உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஓட்டு திருட்டு விவகாரம்: பின்னணியில் தமிழக பிரபலம்!

ஓட்டு திருட்டு விவகாரம்: பின்னணியில் தமிழக பிரபலம்!

புதுடில்லி:காங்கிரஸ் தலைவர் ராகுல், ஓட்டு திருட்டு என்ற விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு, பீஹாரில் போராட்டம் நடத்தி வருகிறார். அங்கு, மக்கள் பிரச்னைகள் குறித்து பிரசாரம் செய்யாமல், இந்த ஓட்டு திருட்டு விவகாரம்தான் முக்கியம் என முடிவு செய்து, அதையே முக்கிய பிரசாரமாக்கிவிட்டார் ராகுல்.திடீரென இந்த ஓட்டு திருட்டு விவகாரம் எப்படி முக்கியத்துவம் பெற்றது? ராகுலுக்கு இதைச் சொன்னது யார்? இதற்கெல்லாம் காரணம் ஒரு தமிழர். அவர் பிரவீன் சக்ரவர்த்தி; தமிழகத்தைச் சேர்ந்தவர். காங்கிரசின் அகில இந்திய தொழில் வல்லுநர்கள் பிரிவு தலைவர் மற்றும் கட்சியின் தரவுப் பகுப்பாய்வு துறை தலைவராகவும் உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qojaide8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கட்சியின் முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை தருவது, கட்சியின் தேர்தல் முடிவுகளை வைத்து, அதற்கான, 'டேட்டா'க்களை ஆராய்ந்து அறிக்கை அளிப்பது என, பல வேலைகள் இவர் தலைமையில் காங்கிரசில் நடைபெறுகின்றன. ராஜஸ்தானின் பிலானி யில் படித்த சக்ரவர்த்தி, 'ஐ.பி.எம்., மைக்ரோசாப்ட்' உட்பட பல நிறுவனங்களில் பணியாற்றியவர். ஆரம்பத்தில், ராகுலுக்கு ஆலோசனை அளித்துக் கொண்டிருந்த இவர், 2017ல் முழுநேர அரசியல்வாதியாக காங்கிரசில் சேர்ந்தார்.ஓட்டு திருட்டு என்ற வாக்கியத்தை முதலில் கூறியது இவர்தான். இதைச் சொன்ன உடனேயே, ராகுல் துள்ளிக் குதித்து, 'அருமை... இதுதான் நம் பிரசாரத்தின் முக்கிய அம்சம்' என, அப்போதே கூறிவிட்டாராம்.'தமிழகத்தில் மாப்பிள்ளையும், மகனும் 30,000 கோடி ரூபாய்க்கு மேல் சேர்த்து விட்டு, என்ன செய்வது என தெரியாமல் திண்டாடுகின்றனர்' என, தி.மு.க., அமைச்சர் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன் கூறினார். 'இந்த பணம் குறித்த டேட்டாவை, அந்த அமைச்சருக்கு கூறியது, பிரவீன் சக்ரவர்த்தி' என, தி.மு.க.,வில் ஒரு பேச்சு உள்ளது. இவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள ராகுல், சக்ரவர்த்தியை, 'டேட்டா மேன்' என அழைக்கிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ManiMurugan Murugan
ஆக 31, 2025 23:49

ManiMurugan Murugan ஓட்டு ) ட் டு க்கு பேர் போன க் கட்சி அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி என்பது அனைவருக்கும் தெரியும் ராகுல் பிஹார்மக்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறார் போல


NAGARAJAN
ஆக 31, 2025 21:37

திருடர்களை திருடர்கள் என்று தானே சொல்லனும். . அதை யார் சொன்னா என்ன. .


subramanian
ஆக 31, 2025 16:38

ராகுல் ஒரு பைத்தியம். அந்த லூஸுக்கு என்ன சொன்னா பிடிக்கும், அதை பிரவீன் லூஸு சொல்லுது


P.sivakumar
ஆக 31, 2025 12:18

ரிசல்ட் வந்த பிறகு சக்ரவர்த்தி நிலைமை?


பேசும் தமிழன்
ஆக 31, 2025 08:07

திருட்டு.... ஊழல் என்றாலே... நாட்டு மக்கள் அனைவருக்கும் நினைவுக்கு வருவது.... புள்ளி வைத்த இண்டி கூட்டணி ஆட்கள் தான்..... அதிலும் குறிப்பாக கான் கிராஸ் கட்சியை சேர்ந்த பப்பு குடும்பம் தான்.


naranam
ஆக 31, 2025 04:23

மெத்தப் படித்த மேதாவியாக இருந்து தான் என்ன பயன்? கேடு கெட்ட ராகுலுடன் சேர்ந்துகொண்டு நாட்டைக் கொள்ளையடிக்கும் கும்பலுக்கு உதவியாக இருக்கிறார்..இதுவரை ராகுல் அவிழ்த்துவிட்ட பொய் மூட்டைகளின் காரண கர்த்தாவாக இருக்கும் திரு சக்கரவர்த்தி என்பவர் ஒரு தமிழர் என்பதெல்லாம் ஒரு பெருமையா..? வெட்கக் கேடு!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை