உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஓய்வறியா பயணம்... தேச நலனே பிரதானம்

ஓய்வறியா பயணம்... தேச நலனே பிரதானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரதமர் மோடி 2014ல் இருந்து தற்போது வரை 91 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதில் 78 நாடுகளுக்கு சென்றுள்ளார். இதன்மூலம் வெளிநாட்டு முதலீகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தார். மேலும் வெளியுறவுக்கொள்கைளை வலுப்படுத்தியுள்ளார். இதில் ஒரே பயணத்தில் எட்டு நாடுகளுக்கு கூட சென்றுள்ளார். ஒவ்வொரு நாடும் வெவ்வேறு காலநிலை, நேரத்தை கொண்டது. இருப்பினும் ஓய்வே இல்லாமல் தேச நலனை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி அசராமல் பணியாற்றி வருகிறார். சில வெளிநாட்டு பயணத்தில் இருந்து நாடு திரும்பிய உடனேயே உள்நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றார். 2022 டிச.30ல் தாய் ஹீராபென் மறைந்த போது கூட, இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு, உடனே பணிக்கு திரும்பி 'வந்தே பாரத்' ரயில் சேவையை தொடங்கி வைத்தார். கடந்த ஏப்ரலில் தாய்லாந்து பயணத்தை முடித்து இலங்கை சென்றார். பின் அங்கிருந்து நேராக ராமேஸ்வரம் வந்து, நாட்டின் முதல் செங்குத்து ரயில் துாக்குப்பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சமீபத்தில் கூட பிரிட்டன் சென்ற பிரதமர் மோடி, பின் மாலத்தீவு சென்றார். அங்கிருந்து துாத்துக்குடிக்கு வந்து புதிய விமான நிலைய முனையம் திறப்பு உள்ளிட்ட திட்டங்களை துவக்கிய பின் இரவு திருச்சி வந்தார். மறுநாள் (நேற்று) கங்கை கொண்ட சோழபுரம் நிகழ்ச்சியில் பங்கேற்று மாலையில் டில்லி திரும்பினார். இன்று பார்லிமென்டில் நடைபெறும் 'ஆப்பரேஷன் சிந்துார்' விவாதங்களில் பங்கேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Gokul Krishnan
ஜூலை 28, 2025 21:07

91 நாடுகளுக்கு பயணம் ஆனால் அமெரிக்கா டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 86.65 தானா கணக்கு எங்கேயோ இடிக்குதே மோடிஜி ஆட்சியில் நாம் நூறு வயதுக்கு இருப்போமோ இல்லையோ ஆனால் அமெரிக்கா டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு நூறை சிக்கிரம் தொட்டு விடும் போல் தேங்காய் எண்ணெய் விலை வேற ரூபாய் ஐநூறு நெருங்கி கொண்டு இருக்கிறது


Sivagiri
ஜூலை 28, 2025 16:57

இன்போசிஸ் ஓனர் , எல்லாரும் ஒருநாளைக்கு இருபது மணி நேரம் உழைக்கணும்னு சொல்றாரு . . . நம்பியாரின் அவதாரமே இருப்பாரோ ?


Sivagiri
ஜூலை 28, 2025 16:55

ஓய்வறியாமல் உழைப்பவர் ஏராளம் . . . ஆனால் என்ன வேலை செய்கிறார்கள் என்பதே பிரதானம் . . . பத்து ரூபா வசூலுக்கு இரவும் பகலும் ஓடிக் கொண்டிருக்கும் கூட்டம் . . . காலை விடியலுக்கு முன் துண்டை உதறி தோளில் போட்டு பழைய கஞ்சியை குடிச்சிட்டு காலம் பூரா அரை வயிற்று கஞ்சிக்கு உழைத்து இழைப்பவர் ஏராளம் . . . அவர்கள் எல்லாம் தனக்காக தன் குடும்பத்திற்காக ஓடிக்கொண்டிருப்பவர் . . .. தேசத்திற்காக மக்களுக்காக , எதிர்கால தேசத்திற்காக , இவ்வளவு பெரிய தேசத்தை இழுத்து செல்ல , சிவனின் அம்சமே வந்தால்தான் முடியும் . . .


RAAJ68
ஜூலை 28, 2025 16:06

இவர் அரசை தவிர்ப்பதற்கு சக்தி தெங்கர் தெலுங்கு தேச கட்சி எம்பிக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தி தோல்வி அடைந்ததாக செய்தி.


venugopal s
ஜூலை 28, 2025 12:38

இன்றைய மற்றொரு செய்தியில் காஸியாபாத்தை சேர்ந்த ஹர்ஷவர்தன் ஜெயின் என்பவர் முன்னூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தை ஏமாற்றி போலி தூதரங்கள் நடத்தி நூற்றுஅறுபது நாடுகளுக்கும் மேல் பயணம் செய்து உள்ளார் என்ற செய்திக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா?


அஜய்
ஜூலை 28, 2025 12:29

சோழர்களுக்கு சிலை வெச்சு தேச நலன். மணிப்பூர் பக்கம் தலை வெச்சு படுக்காம தேச நலன். சொகுசு விமானத்தில் போய் தேச நலன்.


N Sasikumar Yadhav
ஜூலை 28, 2025 14:34

இது உண்மையான கேள்விய உங்க கோபாலபுர எஜமானை கேள்வி கேட்க திராணியிருக்கிறதா உங்களுக்கு


M. PALANIAPPAN, KERALA
ஜூலை 28, 2025 12:26

பாரதத்தின் தவப்புதல்வர் மோடிஜி அவர்கள், இந்த வயதிலும் ஓய்வு இன்றி நாட்டு நலனுக்காக, தன் நலம் கருதாது வெளி நாட்டு பயணங்கள் சென்று வருகிறார். மோடிஜி அவர்கள் பிரதமராக இருக்கும் பாரதத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதில் பெருமை அடைகிறேன், வாழ்க மோடிஜி


தமிழன்
ஜூலை 28, 2025 11:46

இவரை நமது நாட்டின் பிரதமராக மட்டுமின்றி, நமக்கு கிடைத்த மிக பொக்கிஷமாக கருதுகின்றேன்.


Selva Mani
ஜூலை 28, 2025 11:39

அவர் ஆற்றல் மிக்க தலைவர்.


Amsi Ramesh
ஜூலை 28, 2025 09:57

பாரதம் எப்பொழுதெல்லாம் வீழ்கிறதோ அப்பொழுதெல்லாம் அதனை சமன் செய்ய மகான்களை உருவாக்கி கொண்டிருக்கும் - நிகழ் காலம் மகா புருஷர் மோடி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை