உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜோதிடரை பரிகார பூஜைக்கு அழைத்து ஆபாச படம் பிடித்து பணம் பறித்த பெண்

ஜோதிடரை பரிகார பூஜைக்கு அழைத்து ஆபாச படம் பிடித்து பணம் பறித்த பெண்

பாலக்காடு: கேரளாவில், வீட்டில் பரிகார பூஜை நடத்த வரும்படி அழைத்த பெண்ணை நம்பிச் சென்ற ஜோதிடரை அடித்து உதைத்து நிர்வாணமாக்கி, 20 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜோதிடர், வீடுகளுக்கு சென்று பரிகார பூஜை செய்வது வழக்கம். அவரை, மைமூனா, 44, என்ற பெண், சமீபத்தில் நேரில் சந்தித்தார். கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும், வீட்டில் ஏராளமான பிரச்னைகளை சந்தித்து வருவதாகவும் கூறிய அவர், தன் வீட்டுக்கு வந்து சிறப்பு பரிகார பூஜை நடத்தி தரும்படி கேட்டார்.அந்த பெண் கூறியதை நம்பி அவர் குறிப்பிட்ட முகவரிக்கு, ஜோதிடர் மறுநாள் சென்றார். இருவர் வந்து, ஜோதிடரை, பிரதீப், 37, என்பவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு இருந்தவர்கள், ஜோதிடரை அடித்து உதைத்து, அறைக்குள் பூட்டி நிர்வாணமாக்கினர். அப்போது, அங்கு மைமூனா நிர்வாணமாக வந்தார். அவரை, ஜோதிடருடன் சேர்த்து ஆபாசமாக அந்த கும்பல் வீடியோ எடுத்தனர்.இதன்பின், ஜோதிடரிடம் இருந்து 5 சவரன் நகை, மொபைல் போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு, கூடுதலாக 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டினர். பணத்தை தராவிட்டால் சமூக வலைதளத்தில் நிர்வாண வீடியோவை பதிவிடுவதாகவும், ஜோதிடரின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தனர்.

மிரட்டல் கும்பல்

அப்போதுதான், மைமூனா போட்ட 'ஹனி டிராப்' சதியில், சிக்கியதை ஜோதிடர் உணர்ந்தார். அப்போது எதிர்பாராவிதமாக போலீஸ் வடிவில் அவருக்கு விடியல் கிடைத்தது.ஏற்கனவே ஒரு வழக்கில் தப்பியோடிய குற்றவாளியை மொபைல் போன் சிக்னல் வாயிலாக தேடிய சித்துார் போலீசார், ஜோதிடர் அடைத்து வைக்கப்பட்ட வீட்டுக்கு வந்தனர். போலீசைப் பார்த்ததும், மிரட்டல் கும்பல் சிதறி ஓடியது. இதை பயன்படுத்தி, ஜோதிடர் தப்பித்து வந்து, கொளிஞ்சம்பாறா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.இதற்கிடையே, போதையில் இருந்த மைமூனா சாலையில் மயங்கி விழுந்து கிடந்தார். பொதுமக்கள் உதவியுடன் அவரையும், ஸ்ரீஜேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.மலப்புரத்தின் மஞ்செரியை சேர்ந்த மைமூனா, தமிழகத்தின் கூடலுாரில் வசிக்கிறார். இருவரிடமும் நடத்திய விசாரணையில், இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கும்பல், இதேபோன்று 'ஹனி டிராப்' வகையில் கைவரிசை காட்டி, வருவது தெரியவந்தது.தலைமறைவாக இருக்கும் அவர்களை போலீஸ் தேடி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

RRR
மார் 19, 2025 16:01

அனைத்து விதமான சமூகவிரோத செயல்களுக்கும் நம்பிக்கையான ஒரே மார்க்கம்... முகலாய மூர்க்க மார்க்கம்...


NIyayanidhi
மார் 18, 2025 08:32

"கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? கதை மாதிரி ஜோதிடர் லட்டையும் சுவைத்துவிட்டு சேதாரமில்லாமல் தப்பி விட்டாரே???


Vijaya Koothan
மார் 16, 2025 06:54

மலப்புரம் சொல்லவா வேணும் .மைமூனா kaivarisai.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 15, 2025 23:56

மூர்க்க மார்க்கத்தில் அனைவருமே இப்படித்தானா ?? விதிவிலக்குகள் எதுவுமே இருக்காதா ??


Karthik
மார் 15, 2025 23:34

காலத்துக்கு ஏற்ப பொழக்க தெரிஞ்ச பொண்ணு போல. ஆனாலும் மாட்டிக்கிச்சு.. இனிமே மாட்டிக்க வாய்ப்பேயில்லை..


நிக்கோல்தாம்சன்
மார் 15, 2025 21:06

மைமூனா பெயர் ஒன்றே போதும் தரம் எளிதில் விளங்கும் , ஜொள்ளு மக்களே உஷாரு


கோயம்புத்தூர் குசும்பு
மார் 15, 2025 18:03

கவர் ஸ்டோரி கவர் பண்ண போறேன்னு சொல்லி இந்த மாதிரி honey trapல் சிக்காமல் இருந்தால் சரி..


அசோகன்
மார் 15, 2025 17:07

திராவிட மாடல் ஐ எல்லோரும் follow பன்றாங்களா..... சபாஷ்


சுரேஷ் சிங்
மார் 15, 2025 14:27

மேக்கப் போட்டா ரன்யா ராவ் மாதிரி இருப்பாரு


Senthoora
மார் 15, 2025 14:08

பொதுவா பரிகாரம் செய்யும் ஜோதிடர்தான் நிர்வாணம் ஆகி வீடியோ எடுத்து மிரட்டி பணம், உடல் சுகம் கேட்பார். நல்லதுதான் நடந்திருக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை