உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தானம் பெறும் விபரங்கள் பதியாத ரத்த வங்கிகளுக்கு எச்சரிக்கை

தானம் பெறும் விபரங்கள் பதியாத ரத்த வங்கிகளுக்கு எச்சரிக்கை

தானமாக பெறும் ரத்தம் குறித்த விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றாத, ரத்த வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.தமிழகம் முழுதும், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் ரத்த வங்கிகள் செயல்படுகின்றன. நோயாளிகள், சிக்கலான சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தேவையான, பாதுகாப்பான ரத்தம் வழங்கும் பணியை அரசு மருத்துவ கல்லுாரி, தலைமை அரசு மருத்துவமனைகளில் செயல்படும் ரத்த வங்கிகள், தனியார் ரத்த வங்கிகள் மேற்கொள்கின்றன.ஒரு குறிப்பிட்ட அளவு ரத்த அலகுகள் இருப்பில் வைக்கப்படுகின்றன. தேவைக்கு ஏற்ப தன்னார்வலர்கள் பலரும் முன்வந்து ரத்ததானம் வழங்கி வருகின்றனர்.ரத்தத்தின் தரத்தை உறுதி செய்யவும், சிகிச்சை நேரங்களில் ரத்தம் பெறுவதில் தாமதத்தை தவிர்க்கவும் https://eraktkosh.mohfw.gov.in என்ற இணையதளத்தில் ரத்தம் எவ்வளவு கையிருப்பு என்ற விபரத்தை, தனியார் ரத்த வங்கிகள் உடனுக்குடன் பதிவேற்ற வேண்டும் என, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணிகள் துறை அதிகாரிகள் கூறுகையில், 'தானமாக பெறப்படும் ரத்த விபரங்களை உடனடியாக பதிவேற்றாமல், சில ரத்த வங்கிகள் அலட்சியமாக செயல்பட்டு வருவதால், சுகாதாரத்துறை வாயிலாக மீண்டும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.'அறிவிப்புகளை தொடர்ந்து, தகவல்களை பதிவேற்றாத ரத்த வங்கிகளின் விபரங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமம் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தால் ரத்து செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது' என்றனர். -- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