உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பால் வாங்க பெண்கள் வருவதே இல்லை; அமைச்சருக்கு கள நிலவரமே தெரியவில்லை: பால் முகவர்கள் கொதிப்பு

பால் வாங்க பெண்கள் வருவதே இல்லை; அமைச்சருக்கு கள நிலவரமே தெரியவில்லை: பால் முகவர்கள் கொதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அதிகாலை பால் வாங்க வரும் பெண்களுக்கு, 'கல்ப்ரிட்ஸ்' தொல்லை உள்ளது என, அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதற்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கத் தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழக சட்டசபையில், பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், 'அதிகாலை பெண்கள் பால் வாங்க சென்றால், 'கல்ப்ரிட்ஸ்' வருகின்றனர். அவர்கள் முகம் தெரியாததால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதனால், பால் பூத்களில், பால் விற்பனை நேரம் காலை 6:30 மணி முதல் 7:30 மணியாக மாற்றப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.ஆவின் பால் விநியோக முறை குறித்து, அமைச்சர் தெரிந்து பேசுகிறாரா, இல்லையா என்பது தெரியவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, காவல்துறை செயலிழந்து உள்ளது என்ற ரீதியில் பேசி உள்ளார். இதை, முதல்வர் மற்றும் எதிர்க்கட்சியினர் கண்டு கொள்ளாமல், மவுனமாக கடந்து சென்றது, அதிர்ச்சி அளிக்கிறது.மாதாந்திர அட்டை வாயிலாக, ஆவின் பால் விநியோகம், சென்னையில் மட்டுமல்லாது, பெரும்பாலான மாவட்டங்களில், அதிகாலையிலேயே நிறைவடைந்துவிடும். நுகர்வோர் நேரடியாக பூத்துகளுக்கு சென்று வாங்காமல், வீடுகளுக்கு டெலிவரி செய்யும் பால் முகவர்களிடம், வாங்கிக் கொள்கின்றனர்.தற்போது, பெண்கள் அதிகாலை நேரத்தில், ஆவின் பூத்திற்கு பால் வாங்க வருவது அபூர்வமானது. இதை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறியாமல் இருப்பது வியப்பளிக்கிறது. எனவே, சரியான தகவல்களை ஆராய்ந்து, அமைச்சர் பேச வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sivagiri
மார் 23, 2025 22:49

என்னமோ இப்போ வெள்ளையும் சொள்ளையுமா , பெரிய கார்ல போயிட்டு வர்றவாய்ங்க , பழைய ஹிஸ்டரி ஜாக்ரபி - எடுத்து பார்த்தா , தெரியும் , படு கேவலமான ஆட்கள்தான் , இப்போ . . . .


Yes your honor
மார் 23, 2025 18:37

இந்த அமைச்சருக்கு மட்டுமல்ல தமிழ் நாட்டின் எந்த அமைச்சருக்கும் எதுவும் தெரியாது. ஏதாவது தெரிந்திருந்தால் தான் தமிழகம் உருப்பட்டிருக்குமே. துரைமுருகன் கூறும் பதில்களை கவனித்துப் பாருங்கள். நேரடியான எந்தப் பதிலும் இருக்காது, வெறும் கேலியும் கிண்டலும் தான் இருக்கும். இதன் அர்த்தம் அவருக்கு பதில் சொல்லத் தெரியாது என்பதே ஆகும். என்று கழியும் இந்த விடியாத ஆட்சி என்று இன்று ஒவ்வொரு தமிழனும் ஏங்கிக்கொண்டுள்ளான். 2026 சீக்கிரம் வந்தால் பரவாயில்லை.


ManiK
மார் 23, 2025 18:23

ஏன்ஐயா மந்திரி விடிகாலையில் எழுந்து 5.30 இல்ல 6 மணிக்கு காபி குடிப்பதில் இருக்கும் ஒரே நிம்மதியையும் கெடுப்பது தான் திராவிட மாடலா??


Venkatasubramanian krishnamurthy
மார் 23, 2025 14:07

தமிழகத்தில் தினமும் படுகொலைகள் நடக்கிறது. வீட்டிற்கு வெளியே நின்று பேசும்போது, டீகடைக்கு செல்லும்போது, ஜாமீனில் வந்து கையெழுத்து போடச் செல்லும் போது என கணக்கு வழக்கில்லாமல் நடக்கிறது. பகலிலும், இரவிலும் பாதுகாப்பில்லாத நிலைமை இருக்கிறது. இப்பொழுது ராஜகண்ணப்பன் கூற்றுப்படி அதிகாலையிலும் பாதுகாப்பில்லாத நிலையில் திராவிட மாடல் அரசு என்பதாகிறது.


Padmasridharan
மார் 23, 2025 12:52

"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, காவல்துறை செயலிழந்து உள்ளது". நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மைதான். ஆண் காவலர்களுடன் பெண் காவலர்கள் ஜீப் ஓட்டியும் பார்த்ததில்லை, இரவு ரோந்துக்கும் வருவதுமில்லை. மொதல்ல தங்களுடன் வேலை பார்க்கும் பெண்களுக்கு மரியாதையையும், culprits இடமிருந்து பாதுகாக்கவும் தெரியணும். எல்லா குற்றங்களையும் மறைத்து பணமாற்றம் நடக்கிறது. குற்றவாளிகளை அதிகமாக்கி உள்ளனர்.


ஆரூர் ரங்
மார் 23, 2025 12:48

ஆண்களுக்காவது பாதுகாப்பு உள்ளதா? எதையும் நம்புவதற்கு இல்லை.


கண்ணன்
மார் 23, 2025 12:46

தமிழகச் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை பற்றி அவர் பேசியுள்ளார்- அம்மட்டே, மற்றபடி எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி


nv
மார் 23, 2025 10:56

அமைச்சருக்கு TASMAC கடை நிலவரம் தெரியும் ஆனால் ஆவின் நிலவரம் தெரிந்திருக்க சாத்தியமில்லை!! சரியாக தான் சொல்லி இருக்கிறார் இந்த ஆள்


தேவதாஸ் புனே
மார் 23, 2025 10:33

அவர் தமிழ் நாட்டில் தான் வாழ்கிறாரா.... என்று கேள்வி கேட்க்கிறீர்களா.....? பணம் எண்ணுவதற்க்கே நேரம் போதவில்லை..... வாய் மூடி மௌனம் காத்தால் முதல்வர் கேள்வி கேட்ப்பார்..... அதனால் நாமும் ஏதாவது பேசி வைப்போம்.... என்று பேசுகின்றனர்...... உள்ளேன் ஐயா...... மக்களாகிய நாமும் அவர்களுக்கு ஓட்டை விற்று விட்டு சிவனே என்று இருக்கிறோம்......


अप्पावी
மார் 23, 2025 10:05

சரிதான். ஆண்கள் பால் வாங்க வரும் நேரம் பாத்து சமூக விரோதிகள் வுட்டுக்குள்ளே நுழைஞ்சிடறாங்க.


சமீபத்திய செய்தி