உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவி? கூட்டணிக்கு குட் பை சொல்லும் மூடில் ம.தி.மு.க.,

துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவி? கூட்டணிக்கு குட் பை சொல்லும் மூடில் ம.தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோவுக்கு, மத்திய இணை அமைச்சர் பதவி வழங்க, பா.ஜ., தரப்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளதால், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி, தே.ஜ., கூட்டணியில் ம.தி.மு.க., சேரும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ம.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ம.தி.மு.க.,வுக்கு, 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில், 4 தொகுதிகளில், அக்கட்சி வெற்றி பெற்றது. தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டதால், அவர்கள் சட்டசபையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களாகவே உள்ளனர்.கடந்த 2024 லோக்சபா தேர்தலில், திருச்சி தொகுதியில், 'தீப்பெட்டி' சின்னத்தில் போட்டியிட்டு, துரை வைகோ வெற்றி பெற்றார். லோக்சபாவில், அவர் ம.தி.மு.க., - எம்.பி.,யாக உள்ளார். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு, மீண்டும் ராஜ்யசபா 'சீட்' வழங்குவது தொடர்பாக, தி.மு.க.,விடம் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. ஆனாலும், மீண்டும் எம்.பி., பதவி கிடைக்கும் என, வைகோ எதிர்பார்த்தார்.அவருக்கு பதிலாக, ம.நீ.ம., கட்சி தலைவர் கமலுக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி தரப்பட்டதால், அவரும் அவரது கட்சியினரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.வரும் சட்டசபை தேர்தலில், இரட்டை இலக்கத்தில், 10 தொகுதிகளை பெற, ம.தி.மு.க., விரும்புகிறது. அப்போதுதான், அக்கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், கடந்த சட்டசபை தேர்தலை போல், 6 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய, தி.மு.க., திட்டமிட்டுள்ளது.மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தாமல், தீப்பெட்டி சின்னத்தில், ம.தி.மு.க., போட்டியிட, தி.மு.க., தரப்பில் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.இதற்கிடையில், தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர, மற்ற கட்சிகளில் எது வந்தாலும் தே.ஜ., கூட்டணியில் சேர்க்கலாம் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். அதன்படி, தமிழக பா.ஜ., தலைவர்கள் சிலர், வைகோவிடம் பேசி வருவதாக தெரிகிறது. துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவது குறித்தும், சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணியில் ம.தி.மு.க., இடம்பெறுவது குறித்தும், ஆந்திர தொழிலதிபர் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி தரப்பில் பேச்சு நடத்தப்பட்டு உள்ளது.சமீபத்தில், மத்திய அமைச்சர் முருகனும், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனும், 'தி.மு.க., கூட்டணியில் உள்ள ஒரு கட்சி, தே.ஜ., கூட்டணில் இடம்பெறும்' என, வெளிப்படையாக பேசியுள்ளனர். ம.தி.மு.க.,வை மையமாக வைத்தே, இருவரும் இதை கூறியதாக தெரிகிறது.இந்நிலையில், வரும் 22ம் தேதி, ஈரோட்டில் ம.தி.மு.க., பொதுக்குழு கூடுகிறது. அதில் தி.மு.க., கூட்டணியில் நீடிப்பது குறித்து கட்சியின் பொதுச்செயலர் வைகோ அறிவிக்கக்கூடும் என தெரிகிறது. கடந்த 2002ம் ஆண்டில், ஈரோடு பரிமளம் மஹாலில், மறைந்த முன்னாள் எம்.பி., கணேசமூர்த்தி தலைமையில் ம.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அதில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றியதால், 'பொடா' சட்டத்தில் வைகோ கைது செய்யப்பட்டார். 23 ஆண்டுகளுக்குப் பின், அதே பரிமளம் மஹாலில், பொதுக்குழு கூட்டத்தை நடத்தி, கூட்டணி குறித்து முக்கிய முடிவை வெளியிட, வைகோ திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Matt P
ஜூன் 25, 2025 10:49

அழகிரிக்கு மத்திய அமைச்சரவையில் பதவி, அன்பு மணிக்கு, தயாநிதி மாறனுக்கு, மாறனுக்கு இப்போ துரை சாமிக்கு. இதுக்கு தான் தன்தையர்கள் அரசியலுக்கு வரானுக போலிருக்கு. முதல்வர் பதவி எல்லாம் முடியுற கார்யம் இல்லை. அதனால் இருக்குமோ.


Bhaskaran
ஜூன் 21, 2025 13:02

தேனி‌ கோவையில் பல மில் களை வாங்குவார் சின்ன கோவால்


ராஜா
ஜூன் 21, 2025 03:57

தகப்பன் தனயன் இருவரும் பதவிக்கு வந்து விட்டால் எதையும் சாதிக்க முடியாது .ஆனாலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வருவாங்க போல


Gopalakrishnan Thiagarajan
ஜூன் 20, 2025 22:48

இந்த அட்ரஸ் இல்லா பச்சோந்திகளுக்கு இடம் கொடுத்தால் தமிழகத்தில் பாரதிய ஜனதா அம்போ


Santhakumar Srinivasalu
ஜூன் 20, 2025 21:16

பச்சோந்தி வைகோ/துரை வைகோவுக்கு - அங்க ஸ்வீட் பாக்ஸ் எல்லாம் நீங்க நினைக்கிற மாதிரி கிடைக்காது!


முருகன்
ஜூன் 20, 2025 20:39

பதவி ஆசை கட்சியை உடைப்பது இதுவே இந்தியா முழுவதும் இவர்கள் வேலை


Bhaskaran
ஜூன் 20, 2025 15:58

கோவால் பின்னால் அவர் நிழல் கூட போகாது இரண்டு தொகுதி தவிர்த்து தொகுதிக்கு 500வாக்கு கூட கிடையாது மேலும் சின்ன கோவால் ஒரு தத்தி மத்திய அமைச்சராகவும் தகுதி கிடையாது


SJRR
ஜூன் 20, 2025 14:12

மதிமுகவால் ஒட்டு சதவிகிதம் பெரிதாக மாறாது. இதற்கு மத்திய இணை அமைச்சர் பதவி என்பது ஒரு பெரிய தொகை. பாஜக 2024ல் வாங்கிய 11% ஓட்டுவங்கியில் கால்சதவிகிதம் கூட மதிமுகவில் இல்லை.


hariharan
ஜூன் 20, 2025 11:12

இந்தப்பக்கம் வந்தால் எப்படி இவர்களால் பாஜக, அதிமுகவை புகழ்ந்தும் திமுகவை விமர்சித்தும் பேச முடியும்? மனசாட்சி? பணம் படுத்தும்பாடு.


nagendhiran
ஜூன் 20, 2025 15:31

திமுக பக்கம் வரும் போது? பணம் வாங்கவில்லையா?


சாமானியன்
ஜூன் 20, 2025 10:49

காசு கொடுத்து இந்த மாதிரி வதந்தியை மக்களை ஏமாற்றுவதற்காக பரப்புகிறார்கள்.


முக்கிய வீடியோ