உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மோடியை பாராட்டியது ஏன்?: சசி தரூர் விளக்கம்!

மோடியை பாராட்டியது ஏன்?: சசி தரூர் விளக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: அமெரிக்காவின் வாஷிங்டனில், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியதை, காங்., மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.,யுமான சசி தரூர் சமீபத்தில் பாராட்டி பேசினார்.இது குறித்து, சசி தரூர் நேற்று அளித்த விளக்கம்:பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம், நம் நாட்டு மக்களுக்கு சில நன்மைகளை ஏற்படுத்தி உள்ளது. டிரம்ப் பதவியேற்ற பின், அவரை சந்தித்த நான்காவது உலக தலைவர் பிரதமர் மோடி என்பது, உலக அரங்கில் நம் நாட்டுக்குள்ள முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதே நேரத்தில், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நம் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தை, அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி ஏன் எழுப்பவில்லை என்பதும் வியப்பாக உள்ளது. ஒருவேளை, இந்த விவகாரத்தை டிரம்பிடம் மோடி தனியாக எழுப்பினாரா என்றும் தெரியவில்லை. என்னை பொறுத்தவரை, பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம், நம் நாட்டுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதனாலேயே அவரை பாராட்டினேன். நான் அனைத்து நேரங்களிலும், காங்கிரஸ்காரராக பேச முடியாது. நான், கட்சியின் செய்தித் தொடர்பாளரும் அல்ல. இந்த குறிப்பிட்ட விவகாரத்தில், நாட்டின் நலனுக்காக மட்டுமே பேசுகிறேன். அரசு பொறுப்பில் உள்ள ஒருவர், காங்கிரசைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, வேறு எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு செயலை சரியாக செய்தால், அதை ஒப்புக்கொண்டு பாராட்ட வேண்டும். தவறு செய்தால் விமர்சிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
பிப் 17, 2025 22:13

காங்கிரஸ் என்கிற ஒரு ஆட்டு மந்தையிலிருந்து சசி தரூர் என்கிற ஒரு ஆடு மந்தையை விட்டு நழுவ பார்க்கிறது.


Karthik
பிப் 17, 2025 21:50

உண்மையைச் சொன்னால் யாராயினும் ஒப்புக்கொள்வதே மாண்பு / நல்ல பண்பு. ஆனால், பாவம் இந்த இத்தாலி வகையறாவுக்கு அது என்னவென்றே தெரியாது. எல்லாம் நம் தலைவிதி.


பேசும் தமிழன்
பிப் 17, 2025 07:47

ஏண்டா... நீயே சொல்ற சட்டவிரோத்தமாக குடியேறிய என்று.... அமெரிக்கா என்ன கான் கிராஸ் கட்சி போல் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக வந்தவர்களை ஆதரிக்க ???


Balasubramanian
பிப் 17, 2025 05:19

ஆமாம் மிகச் சிறந்த கோட்பாடு! அது போல பாராளுமன்றத்தில் கூட அரசு மக்கள் நலனுக்காக சிறந்த பணி செய்ய முற்படும் போது எதிர் கட்சிகள் முட்டுக் கட்டை போடக் கூடாது !