உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வீடுகளில் சோலார் மின் உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டணம் ரத்தாகுமா?

வீடுகளில் சோலார் மின் உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டணம் ரத்தாகுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி:மின் தேவையை கருத்தில் கொண்டு, வீட்டு கூரைகளில் சூரிய தகடுகள் அமைத்து, மின் உற்பத்தி செய்ய, மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகின்றன. இதனால், பல்வேறு தரப்பினர் கூரைகளில் சோலார் தகடுகள் அமைத்து மின் உற்பத்தி செய்து வருகின்றனர்.கூரையில் சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்பவர்களுக்கு, மின்துறை சார்பில் நெட்வொர்க் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதனால், உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 'எம்பவர் இந்தியா' நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி ஆராய்ச்சி நடுவத்தின் கவுரவ செயலர் சங்கர் கூறியதாவது:சூரிய சக்தி வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்து, மின் வாரியத்திற்கு 'கிரிட்' வாயிலாக அனுப்பும் போது, அந்த மின்சாரத்தை எடுப்பதற்கான கட்டணமே நெட்வொர்க் கட்டணம் எனப்படுகிறது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய நீதிமன்றமும் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.தவறு என்று நீதிமன்றமே கூறியும், நெட்வொர்க் கட்டணம் வசூலிப்பதால், மின் நுகர்வோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தங்கள் கூடுதல் உற்பத்திக்கான கட்டமைப்பை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர். வீட்டின் பயன்பாடு போக, மீதமுள்ள மின்சாரத்தை மின் வாரியத்திற்கு அனுப்பும் போது அதற்கான கட்டணத்தையும் தருவதில்லை.எனவே, வீட்டு கூரை மின் உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். வீட்டின் பயன்பாடு போக, மீதமுள்ள மின்சாரம் மின் வாரியத்திற்கு வழங்கப்பட்டால், அந்த மின்சாரத்திற்கான கட்டணத்தையும் வழங்க மின்துறை முன்வர வேண்டும். முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Paramasivam
ஏப் 05, 2025 17:57

நான் 2.1 கிலோவாட் சூரிய மின்தகடுகள் 2024 ஏப்ரல் மாதத்தில் நிறுவினேன். தமிழக மின்வாரியம் ஜுன் மாதத்தில் இருந்துதான் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தனர். நெட்வொர்க் கட்டணமாக ரூபாய் 289 கட்டணம் செலுத்தி வருகிறேன். அதாவது 3 கிலோ வாட் என்று கணக்கீடு செய்து 922 யூனிட்டுக்கு பணம் ரூபாய் 289 வசூலிக்கிறார்கள். உற்பத்தி ஆவதோ 600 யூனிட் தான். ஆனால் பிக்ஃசட் யூனிட்டாக 922 க்கு நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கிறார்கள். இது பகல் கொள்ளை.


சிட்டுக்குருவி
ஏப் 05, 2025 06:18

அரசு மின்சாரம் வெளியில் காற்றாலைகளில் இருந்து அதிக விலைக்கு வாங்குகின்றது .அந்த மின்சாரத்திற்கு காற்றாலைகள் நெட்ஒர்க் கட்டணம் செலுத்துவது இல்லை .ஏன் தனிநபர் கொடுக்கும் மின்சாரத்திற்கு பணமும் கொடுப்பதில்லை ,மாற்றாக மின்சாரம் கொடுப்பவர்களே நெட்ஒர்க் கட்டணம் கட்டவேண்டும் .இலவசமாக மின்சாரம் கொடுப்பவர்களே பணமும் கொடுக்கவேண்டும் .என்ன லாஜிக் என்று தெரியவில்லை. மாற்றாக நெட் மீட்டரிங் சிஸ்டம் கொண்டுவந்தால் பெருமளவு மக்கள் சோலார் மின்தகடு பொருத்தி மிகுதியாக மின்னுற்பத்தி செய்து அரசுக்கு விநியோகம் செய்தால் அரசு குறைந்தவிலை கொடுக்கலாம் .அவர்களுக்கு இலவச மின்சாரமோடு சிரிது பணவரவும் கிடைக்கும். அரசு சிந்திக்கவேண்டும் .


Venkatesan M Bakthavatchalu Chettiar
ஏப் 05, 2025 06:14

சோலார் தகடுகளை மின்வாரியமே இலவசமாக வழங்க வேண்டும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 05, 2025 04:54

2024 தேர்தலுக்கு முன்னர் இந்த திட்டத்தின் கீழ் எனது வீட்டில் சோலார் மின்உற்பத்தி செய்ய விண்ணப்பித்தேன். தேர்தல் முடிந்த பின்னர் இரண்டு மாதம் கழித்து தமிழக மின் துறைக்கு ரூபாய் 4,500 கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்பினார்கள். போங்கடா நீங்களும் உங்கள் திட்டமும் என்று விட்டுவிட்டேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை