உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க.,வில் மீண்டும் சசிகலா, தினகரன்?

அ.தி.மு.க.,வில் மீண்டும் சசிகலா, தினகரன்?

- நமது நிருபர் - அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்தவர்கள், நீக்கப்பட்டவர்களை, மீண்டும் இணைப்பதற்கான ரகசிய பேச்சு, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில் தொடங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pojrsron&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க.,வை பலப்படுத்த கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் பலர், 'இடைத்தேர்தலுக்கு முன், அ.தி.மு.க.,வை பலப்படுத்த வேண்டும்; அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், சசிகலா போன்றோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்' என, பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர். 'அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும். மீண்டும் பழனிசாமி முதல்வராக வேண்டும்' என வலியுறுத்தி, தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகி மகேந்திரன் தீக்குளித்து மரணம் அடைந்த பின், பழனிசாமி மனமும் மாறியுள்ளது. பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க, மூத்த தலைவர் ஒருவரின் வாயிலாக ரகசிய பேச்சு தொடங்கப்பட்டு உள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள சசிகலா வீட்டில், சசிகலாவின் சகோதரர் திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்த் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர். அ.தி.மு.க.,வில் இணைந்தால், சசிகலாவுக்கு அவைத்தலைவர் பதவி வழங்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அ.தி.மு.க.,வில் இணைய வேண்டும் என்றால், அவருக்கு துணை பொதுச்செயலர், ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். இதை தொடர்ந்து, அ.தி.மு.க.,வில் ஆறு துணை பொதுச்செயலர் பதவி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க., நிர்வாகிகளில் 35 வயதுக்கு கீழ் யாரும் இல்லை. எனவே, இளைஞர்களை கட்சியில் சேர்க்க, வியூகம் வகுக்கப்படுகிறது. இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்றாலே, கட்சியினர் த.வெ.க., செல்வது தடுக்கப்படும். எனவே, அ.தி.மு.க., வெற்றி பெற, இணைப்பு அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Mani . V
ஜூன் 23, 2026 05:31

RIP


Mani . V
ஜூன் 23, 2026 05:14

ம், சீக்கிரம் ஆக வேண்டிய வேலைகளைப் பாருங்கப்பா. அடக்கம் செய்து முடித்த பின், குளித்து விட்டு அடுத்த வேலைக்குப் போக வேண்டாமா?


Vijay D Ratnam
ஜூன் 22, 2026 22:47

சின்னம்மா அவர்களே, எடப்பாடி பழனிசாமியை பார்த்தால், அதிமுகவின் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர், கொங்கு நாட்டு சிங்கம், எங்கள் தங்கம், குடிமராமத்து நாயகன், அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சியை அமைப்போம்னு சவுண்ட் உட்டுக்கிட்டு டமால்னு கால்ல உழுந்துடுங்க. ஜெயிக்குதோ இல்லியோ கட்சி 100 சதவிகிதம் எடப்பாடியார் கண்ட்ரோல்ல பூடிச்சி. கிரவுண்ட் ரியாலிட்டியை புரிஞ்சிக்குங்க. 75 வயசு ஆவுது, இந்த வயசான காலத்துல கட்சி ஆரம்பிச்சி என்ன சாதிக்கப்போறீங்க. ஐம்பது வருஷமா அரசியல் பண்ணிக்கிட்டு வக்கணையா உட்கார்ந்துகிட்டு சவடால் உட்டுக்கிட்டு இருந்த ராமதாஸே தடம் தெரியாம போய்ட்டாரு. பிளாஸ்டு பிளாஸ்ட்ன்னு காத்திக்கிட்டு விசிலடிச்சிகிட்டு ஒங்க பேரன் பேத்தி வயசுல இருக்குற பொடிசுங்கலாம் அரசியலுக்கு வந்துட்டாய்ங்க. எதுக்குடா ஒட்டுப்போடீங்கன்னு கேட்ட எங்க தலைவர் செம்ம டான்ஸ் ஆடுவாருங்குறான். டாடி மம்மி வீட்டில் இல்லே, தடை போட யாருமில்லலேன்னு உங்களால இப்போ டான்ஸ் ஆட முடியுமா ? அதனால எடப்பாடியா பார்த்தா ரெப்பிட்டுன்னு நினைச்சுகிட்டு டேபிளுக்கு அடியில ஊர்ந்து போயாவது காலை கெட்டியா புடிச்சிக்கோங்க. அரசியல்ல மான ரோஷம் பார்த்தா நடுதெருலதான் நிக்கோணும்.


