வேண்டும். தனக்கு பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும் அரசியலில் கூட்டணி என்பது அந்தந்த தேர்தல் நேர யுத்திதான். இதை முதலில் அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும்.
அண்ணாமலை ஒரு கருத்து சொன்னவுடனேயே அதை எதிர்க்கும் வகையிலும் அண்ணாமலையை பாஜக விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் திமுக ஆதரவாளன் பாஜகவை வெற்றி பெற விட மாட்டான் என்ற வகையில் கருத்துக்கள் வெளிவருகிறது. அரசியலில் இது போன்ற எதிரான கருத்துக்கள் வருகிறது என்றால் அந்த குறிப்பிட்ட தலைவரின் கருத்துக்கள் அதிகம் படிக்கப்படுகிறது அதிகம் பார்க்கப்படுகிறது அதிகம் அதைப் பற்றி விவாதிக்கப் படுகிறது அதிகமாக அந்த கருத்துக்களால் பாதிக்கப்படுவோமோ என்று பயப்படுகிறார்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அண்ணாமலை சாதாரண போலீஸாக வேலை பார்த்தவர். எந்த வித அரசியல் பின்புலம் இல்லாதவர். திரையுலக பிரபலமோ அல்லது வேறு எந்த துறையிலும் பிரபலமோ அல்லது அது போன்றவர்கள் நட்போ உறவோ இல்லாதவர். தமிழகத்தை பொறுத்தவரை ஒரு திரையுலக பின்னணி உள்ளவர்களுக்கு தான் இதுகாறும் ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து முன்னிலை படுத்தி ஹீரோக்களாக காட்டி வந்துள்ளது. முதன் முறையாக எந்த ஒரு செல்வாக்கு அரசியல் பின்புலம் திரையுலக பின்புலம் ஏதுமில்லா ஒருவரை அதுவும் ஒரு கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவருக்கு இன்னும் அதே முக்கியத்துவம் அண்ணாமலையின் எதிர் தரப்பினர் கொடுப்பதை பார்க்கும் பொழுது இவன் தான் உண்மையான மக்கள் தலைவன் என்ற தோற்றம் வருகிறது. டீ விற்றவர் முதலமைச்சர் ஆகி பிரதமர் ஆனது போல இவரும் ஆனாலும் ஆச்சிரியப்பட ஏதுமில்லை. அரசியலில் எதிரிகள் விமர்சனங்கள் அதிகமாக அதிகமாக அந்த அரசியல் வாதிக்கு மக்கள் ஆதரவு அதிகம் என்பது எழுதப்படாத விதி.
நேற்று ப. சிதம்பரம் அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது என்றார். இன்று அண்ணாமலை திமுக கூட்டணி வலுவாக உள்ளது என்கிறார். என்னத்தை சொல்ல? ஆனால் ஒன்று 1996-2001 திமுக ஆட்சி இப்போதைய ஸ்டாலின் ஆட்சியை விட பல மடங்கு பெட்டர் ஆக இருந்தது. ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லை என்று தெம்பாக இருந்தார்கள். ஆனால் ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார்
என் தலைமையில் கட்சி வளர்ந்திடுச்சு..தனித்தே ஆட்சியை பிடிப்போம்னு சொண்ணதெல்லாம் பொய்யா...இந்த பேச்சு இதுவரை ஷா காதிற்கு போயிருக்கும்னு நினைக்கிறேன்.அஇஅதிமுக உள் விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் ஆர்மீஸ் தன் கட்சியில் நிலவும் போட்டி பொறாமை பற்றி சிந்திக்கனும்.