உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கொங்கு மண்டலத்தில் உதயநிதி போட்டி?

கொங்கு மண்டலத்தில் உதயநிதி போட்டி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ள அமைச்சர் உதயநிதியை, வரும் சட்டசபை தேர்தலில், கொங்கு மண்டலத்தில் போட்டியிட வைக்க முயற்சி நடப்பதாக செய்தி பரவி இருக்கிறது. ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம் நேற்று நடந்தது. அதில், தி.மு.க., இளைஞர் அணி துணை செயலரும், ஈரோடு எம்.பி.,யுமான பிரகாஷ் பேசியதாவது: கொங்கு மண்டலம் என்றாலே அ.தி.மு.க., கோட்டை என்ற மாயை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வின் பெரும் தலைகளாக அறியப்படும் பழனிசாமி, செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கருப்பண்ணன் உள்ளிட்ட அனைவரும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் இதற்கு காரணம். அதற்கேற்ப, பல தேர்தல்களிலும், அ.தி.மு.க., தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. அந்த சூழல் தற்போது இல்லை. கடந்த லோக்சபா தேர்தலில், தன் அயராத பணியால், இதை அமைச்சர் உதயநிதி உடைத்து விட்டார்; கொங்கு மண்டலத்தையும் தி.மு.க., கோட்டையாக மாற்றிவிட்டார். ஈரோடு தொகுதியில் என்னை வெற்றி பெற வைத்தார்; மொடக்குறிச்சி தொகுதியில், 67,000 ஓட்டுகள் நமக்கு அதிகம் பெற்று தந்தார்.அதனால், வரும் சட்டசபை தேர்தலில், சென்னையில் போட்டியிட்டாலும், கொங்கு மண்டலத்தின் மொடக்குறிச்சியிலும் போட்டியிடும்படி உதயநிதியிடம் பேசியுள்ளேன். அவர் போட்டியிடுவதற்கு ஏற்ப களத்தை நாம் தயார் செய்ய வேண்டும். உதயநிதி மொடக்குறிச்சியில் போட்டியிட்டால், கொங்கு மண்டலத்தில் உள்ள, 61 சட்டசபை தொகுதிகளில் பெரும்பாலானவற்றில், தி.மு.க.,வை எளிதாக வெற்றி பெற வைக்கலாம். இவ்வாறு அவர் பேசியுள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

திருட்டு திராவிடன்
செப் 13, 2024 14:05

திருட்டு அயோக்கியர்கள்.


Balasubramanian
செப் 13, 2024 12:22

இன்னும் இருபது மாதங்கள் இல்லை? இவ்வளவு முன் யோசனை? அதிர்ஷ்டம் செய்த வாக்காளர்கள் - இனி தினமும் நடக்கும் கவனிப்பு


Mani . V
செப் 13, 2024 06:02

பெ......தம்மா யோசனை?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை