உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குளவி துரத்தி தடுமாறி விழுந்த முதியவர் பலி

குளவி துரத்தி தடுமாறி விழுந்த முதியவர் பலி

பாகூர், : கிருமாம்பாக்கம் அடுத்த இந்திரா நகரை சேர்ந்தவர் முத்தையன்; 74. இந்நிலையில், கடந்த 13ம் தேதி மாலை ஈச்சங்காட்டிற்கு செல்வதற்காக கிருமாம்பாக்கம் சுடுகாட்டு வழியாக சென்றுள்ளார்.அப்போது சாலையோர மரத்தில் கூடு கட்டிருந்த குளவிகள் முத்தையனை துரத்தி சென்று கொட்டியுள்ளது. அங்கிருந்து ஓடிய முத்தையன், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கிருமாம்பக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய முத்தையனுக்கு, மீண்டும் உடல்நிலை மோசமானது.இதையடுத்து அவரை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை