மழையால் பணிகள் தாமதம்; தள்ளிப்போகிறதா த.வெ.க., மாநாடு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை என்ற இடத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு, வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. மழையையும் பொருட்படுத்தாமல், வரும் 24ம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டு செய்து வருகின்றனர்.கட்சி தலைவர் விஜய், மாநாட்டு மேடையை சென்றடையும் வகையில் தார்சாலை, மேடையின் நடுவே பார்வையாளர்களை பார்த்து கையசைக்கும் வகையில் விஜய் நடந்து வர வசதியாக ரேம்ப் அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.