உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முதல்வர் கவனிக்கும் போலீஸ் துறையில் என்னென்ன சீர்திருத்தங்கள் வேண்டும்?

முதல்வர் கவனிக்கும் போலீஸ் துறையில் என்னென்ன சீர்திருத்தங்கள் வேண்டும்?

மதுரை: முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கும் போலீஸ் துறையில், என்னென்ன சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என, நம் நாளிதழ் செய்தியை அடிப்படையாக கொண்டு, 25 கோரிக்கைகளை, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு செந்தில் குமார், ஒட்டு மொத்த போலீசார் சார்பில் கடிதம் அனுப்பிஉள்ளார்.அதில், ஒரே கல்வித்தகுதி அடிப்படையில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், எங்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் உள்ளன. ஆரம்பக்கட்ட, 'பே கமிஷனில்' எங்களுக்கு இணையாக சம்பளம் வாங்கியவர்கள் இன்று அதிகமாக பெறுகின்றனர்.ஊதியம், பண பலன்கள் விகிதங்களை களைய வேண்டும். பணிச்சுமையாலும், ஓய்வின்றி பணியாற்றுவதாலும், குடும்பத்தின் மீது அக்கறை செலுத்த முடியாததாலும், 2020ல் 337 பேர், 2021ல் 414 பேர், 2022ல் 283 பேர், 2023ல் 313 பேர், 2024ல் 254 பேர் இறந்துள்ளனர்.ஓய்வு கிடைக்காத காரணத்தால், பல போலீசார் மக்களிடம் கடினமாக நடந்து கொள்கின்றனர். அவசர காலத்தில், 24 மணி நேரமும் பணிபுரிய தயாராக உள்ளோம். அதே சமயம், மற்ற காலங்களில் ஏ,பி,சி என்று பிரித்து, ஒரு நாளைக்கு, 8:00 மணி நேரம் மட்டும் பணி வழங்க வேண்டும்.வேலைப்பளுவை குறைக்காமல் மன அமைதிக்கான பயிற்சி கொடுப்பதால், மேலும் மன உளைச்சல் தான் ஏற்படும்.எனவே, 8:00 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். 24 மணி நேரம் தொடர்ச்சியாக பணிபுரியும் போலீசாருக்கு ஒரு நாள் ஓய்வு வழங்க வேண்டும்.அரசால் அறிவிக்கப்பட்ட வார ஓய்வு, போலீஸ் பற்றாக்குறையால் முறையாக வழங்கப்படவில்லை. இதை முழுமையாக அமல்படுத்த வேண்டும். போலீசாரின் எண்ணிக்கை மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இல்லை. ஆள் பற்றாக்குறையால் ரோந்து செல்ல முடியவில்லை.பல ஸ்டேஷன்களில் பகலில் பணிபுரிந்த போலீசார், இரவு பணியையும் சேர்த்து பார்க்க வேண்டியுள்ளது. இதனால், மன உளைச்சல் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கிறது. இறப்பும் நிகழ்கிறது. கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்.ஏதாவது ஒரு பிரச்னை என்றால், சட்டம் - ஒழுங்கு பிரிவு போலீசாரே செல்கின்றனர். சிறப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு உடனே வர காலதாமதமாகிறது. இதை தவிர்க்க மற்ற மாநிலங்களை போல, ஆயுதப்படை, சட்டம் - ஒழுங்கு காவல் என, இரு பிரிவுகள் மட்டுமே இருக்குமாறு செய்ய வேண்டும்.ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் கூடுதலாக நான்கு சக்கர ரோந்து வாகனம் வழங்க வேண்டும். இது, கைதிகளை அழைத்துச்செல்ல உதவும். ரோந்து செல்வதற்கும் பயன்படும்.சிறையில் இருந்து காணொளி மூலம் அனைத்து கைதிகளையும் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதால், வழிக்காவலில் கைதிகளுடன் மோதல் ஏற்படும் சூழலை தவிர்க்கலாம்.அரசு விடுமுறை நாளில் பணிபுரியும் போலீசாருக்கு, இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். பாதுகாப்பு பணியின் போது நல்ல உணவு வழங்க வேண்டும்.ஆண்டுதோறும் நடக்கும் குருபூஜை, கோவில் திருவிழாக்களில் பாதுகாப்பு அளிக்க செல்லும் போது, அங்கு நிரந்தர தங்கும் விடுதிகள், ஓய்வறைகள் அமைக்க வேண்டும்.சிறப்பு எஸ்.ஐ.,யில் இருந்து எஸ்.ஐ.,யாக பதவி வழங்க மாநில அளவில் ஒரே மாதிரியான 'சீனியாரிட்டியை' பின்பற்ற வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுபோன்று, 25 கோரிக்கைகளை துறை சார்ந்து அவர் கேட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Padmasridharan
ஜன 13, 2025 13:57

தொப்பை வந்தாலோ, லஞ்சம் வாங்கினாலோ உடனே வேலையை விட்டு தூக்க வேண்டும்.


Padmasridharan
ஜன 13, 2025 13:57

தொப்பை வந்தாலோ, லஞ்சம் வாங்கினாலோ உடனே வேலையை விட்டு தூக்க வேண்டும்.


ManiK
ஜன 12, 2025 20:02

முதல் சீர்திருத்தம்- முதல்வரை மாற்ற வேண்டும். அதுவே அனைத்து நல்லதுக்கும் வழிவகுக்கும்.


SP
ஜன 12, 2025 13:06

தனி அதிகாரம் உள்ள அமைப்பாக மாற்ற வேண்டும். அரசியல்வாதிகளுக்கு கீழ்பணியாற்றும் நிலைமை இருக்கக்கூடாது.


ஆரூர் ரங்
ஜன 12, 2025 10:43

ஆளும் கட்சி ஆட்கள் குற்றம் புரியாமல் இருந்தாலே போலீஸ் நிம்மதியாக இருப்பர். முதல்வரே சரியில்லை எனும் போது...


அப்பாவி
ஜன 12, 2025 10:41

ஒப்ணெ இண்ணுதான் தேவை. தகைமை.போலீஸ் அதிகாரி முதுகெலும்பை நிமிர்த்தி நடக்கணும். முதுகெலும்பு நிமிர்ந்தால் மொத்த உடம்பும் நிமிரும்.


N Sasikumar Yadhav
ஜன 12, 2025 05:22

முதலில் கோபாலபுர விசுவாசத்தை கைவிட்டு அனைவருக்கும் பொதுவான துறையாக மாற்றினால்தான் தமிழக காவல்துறைக்கு நல்லபெயர் வரும்


புதிய வீடியோ