உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இதற்குகூட நமக்கு சுதந்திரமில்லையே: சீமான் கட்சியினர் புலம்பல்

இதற்குகூட நமக்கு சுதந்திரமில்லையே: சீமான் கட்சியினர் புலம்பல்

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை தொடர்பாக, நீதி கேட்டு துண்டறிக்கை கொடுக்க முயன்ற நாம் தமிழர் கட்சியினருக்கு, போலீசார் அனுமதி மறுத்தனர்.சென்னை புத்தகக் காட்சியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற புத்தக வெளியிட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதில், வேறு பாடல் ஒலிபரப்பப்பட்டது. மேலும், புத்தகக் கண்காட்சி அரங்கில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி பாதை குறித்து, சீமான் பேசியதும் சர்ச்சையானது. இதற்கு, நிகழ்ச்சியை நடத்தும், 'பபாசி' நிர்வாகிகள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pg4v1nmp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறையில், ஞானசேகரன் மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டவர் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில், 'சார் சார்' என ஞானசேகரன் யாரிடமோ பேசினார் என குறிப்பிட்டு இருந்ததால், மற்றொரு நபருக்கும் வழக்கில் தொடர்பு இருக்கலாம் என, பல்வேறு தரப்பினர் சந்தேகித்து வருகின்றனர்.இதனால், சட்டசபை முதல் பல்வேறு இடங்களில், எதிர்க்கட்சிகள், 'யார் அந்த சார்?' என 'பேட்ஜ்' அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை தொடர்பாக நீதிகேட்டு, புத்தகக் கண்காட்சிக்கு வருவோரிடம், நேற்று துண்டறிக்கை அளிக்க, நாம் தமிழர் கட்சியினர் முடிவு செய்தனர்.இதற்காக, போலீசாரிடம் முறைப்படி அனுமதி கோரினர். ஆனால், அதற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதனால், நீதிகேட்டு துண்டறிக்கை வழங்கும் பரப்புரையை கடைசி நேரத்தில் ரத்து செய்வதாக, நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர்.இது குறித்து அக்கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் உள்ளது என, கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் மாநிலத் தலைவராக இருந்த பாலகிருஷ்ணன் வெளிப்படையாக கூறினார். இதற்கு, தி.மு.க.,வின் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட தலைவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். கம்யூ., கட்சியை விமர்சித்து, முரசொலி இதழில் கட்டுரை வெளியிட்டனர்.ஆனால், அப்படியொரு சூழல் தான் தற்போது தமிழகத்தில் நிலவுகிறது. அரசுக்கு எதிராக எந்தவிதமான போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ எதிர்க்கட்சிகள் சார்பில் நடத்தக் கூடாது என்று அறிவிக்கப்படாத செயல்பாட்டை வைத்துள்ளனர். ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சியினருக்கும்கூட இதே நிலை தான்.அண்ணா பல்கலை மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக, நாம் தமிழர் கட்சி சார்பில் புத்தக் கண்காட்சி நடைபெறும் இடத்துக்கு முன், துண்டறிக்கை கொடுக்க திட்டமிட்டோம். இதற்கான அனுமதியையும் போலீசார் மறுத்து விட்டனர். துண்டறிக்கை வழங்க கூட தமிழகத்தில் சுதந்திரமில்லாத ஒரு நிலை உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 12, 2025 23:10

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.. அதிமுக, பாஜக, பாமக, நாதக, தேமுதிக, தமாக, தவெக, புதக, தமமுக மற்றும் லெட்டர் பேட் கட்சிகள் திமுகவையும், திமுக கூட்டணியையும், ஆட்சியையும் எதிர்க்கிறார்கள்.. ஆனால் கூட்டாக போராட்டமோ, கூட்டாக கண்டன அறிக்கையோ, கூட்டாக பேட்டியோ கொடுப்பதில்லை காரணமும் தெரியவில்லை...இவர்களை கூட்டு சேராமல் எது தடுக்கிறது....தனிகட்சியாக 100 பேர் போராடுவதை விட கூட்டாக 500 பேர் போராடினால் அது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் மாறாக நவகிரகங்களை போல ஒன்றை ஒன்று பாராமல் திமுகவை எதிர்த்தால் அது திமுகவிற்கு தானே பலனளிக்கும்.. இதை ஏன் யாரும் யோசிக்க மறுக்கிறார்கள்.. 2026ரும் திமுக தான் சந்தேகமில்லை...!!!


Karthik
ஜன 12, 2025 09:32

2026 ம் ஆட்சியும் நமதே என்கிறார் முதல்வர். தற்போதைய அவர்களின் ஆட்சியின் " ட்ரெய்லர் " எப்படி இருக்கிறதென்று பார்த்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களே சிந்திப்பீர்.. மீண்டும் அவர்களே ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் " மெயின் பிக்சர் " எப்படி இருக்கும் என்று.


நிக்கோல்தாம்சன்
ஜன 12, 2025 04:17

கவர்னர் கூட பேச முடியாத மாநிலமாக நமது மாநிலம் ஆகிவிட்டதை நிரூபித்து உள்ளனர் திமுகவினர் 2026 அதிக தொலைவு இல்லை என்பதனை அவர்கள் மறந்து விட்டனர் , மறக்கவில்லை என்றால் திமுக தலைமை கவர்னரிடம் மன்னிப்பு கேட்டு நீங்க உஙக மனசுல உள்ளதை தைரியமா பேசுங்க என்று கூறுவார் , ஆனால் நடப்பது சட்டை பேண்டை கிழித்து ஜட்டியோடு நடக்கவைப்போம் என்று சூளுரைக்கின்றனர் ,சுதந்திரமாக பேசவே விடாத இருண்ட காலத்தை நம்மக்கு காட்டுகின்றனர் இன்றைய ஆளும்கட்சியினர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை