உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜய்க்கு அதிக இடங்கள்: சர்வேயில் அதிர்ச்சி தகவல்கள்

விஜய்க்கு அதிக இடங்கள்: சர்வேயில் அதிர்ச்சி தகவல்கள்

'தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், நடிகர் விஜய் கட்சியான த.வெ.க., தனித்து போட்டியிட்டு, 95 முதல் 105 தொகுதிகளை கைப்பற்றும்' என, தனியார் நிறுவனம் எடுத்த சர்வேயில் தெரிய வந்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை அறிய, மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம், சர்வே எடுத்துள்ளது. இதில், பல அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி - அ.தி.மு.க., கூட்டணி - த.வெ.க., தனித்து போட்டியிட்டால் எந்த கட்சிக்கு உங்கள் ஓட்டு என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3p6xu01t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு மக்கள் அளித்த விடை அடிப்படையில், த.வெ.க., 95 முதல் 105; தி.மு.க., 75 முதல் 85; அ.தி.மு.க., 55 முதல் 65 தொகுதிகளையும், நாம் தமிழர் மற்றும் இதர கட்சிகள், ஐந்து முதல் 10 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஓட்டு சதவீதம் அடிப்படையில், த.வெ.க., 34.55; தி.மு.க., 30.20; அ.தி.மு.க., 27.85; நா.த.க., 4.40; இதர கட்சிகள் 3 சதவீத ஓட்டுகள் பெறும். முதல்வர் வேட்பாளர் என்ற அடிப்படையில், முதல்வர் ஸ்டாலினுக்கு 18.6; விஜய்க்கு 39.4; பழனிசாமிக்கு 18.6; அண்ணாமலைக்கு 4.7; இதர கட்சிகளின் வேட்பாளர்களுக்கு 4.4 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது.ஜாதி அடிப்படையில் எடுக்கப்பட்ட சர்வேயில், முக்குலத்தோர் சமுதாயத்தில், அ.தி.மு.க.,வுக்கு 44.2; த.வெ.க.,வுக்கு 34.5; தி.மு.க.,வுக்கு 17.3 சதவீதம் ஆதரவு உள்ளது. வன்னியர் ஜாதியில் த.வெ.க.,வுக்கு 39.5; அ.தி.மு.க.,வுக்கு 36.2; தி.மு.க.,வுக்கு 19.0 சதவீதம் கிடைத்துள்ளன. வெள்ளாளர் கவுண்டர் ஜாதியில், அ.தி.மு.க., வுக்கு 35.8; த.வெ.க.,வுக்கு 35.3; தி.மு.க.,வுக்கு 20.5 சதவீதம் கிடைத்துள்ளன. இந்த சர்வே, தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 75 )

எம். ஆர்
மே 12, 2025 23:18

சர்வே முடிவால் யாருக்கு நன்மையோ இல்லையோ மக்களுக்கு நன்மை விடியாத திருட்டு கும்பலும் அடிமை ஜி க்கள் கும்பலும் இதை பார்த்து மக்களுக்கு தேர்தல் அருகில் வர வர பல நன்மைகளை செய்வானுகள்


Oviya Vijay
மே 12, 2025 21:55

இதுநாள் வரையில் இவரை நடிகர் விஜய் என்று மட்டும் அழைத்து விட்டு அரசியல் களத்தில் களமிறங்கியதும் அவரை ஜோசப் விஜய் என்று அவர் சார்ந்திருக்கும் மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக சொல்லிக் கொண்டிருக்கும் கேடுகெட்ட மனிதர்களை இங்கே காண்பதில் மிகவும் வருத்தம் எனக்கு. ஒரு ஹிந்துவாக இருந்து கொண்டு ஹிந்துக்களில் கறைபடிந்த சங்கிகள் என்றழைக்கப்படும் ஒரு சிறு பகுதியினரை தொடர்ந்து எதிர்ப்பதில் எந்நாளும் பெருமை கொள்கிறேன். பெரும்பாலான ஹிந்துக்கள் அதிலும் தமிழகத்தில் இருக்கும் ஹிந்துக்கள் அடுத்த மதத்தினவரை சக மனிதர்களாக போற்றும் மாண்பு கொண்டவர்கள். பிஜேபியில் இருக்கும் ஒரு சில கழிசடைகள் மட்டுமே எப்போதும் மாற்று மதத்தவரை சீண்டிக் கொண்டே இருப்பர். அவர்களை அசிங்கப்படுத்த வேண்டுமென்றால் சங்கிகள் என்று சொன்னாலே போதுமானது. அவர்களை அண்ட விடாமல் செய்தாலே போதும். தமிழகம் அமைதியாக நடைபோடும்... அதனால் தான் சொல்கிறேன்... 2026 தேர்தலில் பிஜேபி நீரில் மூழ்கிப் போகும் என்று...


பேசும் தமிழன்
மே 12, 2025 21:38

ஆமாம்..... அவருக்கு 240 ஓட்டுக்கள்..... சீ சீ சீ .... 240 இடங்கள் கிடைக்கும்


Anguchamy K
மே 12, 2025 21:18

டுபாக்கூர் சர்வே. பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும். தனியார் சர்வே என்றால் யார். அதை சொல்லுங்க முதலில். டெபாசிட் கிடைக்குமா?


Krishnan Javantheeswaran
மே 12, 2025 20:42

இந்த சர்வே சரியாக இருக்கும். தமஷாக மக்கள் மாற்றம் தேடுகிறார்கள்.


Prem
மே 12, 2025 20:06

பொய் பொய் யாரும் போட மாட்டார்கள். இது என்ன த்ரிஷாவா?


Balasubramanian
மே 12, 2025 18:59

பிரசாந்த் கிஷோர் வாங்கிய துட்டு க்கு இதைக் கூட செய்ய மாட்டாரா?


Arul Narayanan
மே 12, 2025 18:27

சர்வே ஏற்பாடு செய்ததே விஜய் தானே.


Sarashan
மே 12, 2025 17:42

சர்வே எடுத்தது மும்பை தனியார் கம்பெனியாம். பீகார்காரருக்கு சொந்தமான அல்லது வேண்டப்பட்ட கம்பெனியா இருக்கப்போகுது. 2026 தேர்தல முன்னிருத்தி, இதுமாதிரி பல சர்வேக்கள் இன்னும் வெளிவரும். நாம ஓட்டுப்போட்டவங்க ஜெயிச்சிட்டாப் போதும்னு, இறக்கை கட்டிப் பறக்கிற நடுநிலை மக்கள் ஜாக்கிரதையா இருக்கணும். அவங்கள குறிவச்சுத்தான் இதெல்லாம் வருது.


Nandhakumar R
மே 12, 2025 17:31

காம்ப்ளெடெல்லி false சர்வே


முக்கிய வீடியோ