ஆற்றில் குளித்த மாணவர் தண்ணீரில் மூழ்கி சாவு வில்லியனுார் அருகே சோகம்
வில்லியனுார், : வில்லியனுார் அடுத்த கணுவாப்பேட்டை, புதுநகர் முதல் பிளாட்டை சேர்ந்தவர் முகமது அனிபா; வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மகன் முகமது நவுபில், 17; வில்லியனுார் சங்கர்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் மூன்று பேருடன் சேந்தநத்தம் மங்களபுரி நகர் பகுதி சங்கராபரணி ஆற்றில் காலை 11:30 மணியளவில் குளித்தனர். நீச்சல் தெரியாத முகமது நவுபில் ஆற்றில் மூழ்கினார். சக நண்பர்கள் தேடியும் கிடைக்காததால், அவரது தாய்க்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரவித்தனர்.இதனிடையே அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆற்றில் மூழ்கிய முகமது நவுபில் உடலை மீட்டு கரை சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.