| ADDED : பிப் 09, 2025 02:26 AM
பத்திரிகைகளில் புத்தக மதிப்புரைகள் வெளியாகின்றன. என்ன புத்தகங்களை படித்தால் நல்லது என்பது குறித்து இந்த மதிப்புரைகள் பரிந்துரை செய்கின்றன. சமீபத்தில், பிரதமர் மோடி ஒரு புத்தகத்தை பரிந்துரை செய்தார்; அது, இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qz46kahc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜனாதிபதி உரைக்கு பதிலளித்து, பார்லிமென்டில் பிரதமர் உரையாற்றும்போது, 'இந்த புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும்' என கூறினார். அத்துடன் அந்த புத்தகத்தில் உள்ள, சில விஷயங்கள் குறித்து கோடிட்டுக் காட்டி, காங்கிரசை கடுப்பாக்கினார்.'தேசிய பாதுகாப்பில் நேரு என்ன விளையாட்டுகள் விளையாடினார் என்பதையும் அந்தப் புத்தகம் வெளிப்படுத்துகிறது' என்று மோடி கூறினார்.மோடிக்கு இந்த புத்தகம் குறித்து கூறியது யார்? இந்திய அமைச்சரவையில், இரண்டு முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரிகள் உள்ளனர். ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்; அடுத்தவர், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி. இவர்கள்தான் மோடிக்கு இந்த புத்தகம் தொடர்பான விபரங்களை கூறினராம். மோடியின் உரைக்குப் பின், ஆன்லைன் வர்த்தக தளமான அமேசானில் இந்த புத்தகம் அதிகமாக விற்பனையாகிறதாம்.