kr
ஜூன் 22, 2026 21:53

Sasikala got exposed badly in the last assembly elections, when her party in alliance with original mango party could not even save deposit in any one seat. She cannot claim to be a political heavyweight anymore. As regards Dinakaran, don't think he will give up his party and join ADMK. He may join the party only if he is made GS, which current GS will not agree.


RRY
ஜூன் 22, 2026 21:37

இனி சுமார் 25 காலம் தா வெ க தான்


M Ramachandran
ஜூன் 22, 2026 20:39

இடுப்பில அல்ல கால் இடுக்கிலேயே. நிச்சயம் பழி வாங்குவார். பழனியின் ஆணவம் ஒழிக்க பட வேண்டும். செய்ய நன்றி கொன்றவர். சுய நலக்காரர். பாலி ஹெர்த்து கொண்டவர். யாரையும் முன்னேற விட மாட்டார். சகுனி வேலை கச்சிதமா செய்வார். நமிக்கையற்ற நம்ப முடியாத ஆள்.


M Ramachandran
ஜூன் 22, 2026 20:11

நடுவில் இருக்கும் இவர் ஏன் மூக்கில் விறல் வைத்து மோந்து பார்த்துக்கிட்டிருக்கார்.


Anantharaman Srinivasan
ஜூன் 22, 2026 18:55

சசிகலாவை சேர்த்தால் வேலியில் போற ஓணனை இடுப்பில் சொறுகிக்கொண்டது போல. தினகரனை சேர்த்தால் பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதை. மொத்தத்தில் அதிமுக தேற வாய்ப்பில்லை ..


Lakshumanan Aruna
ஜூன் 22, 2026 16:01

காலம் கடந்துவிட்டர்து துரோகபாடி. இதையெல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன்பே எடுத்துருக்கவேண்டிய முடிவு! இனி எந்த ஆத்தா வந்தாலும் அதிமுக அவ்வளவுதான்


Santhakumar Srinivasalu
ஜூன் 22, 2026 19:49

கண் கேட்ட பின்னர் சூரியன் நமஸ்காரமா?


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 22, 2026 13:14

யாரை? சசிகலாவை உள்ளே சேர்க்கப்போகிறீர்களா? சபாஷ். ஒரு ஊழல் குற்றவாளி அவைத்தலைவராக இருந்தால் எப்படி இருக்கும் கட்சி?. அதோடு ஆட்சியையும் கொடுத்துட்டா தமிழ்நாட்டை வழிச்சு எடுத்துட்டு போய்டுவா. திருட்டு கழகங்கள் திருடர்களையே மீண்டும் மீண்டும் தேடுகின்றனர். ஆனாலும், அதிமுக இனி தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத கட்சி. மக்கள் சுத்தமாக நம்பமாட்டார்கள்.


Lakshumanan Aruna
ஜூன் 22, 2026 17:22

ஆமா இப்போது கட்சியில் இருப்ப்பவர்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் அனைவரும் கக்கனும் காமராஜரும்!? உனக்கு உதாரணம்கூட ஒழுங்காக சொல்லத்தெரியவில்லை


Santhakumar Srinivasalu
ஜூன் 22, 2026 19:52

அந்த அம்மாவ எதுக்கு சேர்த்து அதிமுக சுமக்கனும்?


புதிய வீடியோ